Sale!

சிலப்பதிகாரம் மூலமும் உரையும் PDF | ePub | Kindle

(1 customer review)

9.0049.00

சிலப்பதிகாரம் மூலமும் உரையும் eBook

Buy Now:  சிலப்பதிகாரம் PDF, ePub, Mobi (Kindle) Only for 49/-

Description

Silapathikaram PDF Free Download

  • சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வும் PDF Download

சிலப்பதிகாரம் மூலம் மட்டும் இலவசம். 

  • சிலப்பதிகாரம் மூலம் PDF Free Download
  • சிலப்பதிகாரம் மூலம் ePub Free Download
  • சிலப்பதிகாரம் மூலம்  Mobi Free Download

[wpsm_promobox background=”#f8f8f8″ button_link=”https://play.google.com/store/apps/details?id=com.rejiya.tamil.audiobooks” button_text=”Click Here” title=”Tamil Novels AudioBooks By Rejiya” description=”தமிழ் ஒலிப்புத்தகம் – ரெஜியா | (Kids Stories, Novels & …) Download Free Tamil AudioBooks App From Android Play Store” ]

சிலப்பதிகாரம் மூலமும் உரையும் PDF

சிலப்பதிகாரம் (Silapathikaram) சிலம்பு + அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. கி. பி. 2-ம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம்  எழுதப்பட்டது என்பர்.

சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் ‘பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்‘ எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில்

  1. இயல்,
  2. இசை,
  3. நாடகம்

என்னும் மூன்றனையும் காணலாம்.

குடிமக்கள் காப்பியம்

ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை ‘குடிமக்கள் காப்பியம்‘ என்றும் கூறுவர்.

இளங்கோ அடிகள்

இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

புகார்க் காண்டம்

1.மங்கல வாழ்த்துப் பாடல்
2.மனையறம்படுத்த காதை
3.அரங்கேற்று காதை
4.அந்திமாலைச் சிறப்புசெய் காதை
5.இந்திரவிழவூரெடுத்த காதை
6.கடலாடு காதை
7.கானல் வரி
8.வேனிற் காதை
9.கனாத்திறமுரைத்த காதை
10.நாடுகாண் காதை

மதுரைக் காண்டம்

11.காடுகாண் காதை
12.வேட்டுவ வரி
13.புறஞ்சேரியிறுத்த காதை
14.ஊர்காண் காதை
15.அடைக்கலக் காதை
16.கொலைக்களக் காதை
17.ஆய்ச்சியர் குரவை
18.துன்ப மாலை
19.ஊர்சூழ் வரி
20.வழக்குரை காதை
21.வஞ்சின மாலை
22.அழற்படு காதை
23.கட்டுரை காதை

வஞ்சிக் காண்டம்

24.குன்றக் குரவை
25.காட்சிக் காதை
26.கால்கோட் காதை
27.நீர்ப்படைக் காதை
28. நடுகற் காதை
29. வாழ்த்துக் காதை
30. வரந்தரு காதை

சிலப்பதிகாரம் நூல் குறிப்பு

சிலப்பதிகாரம் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம். முதன்மையான காப்பியம். முத்தமிழ்க் காப்பியம். முத்தமிழ் நாட்டை முழுத்தமிழ் நாடாக்க முயன்ற காப்பியம்.

சிலப்பதிகாரம் போன்ற ஒரு காப்பியம், அது தோன்றிய காலத்தில் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இந்திய மொழிகளாலோ, ஏன்? உலகமொழிகளிலோ தோன்றியதாகத் தெரியவில்லை.

உலகம் முழுவதும் தெய்வங்களையும், தெய்வத் தொடர்பு உடைய இராமன் போன்ற பாத்திரங்களையும், அரசர் களையும், தலைவர்களாகக் கொண்டு, காப்பியங்கள் பாடப் பெற்ற காலத்தின் மனிதரைப்பற்றி, மனிதரின் வளர்ச்சி பற்றி, மனிதரின் முழுநிலை பற்றி, மனிதரின் வாழ்க்கையின் குறிக் கோள் பற்றி, சிந்தித்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அதனால் அதைக் குடிமக்கள் காப்பியம் என்று கூறினர்.

காப்பியம்

ஒரு சாதாரணக் குடியில் தோன்றிய கண்ணகி, முழுநிலை அடைந்ததை, தெய்வநிலை எய்தியதைக் கூறும் காப்பியம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பெற்றதை விளக்கும் காப்பியம்.

காப்பியம் என்ற சொல் காவியத்திலிருந்து வந்ததாகக்
கூறுவதைக் காட்டிலும், காப்பு + இயம் என்று பிரித்து, மரபைக் காத்து, இயம்புவது வெளிப்படுத்துவது என்ற நிலையில் பார்த்தால் இன்னும் தெளிவாகும்.

தமிழ் மரபையும், பண்பாட்டையும் வாழ்க்கை முறை களையும் தமிழ், இசை, கூத்துப் போன்றவற்றையும் காப்பாற்றி, நமக்கு அன்றும் இன்றும் என்றும் இருக்குமாறு, உணருமாறு செய்தது தான் சிலப்பதிகாரம்.

