Sale!

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

0.009.00

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்  

  • Free Download AZW3/ePub/PDF

Description

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும் Read Online

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

முன்னுரை

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும் என்று, இந்த நூலுக்குப் பெயர் தந்திருக்கிறேன்.

6 வயது முதல் 11 வயது குழந்தைகளுக்கு அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுவர் சிறுமிகளுக்கு உதவும் வகையில் இந்த நூலை எழுதியிருக்கிறேன். ஐந்திலே குழந்தைகளை வளைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது உறுப்புகளை செழிக்கத் தூண்டும்.

இந்தக் கருத்தில் தான் , ஐந்திலே வளையவேண்டும். இல்லாவிடில் ஐம்பதில் வளையாது என்று ஒரு பொன்மொழியை, நன்மொழியை, நமது முன்னோர்கள் தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

Catch them young என்பது நமது மாநில அரசின் , மைய அரசின் மகத்தானக் கொள்கையாக விளங்குகிறது. குழந்தைகளைப் பிடிக்க, பயிற்சியளிக்க, கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க மத்திய அரசும், மாநில அரசும் முன்வந்திருக்கின்றன.

ஆரம்பப் பள்ளிகளில்தான், குழந்தைகள் படிக்கின்றார்கள். அங்கே, உடற்பயிற்சி அளிக்க, விளையாட்டுக்களைத் திட்டமிட்டுக் கற்றுதர, உடற்கல்வி ஆசிரியர்கள் யாரும் இல்லை, விளையாடும் இடங்கள் போதிய அளவு இல்லை. தரும் பாடதிட்டமும் உரிய முறையில் இல்லை.

குழந்தைகளுக்கு கற்றுத் தர உதவுகின்ற விளையாட்டுத் துறை நூல்களும் தமிழில் இல்லை. இந்தக் குறையைப் போக்க, முதல் நூலாக, புதிய அமைப்பாக, இந்த நூல் வெளிவருகிறது.

அகில இந்திய அளவில், அறிஞர்கள் கூடி, கலந்துரையாடி, தயாரித்துத்தந்துள்ள பாடத் திட்டத்திற்கேற்ப, இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் மகிழ்ந்து விளையாட, கூடி உறவாட, சிரித்துமகிழ, சிறந்து திகழ, இந்த நூலில் கூறப்பட்டுள்ள உடற்பயிற்சி களும், விளையாட்டுகளும் நன்கு உதவும்.

ஒவ்வொரு ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கும், இந்த நூல் உற்ற துணையாக உதவும்.

தங்கள் பிள்ளைகளை தகுதியுள்ள முறைகளில் வளர்க்க விரும்புகிற பெற்றோர்களுக்கு, இந்நூல் வழிகாட்டியாக உதவும். வரப்பிரசாதமாக விளங்கும்.

வருங்காலத் தமிழகம் வளங்கொழிக்க, குழந்தைகள் எழுச்சியுறும் இனிய நிலையை என் மனக்கண்ணால் பார்த்து மகிழ்வடைகிறேன்.

வளமோடு குழந்தைகள் வளர வாழ்த்துகிறேன். பெருமையுடன் உதவுகின்ற ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் பாராட்டி மகிழ்கிறேன்.

அன்புடன்

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

  • முன்னுரை…….
  • பதிப்புரை…….
  • உடற்கல்வியும் ஒரு கல்வியே!
  • உடற்கல்வியும் குழந்தைகளும்…
  • 6 முதல் 11 வயதுக் குழந்தைகள்…
  • குழந்தைகளுக்குக் களிப்பூட்டும்  செயல் முறைகள்…
  • 6 முதல் 8 வயதுக் குழந்தைகளுக்கு…
  • 8 முதல் 9 வயது குழந்தைகளுக்கு…
  • 9 முதல் 10 வயது குழந்தைகளுக்கு…
  • 10 முதல் 11 வயது குழந்தைகளுக்கு…
  • வேடிக்கையான விநோத நடைகள் (Novelty Walks)
  • தனிப்போர் விளையாட்டுக்கள்…
  • உடற்பயிற்சி இயக்கம்…
  • கண்காட்சி உடற்பயிற்சிகள்…
  • கொடிப் பயிற்சிகள்…

 

Additional information

Authors Name

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்”

Your email address will not be published. Required fields are marked *