திருக்குறள் மூலமும் உரையும்

(2 customer reviews)

திருக்குறள் பொருளுடன் PDF

திருக்குறள் பொருளுடன் PDF வடிவில் Android, iPhone மற்றும் கணினிகளுக்கு   இலவசமாக பதிவிறக்கவும்.

  1. திருக்குறள் (எல்லீஸ் TIRUKKURAL ON VIRTUS-1812) – PDF
  2. திருக்குறள் புதிய உரை – புலியூர்க் கேசிகன் – PDF
  3. திருக்குறள் பரிமேலழகர் உரை PDF

Description

திருக்குறள் பொருளுடன் PDF Read Online

திருக்குறள் பொருளுடன் pdf வடிவில் இங்கு படிக்கலாம் அல்லது இலவசமாக பதிவிரக்கலாம்.

திருக்குறள்

திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

 இதனை இயற்றியவரான திருவள்ளுவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல்? என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:

தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்.

இதில் ‘தேவர் குறள்’ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும் ‘ஒரு வாசகம்’ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.

திருக்குறள் நூலானது திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது . மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவை உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.

திருக்குறள் காலம்

இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. இதன் அடிப்படையில், “திருவள்ளுவர் ஆண்டு” என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.[3]

திருக்குறள் பெயர்க்காரணம்

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் அதன் உயர்வு கருதி “திரு” என்ற அடைமொழியுடன் “திருக்குறள்” என்றும் பெயர் பெறுகிறது.

இது உலக மக்கள் அனைவருக்கும், எந்த காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இது உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.

எதுவித்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள் எவை என்பதை இன்றுவரை தமிழ் வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம், முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியன் உரியிலில் குறிப்பிட்ட ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய சூத்திரத்தையும், அதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த உரைகளையும் சரியாக விளங்கி, ஒரு தமிழ்ச் சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.

குறளானது ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் பொருளுடன் pdf

திருக்குறள் பிற பெயர்கள்

  • உத்தரவேதம்
  • பொய்யாமொழி
  • வாயுரை வாழ்த்து
  • தெய்வநூல்
  • பொதுமறை
  • முப்பால்
  • தமிழ் மறை
  • ஈரடி நூல்
  • வான்மறை
  • உலகப்பொதுமறை

திருக்குறள் நூலின் அமைப்பு

திருக்குறள் பொருளுடன் PDF

திருக்குறள் ஓலைச் சுவடி.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும்; அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும்; பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது இந்நூலின் மொத்தமான நோக்கு.

இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.

திருக்குறள் நூற் பிரிவுகள்

திருக்குறள் அறம்பொருள்இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.

ஆனால், குறளின் அதிகாரங்கள் ஏன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.

அறத்துப்பால்

திருக்குறளின் அறத்துப்பாலில் “பாயிரவியல்” 4 அதிகாரங்களும், பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் “இல்லறவியல்“, அடுத்து 13 அதிகாரங்கள் கொண்ட துறவறவியல், இறுதியில் “ஊழ்” என்னும் ஒரே அதிகாரம் கொண்ட “ஊழியல்”, என வகைபடுத்தப்பட்டுள்ளது.

திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் “ஊழியல்” மட்டுமே.

முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.

பொருட்பால்

அடுத்து வரும் பொருட்பாலில்

  • அரசு இயல்,
  • அமைச்சு இயல்,
  • ஒழிபு இயல்

ஆகிய இயல்கள் இருக்கின்றன.

அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

காமத்துப்பால்

கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலில்களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள்.

களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன.

ஆகமொத்தம் 3 பால்கள், 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 14000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறம் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழுக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழுக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது.

திருக்குறளும் எண் குறித்த தகவல்களும்

திருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 38 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், மொத்த பாடல்கள் 1330 இன் இலக்கங்களைக் கூட்டினாலும் , கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது ? என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை.

மற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும், என்ன அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன? அவைகள் ஏதாவது போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு வரப்படவில்லை.

திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை

திருக்குறள் நூற் பிரிவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

அறத்துப்பால் (1-38)

  • பாயிரம்
1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்
  • இல்லறவியல்
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவுநிலைமை
13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறன் இல் விழையாமை
16. பொறை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்
  • துறவறவியல்
25. அருள் உடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை :
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
  • ஊழியல்
38. ஊழ்
பொருட்பால் (39-108)

  • அரசியல்
39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றம் கடிதல்
45. பெரியாரைத் துணைக்கோடல்
46. சிற்றினம் சேராமை
47. தெரிந்து செயல்வகை
48. வலி அறிதல்
49. காலம் அறிதல்
50. இடன் அறிதல்
51. தெரிந்து தெளிதல்
52. தெரிந்து வினையாடல்
53. சுற்றம் தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56. கொடுங்கோன்மை
57. வெருவந்த செய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கம் உடைமை
61. மடி இன்மை
62. ஆள்வினை உடைமை
63. இடுக்கண் அழியாமை
  • அமைச்சியல்
64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத்தூய்மை
67. வினைத்திட்பம்
68. வினை செயல்வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
71. குறிப்பு அறிதல்
72. அவை அறிதல்
73. அவை அஞ்சாமை
  • அரணியல்
74. நாடு
75. அரண்
  • கூழியல்
76. பொருள் செயல்வகை
  • படையியல்
77. படைமாட்சி
78. படைச்செருக்கு
  • நட்பியல்
79. நட்பு
80. நட்பு ஆராய்தல்
81. பழைமை
82. தீ நட்பு
83. கூடா நட்பு
84. பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகை மாட்சி
88. பகைத்திறம் தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை
91. பெண்வழிச் சேறல்
92. வரைவில் மகளிர்
93. கள் உண்ணாமை
94. சூது
95. மருந்து
  • குடியியல்
96. குடிமை
97. மானம்
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாண் உடைமை
103. குடி செயல்வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை

