"இலவசமாக மின் புத்தகங்கள் பதிவிறக்க: Login/SignUp"
இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் குலோத்துங்க சோழனின் அரசவையில் இருந்த கம்பர் எனும் பெரும் புலவரால் கி. பி 12 ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். கம்பராமாயணம் மூலமும் உரையும் PDF வடிவில் இலவசமாக இந்த பதிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கம்பராமாயணம் இந்து மத இதிகாசங்கள் இரண்டினுள் (இராமாயணம் மற்றும் மகாபாரதம்) ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும்.
வால்மீகி என்பவர் வடமொழியில் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் கம்பராமாயணம் ஆகும். எனவே கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும்.
மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால், இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.
கம்பராமாயணம் மேல் குறிப்பிட்ட 6 காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது.
காண்டம் என்ற சொல் காப்பியத்தின் பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும்.
7-ம் காண்டமாகிய “உத்திர காண்டம்” என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய “ஒட்டக்கூத்தர்” இயற்றினார் என்பர்.
இந்த உத்திர கண்டத்தை மையமாக கொண்டு சீதையின் பார்வையில் உள்ள கதையை சீதாயானம் என்ற நூல் விளக்குகின்றது.
தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (கி.பி. 12-ம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர்.
கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு.
கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)” என்றொரு கணக்கீடும் உண்டு.
பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது கம்பராமாயணம்.
மேலும் அணி, பொருள், நடை ஆகியவற்றால் கம்பராமாயணம் சிறந்து விளங்குவது.
இராவண காவியமும் ஆரிய திராவிட அரசியலும்
Authors Name | |
---|---|
Available Downloads |
வாழ்க தமிழ் .. வளர்க தமிழர் ..
Paneer Selvam –
I am yet to read
Paneer Selvam –
நான் படித்தபிறகு கருத்திடுகிறேன்
Paneer Selvam –
Review for கம்பராமாயணம் மூலமும் உரையும்
★ ★ ★ ★ ☆
Alagesan –
Yet to be read
Alagesan Thangavelu –
Yet to received
Sankaran Gopalan –
நான் படித்த பிறகு கருத்து இடுகிறேன்.
Sankaran Gopalan –
கம்ப ராமாயணம் உரைநடை நூல்கள்