Sale!

அந்தமான் கைதி (சீர்திருத்த நாடகம்)

0.009.00

அந்தமான் கைதி eBook (சீர்திருத்த நாடகம்)

  • அந்தமான் கைதி PDF | ePub | AZW3

Description

அந்தமான் கைதி PDF Online Read

அந்தமான் கைதி (சீர்திருத்த நாடகம்)

அந்தமான் கைதி நூலை இயற்றியவர்கு. சா. கிருஷ்ணமூர்த்தி

அந்தமான் கைதி முன்னுரை

நண்பர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ‘அந்தமான் கைதி’ என் உள்ளத்தைத் தொட்டீர்த்த ஏடுகளில் ஒன்றாகும். பொருந்தா மணத்தின் கொடுமையையும், சமூக சீர்திருத்தவாதிக்கு நேரிடும் கஷ்டத்தையும் உருக்கமாக விளக்கிக் காட்டும் இந்நூல்………. படித்திட மட்டுமல்லாது நடித்திடவும் ஏற்றதோர் நாடக நூல். திரைப்படமாகவும் இதனைக் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைத்தது.

கற்பனைச் செறிவுடன் அமைந்துள்ள ‘அந்தமான் கைதி’ புதிய பதிப்பாக வெளியிடுவது அறிந்து மகிழ்கிறேன். மனித இயல்பு விளக்க ஏடான இந்நூல் ஏற்கனவே மக்களின் நல்லாதரவைப் பெற்றிருப்பதுடன் மேலும் பேராதரவு பெற்றிடும் என்று நம்புகிறேன். நண்பர் கு. சா. கி. அவர்களுக்கு என் பாராட்டுதலை வழங்கி மகிழ்கிறேன்.

அன்பன்

அண்ணாதுரை.

தமிழகத்தின் முதலமைச்சர்,

அறிஞர் திரு. சி. என். அண்ணாதுரை

கோட்டை, சென்னை-9, 27—5–67.

 

அந்தமான் கைதி என்னுரை

‘அந்தமான் கைதி’ ஒரு நாடக நூல். இந் நாடகம் அநேகமாக நகரப் பகுதிகளெங்கும் பல்லாண்டுகளுக்கு முன்பே நடிக்கப்பெற்று பத்திரிகைகளாலும் பேரறிஞர்களாலும் பாராட்டப் பட்டிருக்கிறது. திரைப்படமாகவும் வெளிவந்தது.

இத்தனைக்கும் பிறகும்கூட இந்நூல் ஐந்தாம் பதிப்பாக வெளியிட வாய்ப்புப் பெறுவது தமிழக நாடக வரலாற்றில் ஒரு புதுமை!

நாட்டின் தலைமைப் பொறுப்பேற்று ஒய்வு ஒழிவின்றிக் கடமையாற்றும் தற்போதைய சூழ் நிலையிலும், எனது வேண்டுகோளை அன்புடன் ஏற்று இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுதவிய தமிழகத்தின் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பேரன்பு என்றும் மறத்தற்பாலதன்று.

அந்தமான் கைதியை அரங்கேற்றி அதன் வெற்றியிற் பெரும் பங்கேற்ற முத்தமிழ்க் கலா வித்வ ரத்ன. ஒளவை. தி. க. ஷண்முகம் அவர்கள் அணிந்துரை அளித்துப் பெருமையளித்துள்ளார். மற்றும் இந்நூலை பிழைதிருத்தி அழகுடன் பதிப்பித்தளித்த நாவல் ஆர்ட் பதிப்பக நிர்வாகி திரு. நாரா நாச்சியப்பன் அவர்களுக்கும், இந்த வெளியீட்டிற்கு ஆதரவளித்துதவிய தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்திற்கும், இதன் விற்பனை உரிமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பாரி நிலையத்தாருக்கும் எனது நன்றி.

வணக்கம்

கு. சா. கிருஷ்ணமூர்த்தி

5一6一67, சென்னை

 

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “அந்தமான் கைதி (சீர்திருத்த நாடகம்)”

Your email address will not be published. Required fields are marked *