முத்தமிழ்க்காப்பியம்

சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ்க்காப்பியம் அதற்குப் பின்பு தமிழில் தோன்ற வில்லை.

ஏனைய , காப்பியங்கள் மொழியால் தமிழ்க் காப்பியங்கள் மணிமேகலை, பௌத்தம் பற்றியும், சிந்தாமணி ஜைனம் பற்றியும், வளையாபதி, குண்டலகேசி போன்றவை சமய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் காப்பியங்களாகவும் அமைந்துள்ளன.

இராமாயணம், பாரதம் வடமொழி இதிகாசங்கள், அவற்றைத் தழுவி எழுதப்பெற்ற காப்பியங்கள் சில. பெரிய புராணம் சைவசமயக் கொள்கைகளைக் கருத்துக்களை வெளிப்படுத்தும் காப்பியம்.

தமிழுக்குரிய தனித்தன்மையுடைய காப்பியமாகச் சிலம்பு மட்டுமே உள்ளது.

அதனால் தான் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றொரு மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாடினார் பாரதி.

சிலப்பதிகாரம் தமிழகத்தில் நடந்த பழங்கதை ஒன்றை எடுத்துக் கொண்டு எழுதப்பெற்ற காப்பியம். நடந்தது போன்று உணர்வைப் படிப்போருக்குத் தோற்றுவித்தால் தான் காப்பியம் மனத்தில் நிற்கும். ஈடுபாடு ஏற்படும். அதனால் அந்நிலையைத் தோற்றுவித்தார் அடிகள்.

சில செய்திகள் நடந்தும் இருக்க லாம். எல்லாச்செய்திகளும் வரிக்குவரி நடந்தன என்று கூற இயலாது.

சிலம்பு – உள்ளுறைப் பொருள்

சிலப்பதிகாரப் பதிகத்தின் படி,

  1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
  2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
  3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

என்பதூஉம் என்று மூன்று கூறப்பெற்றலாலும், அவை நடப்பதாகக் காப்பியத் தில் காட்டப்பெற்றாலும், அவை மட்டுமே அடிகளின் நோக்க மன்று. சிலம்பு முழுவதும் உள்ளுறைப் பொருள் மிக்கது.

1. மனிதத்தை முழுநிலை பெறச் செய்வது

சிலம்பின் முதல்நோக்கம் மனிதத்தை முழுநிலை பெறச் செய்வது தான். மனிதம் தெய்வநிலை அடைதல் வேண்டும். கண்ணகியைத் தெய்வமாக்கி தன் எண்ணத்தை நிறை வேற்றுகிறார்.

2. மூவேந்தர்கள் ஒற்றுமை

தமிழகத்தில், ஒற்றுமை இன்மை மிகுதியாக இருந்தது. மூவேந்தர்கள் தம்முள் பகைத்துக் கொண்டு மன வேறுபாடு களுடன் போரிட்ட கதைகளைப் புறநானூற்றுப் பாடல்கள் பல நமக்குக் கூறுகின்றன.

முதலில் தமிழ் வேந்தரைச் சேர்க்க வேண்டும். ஒற்றுமைப் படுத்தவேண்டும் என்று நினைத்தார் அடிகள்.

அதனால்தான் மூன்று காண்டங்களுக்கும் மூவேந்தர் களின் தலைநகர்களின் பெயரைத் தந்தார்.

  1. சோழ அரசன் தலைநகரம் புகார், புகார்க் காண்டம்,
  2. பாண்டிய அரசன் தலைநகரம் மதுரை, மதுரைக் காண்டம்,
  3. சேர அரசன் தலைநகரம் வஞ்சி, வஞ்சிக் காண்டம்

என, அடுத்து மூவேந்தர் ஆளும் பகுதிகளில் கதை நடந்ததாகக் காட்டவிரும்பினர். அதனால் சோழ நாட்டில் பிறந்த கண்ணகி, பாண்டிய நாட்டில் கணவனை இழந்து, சோழநாட்டில், தெய்வ நிலை அடைகிறாள்.

3. சமய இணைப்பு

தமிழ் நாட்டில் பக்தி இலக்கியம் தோன்றுவதற்கு முன்பு சமயப்பூசல்கள் இருந்தன. அதனால் தான் மெய் அறியா அமண்குண்டர், ஊத்தைவாய்ச் சமணர் என்றெல்லாம் நாயன்மார் பாடினார்.
இளங்கோ, சமய இணைப்பையும் எண்ணினார். அதனால் இந்துசமயத்தைச் சார்ந்த கண்ணகிக்கும், சைனத்தைச் சார்ந்த கோவலனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

சிலப்பதிகாரம் மூலமும் உரையும் PDF | ePup | Mobi

சிலப்பதிகாரம் மூலமும் உரையும் வாங்கலாம் அல்லது இலவசமாக கீழே சிலப்பதிகாரம் மூலம் மட்டும் பதிவிறக்கவும்.

Additional information

Authors Name

,

eBook Formats

PDF, ePub, Mobi (Kindle)

1 review for சிலப்பதிகாரம் மூலமும் உரையும் PDF | ePub | Kindle

  1. Prathosini

    Review for சிலப்பதிகாரம் மூலமும் உரையும் PDF | ePub | Kindle
    ★ ★ ★ ★ ★

Add a review

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன