பழந்தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்ற உதவுவோம்

தமிழ் ஆர்வலர்களுக்கு என்னுடைய அன்பு வணக்கம்,

இந்த தளத்தை நான் தூங்குவதற்கு முக்கியமான காரணம்  என்னவென்றால் பல இணைய தள பக்கங்களில் தமிழில் உள்ள  சங்ககால நூல்கள்,  சங்கம் மருவிய கால நூல்கள் ஆகியவை பெரும்பாலும் PDF வடிவில் மட்டுமே கிடைக்கின்றன, அவையும் மிகுதியாக ஒரு புத்தகத்தை நேரடியாகப் புகைப்படம் எடுத்து  அவற்றை PDF வடிவாக மாற்றி உள்ளார்கள்.

புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது

இந்தத் தளத்தில் உள்ள சங்ககால நூல்கள் PDF வடிவில் மட்டுமே உள்ளது. (இன்னும் சில நூல்களுக்கு விளக்கவுரையும் இல்லை)

சங்ககால நூல்கள் மின்னூல்களாகத் தமிழ் மொழியில்  கிடைத்தாலும் (Project Madurai – போன்ற தளங்களில்) அவை பெரும்பாலும் விளக்க உரையுடன்  காணப்படவில்லை அல்லது PDF வடிவில் மட்டுமே கிடைக்கின்றது.

இதுபோன்ற புத்தகங்கள் மின் புத்தகங்கள் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் இவை மின் புத்தகங்களே அல்ல, இவற்றால் எளிமையாகக் கைப்பேசி, Tablet அல்லது கிண்டில்  கருவிகளில் படிப்பது என்பது கிட்ட தட்ட இயலாத காரியம் தான்.

கணினியில் PDF வடிவில் அதிக நேரம் படிப்பதும் கண்களுக்கு நல்லது இல்லை, காரணம் PDF வடிவ நூல்களின் பின்னணி வண்ணம், எழுத்தின் அளவு, மற்றும் வண்ணம் போன்றவற்றை மாற்ற இயலாது. எனவே இவ்வாறு படிப்பது கண்களை வெகுவாக பாதிக்கும். மேலும் படிக்கும் ஆர்வத்தைக் குறைத்துவிடும்.

இந்த பதிவில் மின் புத்தகம் என்றால் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கவும்.

மின்னூல்கள் (ebook) என்றால் என்ன?

ஆங்கிலத்தில் உள்ள பழம்பெரும் நூல்கள் அனைத்துமே மின்னணு வடிவில் காணக்கிடைக்கின்றன,  அதேபோன்று அனைத்து தமிழ்  நூல்களையும் மின்னணு வடிவில் தற்போது மாற்ற இயலாவிட்டாலும் (என்னால்),  தமிழில் பெருமையாகப் போற்றப்படும் சங்க நூல்களை (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்)  ஆகியவற்றைத்  தெளிவான விளக்க உரையுடன்  மின்னூல்களாக இயற்றுவது தான் இந்த இணைய தளத்தின் (என்னுடைய) முக்கிய நோக்கமாகும்.  (அதன்பிறகு மற்ற நல்ல தமிழ் நூல்களையும் மின்னூல் வடிவில் மாற்றுவேன்)

சங்க இலக்கிய நூல்கள் பட்டியல்

எனவே  சங்ககால தமிழ் நூல்களை (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு மற்றும் சில முக்கிய நூல்கள்) அவற்றின் விளக்க உரையுடன் மீண்டும் தட்டச்சு செய்து  மின்னூல்களாக மாற்றுவதற்கு உங்களுடைய உதவியை எதிர்பார்க்கிறேன்.

ஏன் இவற்றை மின்னூலாக்க வேண்டும் ?

இந்த கேள்வி ஒருவேலை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், உங்களுக்காகச் சொல்கிறேன். காலம் மாறும்போது நாமும்  இந்த கால தொழில்நுட்பத்திற்கு ஏற்றதுபோன்று நம் தமிழ் நூல்களை மின் நூல்களாக மாற்றுவது மட்டுமே தான் நமது பழம்பெரும் அறிய நூல்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லச் சிறந்த வழி.

எனவே இந்த 21-ம் நூற்றாண்டில் அனைத்துமே மின்னணு தொழில்நுட்பத்தில் வந்துவிட்டது, ஏன் தற்போது அனைத்து பள்ளிகளிலும் இணைய வகுப்புகள் நடைபெறத் துவங்கிவிட்டது. எனவே நமது பழம்பெரும் நூல்களை வாசகர்கள் / மாணவர்கள் எளிதாக விரும்பி படிக்கும்வண்ணம் eBook வடிவில் மாற்றுவதுதான் நாம் தமிழுக்கு இப்போது செய்யும் தொண்டு என நான் கருதுகின்றேன்.

பழந்தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்ற உதவுவோம்

என்னுடைய பணி

நான் புதிதாக எந்த இலக்கியமோ அல்லது அவற்றிற்கு விளக்க உரையோ எழுதப் போவதில்லை. மாறாக நல்ல விளக்கவுரையுடன் உள்ள சங்கத் தமிழ்ப் புத்தகங்களை வாங்கி அவற்றை என் நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் உதவியுடன் கணினியில் தட்டச்சு செய்துPDF, ePub, MOBI, AZW3 (Kindle) ஆகிய வடிவங்களில் அவற்றை உருவாக்கி இலவசமாக இந்த தளத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் பதிவேற்றுவேன். 

மின்னூலாக்க ஆகும் செலவு

சராசரியாக ஒரு பக்கத்திற்கு 15 முதல் 20 ரூபாய் என்ற வீதம் புத்தகங்களைத் தட்டச்சு செய்து மின்னூலாக்கத் தேவைப்படும். என்னிடம் போதிய பணம் இருந்தால் நிச்சயம் நன்கொடை கேட்காமலேயே செய்து இருப்பேன். என்னுடைய வருமானம் என் குடும்ப செலவுகளுக்குச் சரியா இருப்பதால் இதைத் தனியாகச் செய்ய முடியவில்லை.

ஒரு புத்தகம் 500 பக்கங்கள் இருக்குமேயானால் (விளக்கவுரையுடன்) அந்த புத்தகத்திற்கு 7500 முதல் 10,000 ரூபாய் செலவாகும்.  (இணையதள பராமரிப்பு செலவு சேர்க்காமல்)

எனவே பணமும், மனமும் படைத்த தமிழ் மீது ஈடுபாடு கொண்டவர்கள் நன்கொடை அளிக்குமாறு வேண்டுகிறேன்.

நீங்கள் அளிக்கும் நன்கொடை தொகை நிச்சயம் தமிழ் நூல்களை மின்னூல்களாக மாற்றுவதாதற்கு மட்டும்தான் பயன்படும் என உறுதி கூறுகின்றேன். 

இப்படிக்கு,

ரெஜியா பர்வீன்.

வங்கி கணக்கு விவரம்

  • NAME: M S REJIYA PARVIN
  • IFSC: IDIB000P042
  • A/C No: 6611251379
  • BANK: Indian Bank, (MG Road Branch, Pondicherry)

குறிப்பு: நன்கொடை செலுத்தியவர்கள் அதற்கான விவரம் மற்றும் தங்கள் கைப்பேசி எண் அல்லது மின் அஞ்சல் முகவரியை எனக்கு (Rejiya16@gmail.com) அனுப்பிவையுங்கள்.

நன்றி… _/\_

Tamill eBooks Org