இராவண காவியம்

(1 customer review)
Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0

இராவண காவியம் PDF – இயற்றியவர் புலவர் குழந்தை

[button et_class=”” target=”_self” style=”big” url=”https://drive.google.com/uc?export=download&id=1EoWcYCi_9f-2FwrYkzYJr6aScqOz1qU-” icon=”” title=”Download”]

இராவண காவியம்

இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ்  காவியம்தான், இராவண காவியம் (Ravana Kaviyam).  புலவர் குழந்தை என்பவர் இந்த நூலை 1946இல் இயற்றினார். 

57 படலங்களும் 3100 பாடல்களும் உடைய மிகப்பெரிய காவியம் இராவண காவியம்  ஆகும். இதில் உள்ள  5 காண்டங்கள் பின்வருமாறு…

  1. தமிழ்க் காண்டம், 
  2. இலங்கைக் காண்டம், 
  3. விந்தக் காண்டம், 
  4. பழிபுரி காண்டம், 
  5. போர்க் காண்டம்

 இராவண காவியம் PDF

கம்பர் திருநாளும் பெருநாளும், கம்பர் மாநாடும், கம்பராமாயணக் கருத்தரங்கும் பாட்டரங்கும் பட்டிமன்றமும், விரிவுரையும் விளக்கவுரையும் நடத்தப் பெறும் அத்தகு சூழ்நிலையில், ‘இராவண காவியம்’ என்னும் பெயரில் ஒரு பெருங் காவியம் செய்யும் அத்தகு உணர்ச்சியினையும், உள்ளத் துணிவினையும் எனக்கு உண்டாக்கிய தன்மான இயக்கத் தந்தை பெரியார் அவர்கட்கும்,

மனமுவந்து சிறப்புப் பாயிரம் தந்து இக் காவியத்திற்குச் சிறப்பைத் தந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்கட்கும், ‘மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க் கணியும் போல’ அரியதோர் ‘ஆராய்ச்சி முன்னுரை, எழுதியுதவி இக் காவியத்தைச் சிறப்பித்து என்னைப் பெருமைப்படுத்திய – புகழுருவெய்திய தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கட்கும்,

தமிழ்மக்கள் படிக்கக் கூடாதென 23 ஆண்டுகளாகத் தடைவிதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியருளிய தமிழக அரசுக்கும், அத் தடையை நீக்கித் தமிழ்மக்கள் படித்துப் பயனுறுமாறு செய்ததோடு, தமக்கே உரிய சீரிய செவ்விய நடையில் ஓர் ஆராய்ச்சி அணிந்துரை’ உதவி என்னையும் என் காவியத்தையும் பெருமைப்படுத்திய – தமிழ்வாழ, தமிழர் வாழத் தாம் வாழும் தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் கருணாநிதி அவர்கட்கும்,

சென்னை மாநில ஆட்சியாளர் காவியத்திற்குத் தடைவிதித்தபோது, ஆட்சியாளரின் அத் தகாச் செயலைக் கண்டித் தெழுதிய அறிஞர் அண்ணா முதலிய பெரியார்கட்கும் தமிழ்மக்களின் சார்பாக என்றன் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனன். வணக்கம்.

பவானி 15-9-71

அன்புள்ள, புலவர் குழந்தை

இராவண காவியம் பற்றிய கட்டுரைகள்

1 review for இராவண காவியம்

5.0 out of 5
1
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. G. GAYATHRI

    super

    Helpful(0) Unhelpful(0)You have already voted this

    Add a review

    உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

    Tamill eBooks Org
    %d bloggers like this: