E-readers types in Tamil

சரி ஒரு வழியாக மின் புத்தகங்களை E-Reader-ல் படிக்கலாம் என முடிவு எடுத்துவிட்டீர்கள். ஒருவேளை இன்னும் இல்லையென்றால் இந்த இணைப்பை பார்க்கவும்.

தற்போது ஒருசில நிறுவனங்கள் மட்டுமே தரமான eBook Reader-களை தயாரித்து தருகின்றன. அவற்றில் குறிப்பிடாதக்கவை.

  • Kobo
  • Nook
  • Amazon Kindle

ஒரு E-Book Reader வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை:

  • நமக்கு எத்தனை மொழிகள் படிக்க தெரியும்?
  • ஆங்கில புத்தகங்கள் படிக்க தெரியுமா?
  • மாதம் எத்தனை புத்தகங்கள் படிப்போம்.
  • நாம் படிக்கும் புத்தகங்கள் எந்த வகையில் அதிகம் உள்ளது (Epub or Mobi or PDF or AZW)
  • நம்முடைய தொகை (Budjaact) எவ்வளவு ?

இந்த கேள்விகளுக்கான பதில்களை தெரிந்த பின்புதான் ஒரு E-Reader தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு தமிழ் மொழியில் மட்டும்தான் படிக்க வரும் என்றால் சற்றே கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இதைப்பற்றி விரிவான தகவல்கள் இந்த பதிவில் உள்ளது.

Kobo eReader

Kobo Inc. கனடாவை சார்ந்த  நிறுவனமா ஆகும், இது 2010 முதல் E-Reader- களை தயாரித்து வருகின்றது. இன்று இதில் பல வகைகள் (Kobo eReader Models) விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தியாவில் எளிதில் கிடைக்கும் வகை (Model) Kobo Aura – eBook Reader (4 GB)- 6 Inch – Buy/View

Kobo Aura 2

இந்த Kobo E-Reader-கள் அமேசான் கிண்டில் கருவிக்கு ஒரு சரியான மாற்று ஆகும்.

ஒரு கிண்டில் கருவிக்கும் kobo கருவிக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு :

Amazon Kindle உதவியுடன் Epub கோப்பு நூல்களை படிக்க முடியாது. (இணையத்தில் அதிகம் கிடைக்கும் மின்னூலவடிவம் இதுதான்.)

ஆனால் இந்த Kobo கருவியை கொண்டு 10-க்கும் அதிகமான மின்நூல் வடிவங்களை படிக்க இயலும்: (AZW கோப்புகளை தவிர.)

  • Books: EPUB, EPUB3 (Note: Kobo Original and Kobo Wi Fi does not support EPUB3), PDF, FlePub and MOBI
  • Documents: PDF
  • Images: JPEG, GIF, PNG, BMP, and TIFF
  • Text: TXT, HTML, and RTF
  • Comic Books: CBZ and CBR

மின்நூல் வகைகள் பற்றி விரிவாக பார்க்க (What is Ebook Formats?). . .

Kobo தனக்கென ஒரு இணைய நூல்கள் தரவிரக்கும் செய்யும் தளத்தை கொண்டுள்ளது. (Online kobo Book Store) இங்கிருந்தும் நூல்களை இலவசம் மற்றும் பணம் கொடுத்து பதிவிறக்கம் செய்யலாம்.

இங்கு தமிழ் நூல்கள் கிடைக்காது. தமிழ் நூல்கள் படிக்க விருப்பம் இருந்தால், நீங்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

அமேசான் புத்தக தளத்தில் உள்ள நூல்களை இந்த கருவியில் படிக்க இயலாது.

இதன் விலை: 33,000 ரூபாய் (Buy From Amazon)

(என்னை பொருத்தவரை இவ்வளவு பணம் கொடுத்து வாங்குவது, நடுத்தர குடும்பத்தவருக்கு பலனில்லை)

Nook E-Reader

இது ஒரு அமரிக்கா நிறுவனம். 2009 முதல் E-reader-களை விற்பனை செய்கின்றனர். இன்று இதில் பல மாடல்கள் கிடைக்கின்றன. இதன் தயரிப்பு நிறுவனம் Barnes & Noble ஆகும். 

Barnes & Noble NOOK GlowLight 3 eReader 6″ model -8GB (Buy From Amazon)

Screen & Resolution

  • A 6″ high-resolution 300-dpi screen with built-in glare- scratch- and
  • fingerprint-resistant lens provides a paper-like reading experience.

Battery Life

  • Read for up to 50 days on a single charge.

Buttons

  • Physical page-turning buttons.

Supported File Types

  • Text: ePub, PDF, Adobe DRM ePub and PDF.
    Graphic: JPG, GIF, PNG, BMP.


