சுஜாதா எழுத்தாளர்

சுஜாதா

சுஜாதா (sujatha) (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்

சுஜாதா வாழ்க்கைக் குறிப்பு

சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில், அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள், அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, ‘தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்’ அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.

இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சுஜாதா புனைபெயர்

இவருடைய, “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.

Sujatha - சுஜாதா 
சுஜாதா

சுஜாதா ஆக்கங்கள்

சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

திரைப்படமாக்கப்பட்ட சுஜாதா கதைகள்

  • அனிதா இளம் மனைவி
  • காயத்ரி
  • கரையெல்லாம் செண்பகப்பூ
  • ப்ரியா
  • விக்ரம்
  • வானம் வசப்படும்
  • ஆனந்த தாண்டவம்
  • சைத்தான்(திரைப்படம்)

சுஜாதா பணியாற்றிய திரைப்படங்கள்

  • ரோஜா
  • இந்தியன்
  • ஆய்த எழுத்து
  • அந்நியன்
  • பாய்ஸ்
  • முதல்வன்
  • கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
  • ஜீன்ஸ்
  • உயிரே
  • விசில்
  • கன்னத்தில் முத்தமிட்டால்
  • சிவாஜி த பாஸ்
  • எந்திரன்
  • வரலாறு
  • செல்லமே

சுஜாதா மறைவு

உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29. பெப்ரவரி 2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.

நன்றி விக்கிப்பீடியா

Related Post

இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள்

இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள்

Posted by - பிப்ரவரி 12, 2021 0
இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் வள்ளலார் இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள், வள்ளலார் பதிப்பித்த நூல்கள், அவர் நூல்களுக்கான பிறர் உரைகள், வள்ளலார் தொடர்பான நூல்களை இணைய…
புலவர் குழந்தை

புலவர் குழந்தை வாழ்க்கை வரலாறு

Posted by - அக்டோபர் 1, 2020 0
புலவர் குழந்தை வாழ்க்கை வரலாறு இராவண காவியம் என்னும் ஒப்பிலாத தனித் தமிழ்ப் பெருங் காவியத்தை இயற்றித் தமிழ் மக்களிடையே புத்துணர்ச்சி யினையும், இனவெழுச்சியினையும், தன்மானப் பண்பினையும்…
ச.வே. சுப்பிரமணியன்

அறிஞர் ச.வே. சுப்பிரமணியன்

Posted by - மார்ச் 11, 2021 0
அறிஞர் ச.வே. சுப்பிரமணியன் ச. வே. சுப்பிரமணியன் (திசம்பர் 31, 1929 – சனவரி 12, 2017), தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத்…
பாரதியார் வரலாறு

சுப்பிரமணிய பாரதியார் வரலாறு

Posted by - அக்டோபர் 26, 2020 0
பாரதியார் வரலாறு | இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். 
பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Posted by - அக்டோபர் 16, 2020 0
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின்…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்