வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 – நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள்.

1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர்.

எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது.

இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

வல்லிக்கண்ணன் படைப்புகள்

வல்லிக்கண்ணன் படைப்புகள் இதோ…

01.

அடியுங்கள் சாவுமணி

02.

அத்தை மகள்

03.

அமர வேதனை

04.

அருமையான துணை

05.

அவள் ஒரு எக்ஸ்ட்ரா

06.

அறிவின் கேள்வி

07.

அன்னக்கிளி

08.

ஆண் சிங்கம்

09.

ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)

10.

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

11.

இருட்டு ராஜா

12.

இருளடைந்த பங்களா

13.

ஈட்டிமுனை

14.

ஊர்வலம் போன பெரியமனுஷி

15.

எப்படி உருப்படும்?

16.

எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும்

17.

எழுத்து சி.சு.செல்லப்பா

18.

எழுத்துலக நட்சத்திரம்

19.

ஒய்யாரி

20.

ஒரு வீட்டின் கதை

21.

ஓடிப்போனவள் கதை

22.

கடலில் நடந்தது (கார்க்கி கட்டுரைகள்) (மொழிபெயர்ப்பு)

23.

கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா?

24.

கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா?

25.

கல்யாணி முதலிய கதைகள்

26.

கார்க்கி கட்டுரைகள் (மொழிபெயர்ப்பு)

27.

காலத்தின் குரல்

28.

குங்சாலாடு

29.

குமாரி செல்வா

30.

கேட்பாரில்லை

31.

கொடு கல்தா

32.

கோயில்களை மூடுங்கள்

33.

சகுந்தலா

34.

சரஸ்வதி காலம்

35.

சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)

36.

சின்னஞ்சிறு பெண்

37.

சினிமாவில் கடவுள்கள்

38.

சுதந்திரப் பறவைகள்

39.

செவ்வானம்

40.

டால்ஸ்டாய் கதைகள் (மொழிபெயர்ப்பு)

41.

தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள்

42.

தமிழில் சிறு பத்திரிகைகள்

43.

தாத்தாவும் பேரனும்(மொழிபெயர்ப்பு)

44.

தீபம் யுகம்

45.

துணிந்தவன்

46.

தோழி நல்ல தோழிதான்

47.

நம் நேரு

48.

நல்ல மனைவியை அடைவது எப்படி?

49.

நாசகாரக்கும்பல்

50.

நாட்டியக்காரி

51.

நிலைபெற்ற நினைவுகள் முதல் பாகம்

52.

நிலைபெற்ற நினைவுகள் இரண்டாம் பாகம்

53.

நினைவுச்சரம்

54.

நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு)

55.

பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை

56.

பாரதிதாசன் உவமைநயம் (கட்டுரை)

57.

புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்)

58.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

59.

புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)

60.

மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்

61.

மத்தாப்பு சுந்தரி

62.

மலையருவி கவிதைகள்

63.

மன்னிக்கத் தெரியாதவர்

64.

மனிதர்கள்

65.

முத்தம்

66.

முத்துக்குளிப்பு

67.

ராகுல் சாங்கிருத்யாயன் (மொழிபெயர்ப்பு)

68.

ராதை சிரித்தாள்

69.

வசந்தம் மலர்ந்தது

70.

வல்லிக்கண்ணன் கட்டுரைகள்

71.

வல்லிக்கண்ணன் கடிதங்கள்

72.

வல்லிக்கண்ணன் கதைகள்-1

73.

வல்லிக்கண்ணன் கதைகள்-2

74.

வல்லிக்கண்ணன் கதைகள்-3

75.

வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்

76.

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்

77.

வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்

78.

வாசகர்கள் விமர்சகர்கள்

79.

வாழ விரும்பியவன்

80.

வாழ்க்கைச் சுவடுகள்

81.

வாழ்க்கைச் சுவடுகள்

82.

விடியுமா

83.

விடிவெள்ளி

84.

விவாகரத்து தேவைதானா?

85.

விஜயலஷ்மி பண்டிட் (வரலாறு)

86.

வீடும் வெளியும்

Related Post

அறிஞர் ச.வே. சுப்பிரமணியன்

Posted by - March 11, 2021 0
அறிஞர் ச.வே. சுப்பிரமணியன் ச. வே. சுப்பிரமணியன் (திசம்பர் 31, 1929 – சனவரி 12, 2017), தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத்…

புலவர் குழந்தை வாழ்க்கை வரலாறு

Posted by - October 1, 2020 0
புலவர் குழந்தை வாழ்க்கை வரலாறு இராவண காவியம் என்னும் ஒப்பிலாத தனித் தமிழ்ப் பெருங் காவியத்தை இயற்றித் தமிழ் மக்களிடையே புத்துணர்ச்சி யினையும், இனவெழுச்சியினையும், தன்மானப் பண்பினையும்…

இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள்

Posted by - February 12, 2021 0
இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் வள்ளலார் இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள், வள்ளலார் பதிப்பித்த நூல்கள், அவர் நூல்களுக்கான பிறர் உரைகள், வள்ளலார் தொடர்பான நூல்களை இணைய…

தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

Posted by - July 12, 2021 0
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு இந்த பதிவில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு (Erode Venkatappa Ramasamy) சுருக்கமாக வருடம் வாரியாக பார்க்கலாம். பெரியார் பிறப்பு…

சுப்பிரமணிய பாரதியார் வரலாறு

Posted by - October 26, 2020 0
பாரதியார் வரலாறு | இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்