இதை பற்றிய முழுமையான தொழில்நுட்ப தகவல்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும் – Barnes & Noble NOOK GlowLight 3

இந்த கருவியும் அமேசான் மற்றும் Kobo போன்று தனக்கென ஒரு இணைய நூலகத்தை கொண்டுள்ளது (Nook Online eBook Store). இங்கு உள்ள புத்தகங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே. (தமிழில் புத்தகங்கள் இங்கு கிடைக்காது).

நீங்கள் தமிழ் மின்நூல்களை இணையதில் பதிவிறக்கம் செய்து இதில் படிக்கலாம்.

இந்தியாவில் இதன் விலை: 29,000 ரூபாய் (Buy Nook Glow Light 3)

Amazon Kindle E-reader’s

அமேசான் நிறுவனம் ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும், 2007 முதல் இவர்கள் E-reader-களை தயாரித்து வருகின்றனர்.

இன்று பல மடல்களில் இவை கிடைக்கின்றன. மேலும் அமேசான், மின்புத்தகங்களுக்கு பெரிய இணையதளத்தை கொண்டுள்ளது. இங்கே ஆங்கிலம் மற்றும் அனைத்து இந்திய மொழிகளிலும் மின்புத்தகங்கள் கிடைக்கின்றன.

தமிழ் மொழியில் 1,000 -க்கும் அதிகமான புத்தகங்கள் இங்கு உள்ளது. பல புத்தகங்கள் இலவசமாகவும் கிடைக்கின்றது.

குறிப்பு: அமேசான் கிண்டில் கருவிகளில்  ePub கோப்புகளை  படிக்க முடியாது. இவை AZW,PDF வகை கோப்புகளை மட்டுமே படிக்க இயலும்.

தெளிவாக சொல்லவேண்டும் என்றால், அமேசான் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த புத்தகங்களை மட்டுமே இதில் எளிதாக படிக்க முடியும்.

உங்கள் புத்தகம் MicroSoft Document (.docx) வடிவில் இருந்தால் அல்லது (. txt) வடிவில் இருந்தால் அவற்றை Kindle மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி உங்கள் கிண்டிலில் படிக்க முடியும். (இதைப்பற்றி விரிவாக இங்கு பார்க்க)

ஒரு வேலை உங்கள் புத்தகம் ePub வடிவில் இருந்தால் அவற்றை சில கணினி மென்பொருட்கள் உதவியுடன் கிண்டில் கருவிகளில் படிக்க ஏதுவாக மாற்றிக்கொள்ளலாம்.

ஆனால் கவைகொள்ள தவ்வை இல்லை. உங்களுக்கு தமிழில் படிக்க 1,000`-க்கும் அதிகமான மின்னூல்கள் அமேசான் தளத்திலேயே கிடைக்கின்றது.

அமேசான் தளத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் இலவசமாக* படிப்பது பற்றிய தகவல்களுக்கு (Kindle UnLimited) பார்க்கவும்.

விலை :

அமேசான் கிண்டில் கருவிகள் 7,500 முதல் பல வகைகளில் கிடைக்கின்றது.

அமேசான் கிண்டில் கருவிகளின் வகைகள் & சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக படிக்க..  Amazon Kindle E-readers

Related Post

சங்க இலக்கிய நூல்கள் பட்டியல்

Posted by - September 24, 2020 0
சங்க இலக்கியம் சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட…

புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது ?

Posted by - September 10, 2020 0
புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது ? உங்கள் சொந்த விருப்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்றால்,  Fiction or Non-fiction புத்தகத்தை எடுக்க விரும்பலாம். இதபோன்ற ஆயிர கணக்கான புத்தகங்கள்…

புத்தகங்களைப் படிப்பதன் 10 நன்மைகள்

Posted by - September 10, 2020 0
புத்தகங்களைப் படிப்பதன் நன்மைகள் என்ன? கடைசியாக நீங்கள் ஒரு புத்தகத்தைப் படித்தது அல்லது கணிசமான பத்திரிகை கட்டுரைகள் படித்தது எப்போது? தவறாமல் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தாத எண்ணற்ற…
what is ebook - TamileBooks.org

மின்னூல்கள் (ebook) என்றால் என்ன?

Posted by - August 14, 2020 0
மின்புத்தகம் என்றால் என்ன ? நேரடியாக சொன்னால், மின் புத்தகம் (eBook) என்பது ஒரு மின்சாதன கருவிகள் படிக்கக்கூடிய புத்தகங்கள் எனலாம்.  ஆனால் உண்மையான பதில் சரியாக…

Kindle Paperwhite (10th Gen) பற்றி தெரிந்துகொள்வோம்

Posted by - September 7, 2020 0
https://images-na.ssl-images-amazon.com/images/I/A12gT5ZhhzS.mp4 கிண்டில் பேப்பர் ஒயிட் (Kindle PaperWhite) சிறப்பம்சங்கள் எடை & அளவு இதற்கு முன்பு விற்பனைக்கு வந்தன மற்ற  கிண்டில்  பேப்பர் ஒயிட்  கருவிகளை விட  இது…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்