அறிவுக்கு உணவு – டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம்

அறிவுக்கு உணவு PDF

அறிவுக்கு உணவு – டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம்

  • அறிவுக்கு உணவு PDF (Computer)
  • அறிவுக்கு உணவு ePub (Android, iPhone)
  • அறிவுக்கு உணவு MOBI (Kindle Reader)

 

Description

முன்னுரை
டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் M.A., M.O.L., Ph.D.
(தமிழ்த்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்)

சிறு வடிவம்; சிறந்த கருத்துக்கள்; நூலின் தன்மை அத்தகையது.

தெறிக்கும் சொற்கள், தெளிவான நல்லுரைகள்; ஆசிரியரின் நடை இத்தகையது.

தமிழகம் உயர வேண்டும்! தமிழர் உயர்ந்தால்தான் அது முடியும்; கருத்துக்களின் குறிக்கோள் இது.

கற்பனையுலகத்தை நடைமுறைக்கு ஈர்த்து அலைவதும் இங்கு இல்லை. பழைய வரலாற்றை இன்றைய வாழ்வுக்குப் பாய்ச்சி இணைப்பதும் இங்கு இல்லை. நடைமுறையை மறவாமல் வாழ்வைக் காக்கும் அனுபவ அறிவுரையே இங்கு உள்ளது.

வினாவும் விடையுமாக உள்ள பகுதிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவுரைகளாக உள்ளன. விடைகூறும் முறை சுவை மிகுந்ததாகவும், நேரே உள்ளத்தில் பதிய வல்லதாகவும், உள்ளது. ஏட்டுச் சுரைக்காயாக வரும் அறிவுரையை விட, அனுபவத் தெளிவாக வரும் அறிவுரை ஆற்றல் மிகுந்தது என்பதை இந்தப் பகுதியால் நன்கு தெளியலாம். இவை இளைஞர் உள்ளங்களுக்கு நல்ல மருந்தும் ஆவன: சிறந்த விருந்தும் ஆவன.

‘அறிவுக்கு உணவு’ நலம் பயப்பதாக!

அன்புள்ள,
மு.வரதாரசன்

சென்னை
12-9-56

 

எனது எண்ணம்
“எனது நாடு தமிழ் நாடு; எனது மொழி தமிழ் மொழி; ஆகவே, நான் தமிழன்” என்று நெஞ்சு நிமிர்ந்து கூறும் தகுதியும் வாய்ப்பும் உள்ள மக்களுள் ஒவ்வொரு வரும், “எண்ணத்தாலும், துணிவாலும், செயலாலும், சொல்லாலும், பொருளாலும் உலகுக்குயிர் வழங்கிய நம் அருந்தமிழைப் போற்றி வளர்த்து, நாமும் பிறரும் நல்வாழ்வு வாழ வேண்டும்!” என எண்ண வேண்டும் என்பது எனது எண்ணம்.

கி.ஆ.பெ.விசுவநாதம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறிவுக்கு உணவு – டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன