அறிஞர் ச.வே. சுப்பிரமணியன்
ச. வே. சுப்பிரமணியன் (திசம்பர் 31, 1929 – சனவரி 12, 2017), தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய தமிழ் நிகண்டுகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
ச. வே. சுப்பிரமணியன்
ச.வே.சு. என்ற மூன்று எழுத்துப்பெயர் தமிழ் உலகு நன்கு அறிந்த பெயர். நெல்லை மாவட்டத்தில் குற்றாலத்திற்குக் கிழக்கே 19 கிலோமீட்டரில் தமிழர் என்ற ஒன்றைத் தோற்றுவித்து, அங்கு வாழ்ந்து வருகிறார். பள்ளிக் கல்வி அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் அமைந்தது. இடைநிலைக் கல்வி திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்ச் சிறப்பு வகுப்பு (B.A. Hons) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1950-53) அமைந்தது: முனைவர் பட்டம் கேரளப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியன் அவர்கள் நெறிகாட்டுதலிலும் மேற்பார்வையிலும் நடைபெற்றது.
தமிழ்த் துறைத் தலைவராகி, அங்கிருந்து உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை அலுவல் ஆட்சியராகவும், இயக்குநராகவும் அவர் கல்விப் பயணம் அமைந்தது.
1987இல் பணிநிறைவான பின்பு, தமிழூரில் உலகத் தமிழ்க்கல்வி இயக்கம் என்ற அமைப்பின் மதிப்புறு இயக்குநராகத் தற்போது பணியாற்றி வருகிறார்.
தமிழில் இதுவரை 154 நூல்களையும், ஆங்கிலத்தில் 5 நூல்களையும், மலையாளத்தில் சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டத்தையும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
இவர் வழிகாட்டுதலில், கேரளம், மதுரை காமராசர், சென்னை , பெங்களூர் ஆகிய பல்கலைக் கழகங்களின் வழி 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
சிலப்பதிகாரம் பற்றி 34 நூல்களையும், தமிழ் இலக்கண நூல்களாக 9 நூல்களையும், தொல்காப்பியம் பற்றி 30 நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது தொல்காப்பியம் தெளிவுரை 11ஆவது பதிப்பாக 2010இல் வெளிவந்துள்ளது. தொல்காப்பியத்தை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்.
வாழ்க்கை அடிப்படையான மனிதம், மனமும் உயிரும், உடல் உள்ளம் உயிர், மனம் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். பதிப்பு நூல்களாக 100க்கு மேல் வெளிவந்துள்ளன.
வழங்கப்பெற்ற விருதுகள்
செந்தமிழ்ச் செம்மல் விருது, இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி விருது, சாகித்திய அகாதெமி வழங்கிய பாஷா சம்மான் விருது, தமிழாகரர் விருது, நல் அறிஞர் விருது, சைவநன்மணி விருது, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை விருது, ஔவைத்தமிழ் அருளாளர் விருது, தமிழியக்கச் செம்மல் விருது, ராஜா அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை விருது (ரூ. 1 இலட்சம் பரிசு), தொல்காப்பியச் செம்மல் விருது, சென்னை கம்பன் விருது, தமிழக அரசின் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ரூ. 1 இலட்சம் பரிசு, கலைஞர் விருது ரூ. 1 இலட்சம் பரிசு, தருமபுர ஆதீனம் செந்தமிழ்க் கலாநிதி விருது முதலியன வழங்கப் பெற்றவா.
ச. வே. சு இயற்றிய நூல்கள்
- இலக்கிய நினைவுகள் 1964
- சிலம்பின் சில பரல்கள் 1972
- இலக்கியக் கனவுகள் 1972
- மாந்தர் சிறப்பு 1974
- ஒன்று நன்று 1976
- அடியார்க்கு நல்லார் உரைத்திறன் 1976
- இலக்கிய உணர்வுகள் 1978
- கம்பன் கற்பனை 1978
- காப்பியப் புனைதிறன் 1979
- கம்பனும் உலகியல் அறிவும் 1981
- கம்பன் இலக்கிய உத்திகள் 1982
- கம்பன் கவித்திறன் 2004
- இளங்கோவின் இலக்கிய உத்திகள் 1984
- இலக்கிய வகையும் வடிவும் 1984
- தமிழ் இலக்கிய வரலாறு 1999
- சிலப்பதிகாரம் மூலம் 2001
- சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் 2001
- சிலம்பும் சிந்தாமணியும் 1977
- திராவிட மொழி இலக்கியங்கள் 1984
- இளங்கோவும் கம்பனும் 1986
- தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 1998
- தமிழில் விடுகதைகள் 1975
- தமிழில் விடுகதைக் களஞ்சியம் 2003
- காந்தி கண்ட மனிதன் 1969
- பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் 1982
- நல்வாழ்க்கை 1992
- மனிதம் 1995
- மனமும் உயிரும் 1996
- உடல் உள்ளம் உயிர் 2004
- தமிழர் வாழ்வில் தாவரம் 1993
- கூவநூல் 1980
- சிலப்பதிகாரம் தெளிவுரை 1998
- சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் 1993
- தொல்காப்பியம் தெளிவுரை 1998
- சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 2001
- திருக்குறள் நயவுரை 2001
- திருமுருகாற்றுப்படை தெளிவுரை 2002
- சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை 2002
- கானல்வரி உரை 2002
- பத்துப்பாட்டு உரை 2002
- இலக்கணத்தொகை எழுத்து 1967
- இலக்கணத்தொகை சொல் 1970
- இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் 1978
- வீரசோழியம் குறிப்புரையுடன் 1977
- தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் 1978
- குவலயானந்தம் சந்திரலோகம் 1979
- பிரபந்த தீபம் 1980
- தொல்காப்பியப் பதிப்புகள் 1992
- மொழிக்கட்டுரைகள் 1974
- சங்க இலக்கியம் 2006
- மெய்யப்பன் தமிழகராதி 2006
- தமிழ் இலக்கண நூல்கள் 2007
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 2007
- பன்னிரு திருமுறைகள் 2007
- Descriptive Grammar of Chilappathikaram 1975
- Grammar of Akananuru 1972
- Studies in Tamil Language and Literature 1973
- Studies in Tamilology 1982
- Tolkappiyam in English 2004
- சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் (மலையாளம்) 1966