திருக்குறள் உள்ளடக்கம்

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்றும் அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டுக் குறள்கள்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.” (திருக்குறள் – 423)

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” (திருக்குறள் – 392)

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.” (திருக்குறள் – 788)

உரைகள்

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான்.

தருமர் மணக்கும் தாமத்தார் நச்சர்
பரிதி பரிமே லழகர்-மல்லர்
பரிப்பெருமாள் காலிங்கர், வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தா ரிவர்.

என்கிறது பழைய வெண்பா .

தற்காலத்திலும் திருக்குறளுக்கு மு. வரதராசன்மு. கருணாநிதிசாலமன் பாப்பையா உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது நூலாகும். திருக்குறள் பாடல்களுக்கு அதிகாரம் ஒன்றுக்கு இரண்டு பாடல்கள் அல்லது கலிப்பா ஒன்று என்ற முறையில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் பாவுரை என்னும் நூலும் உள்ளது

உலக மொழிகளில் திருக்குறள்

ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730 இல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார்.

திருக்குறள் கருத்துக்களை (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே

மொழிபெயர்ப்புகள்

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பழமையான நூல்களில்  திருக்குறள் பைபிளுக்கு அடுத்த இடம் வகிக்கிறது. இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது *.

இந்திய மொழிகள்

குஜராத்தி, இந்தி, வங்காள மொழி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

ஆசிய மொழிகள்

அரபிபருமிய மொழிசீனம்பிஜியன்இந்தோனேசிய மொழியப்பானியம்கொரிய மொழிமலாய்சிங்களம்உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மொழிகள்

செக்டச்சுஆங்கிலம்பின்னிய மொழிபிரெஞ்சு_மொழி, செருமன்அங்கேரிய மொழிஇத்தாலிய மொழிஇலத்தீன்நார்வே மொழிபோலிய மொழிரஷிய மொழிஎசுப்பானியம்சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்புகளின் அட்டவணை

எண்மொழிமுதல் மொழிபெயர்ப்பு ஆண்டுமொழிபெயர்ப்புகள் (2015ம் ஆண்டு வரை)
1.அரபு19762
2.வங்காளம்19394
3.சீனம்19672
4.செக்19521
5.டச்சு19641
6.ஆங்கிலம்179458
7.பிஜி19642
8.ஃபின்னிஷ்19721
9.பிரெஞ்சு176718
10.ஜெர்மன்18038
11.குஜராத்தி19313
12.இந்தி192419
13.ஜப்பானிய மொழி19812
14.கன்னடம்19408
15.கொங்கனி20021
16.கொரியன்2
17.லத்தீன்17303
18.மலாய்19643
19.மலையாளம்159521
20.மணிப்புரியம்20121
21.மராத்தி19481
22.ஒடியா மொழி19785
23.போலிஷ்19582
24.பஞ்சாபி19832
25.ராஜஸ்தானி19821
26.ரஷ்ய மொழி19634
27.சமஸ்கிருதம்19225
28.சௌராஷ்டிரா19801
29.சிங்களம்19612
30.ஸ்வீடிஷ்19711
31.தெலுங்கு187714
32.உருது19652

நூலின் அமைப்பு முறை

முதலாவது அதிகாரமான ”கடவுள் வாழ்த்து”

இந்த அதிகாரத்தில் போற்றப்பட்டிருப்பவன் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்பவைகளால் விபரிக்கப்பட்டுள்ளான்.

வெவ்வேறு சாரார் இந்த விபரிப்புக்களுள் ஒருசிலவற்றை மாத்திரம் எடுத்து, அவை இன்ன இன்ன கடவுள்களுடன், அல்லது போதனையாளனுடன் ஒன்றுவதால், திருக்குறள் இன்ன சமயம் சார்ந்தது என்ற கருத்தினை முன்வைத்து, திருக்குறளானது ஜைனம், சைவம், வைணவம், வைதீகம் எனச் சகல சமயங்களுடனும் இணைக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆதிபகவன், வாலறிவன்,இறைவன் என்பவைகளின் பொருள்களைச் சரியாக அறிய, தமிழ் எழுத்து மொழியின் தொல்காப்பியன் குறிப்பிட்ட‘மொழிப் பொருட் காரணம்‘ அறிந்திருக்கப்படவேண்டும் என்ற வாதமும் அச்சாராரரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இச்சாரார் தமிழ் எழுத்து மொழியில், மூலத்தனியொலிகள் ஒவ்வொன்றும் ‘தன்மை’ (nature) அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு விபரிப்பினைச் செய்கிறது எனவும்; குறிப்பிட்டவொரு ஒழுங்கில் அமைக்கப்பட்ட பல்வேறு மூலத்தனியொலிகளின் இணைவால் உண்டாகும் பூரண விபரிப்பினைச் செய்யும் இணையொலியே ‘சொல்‘ எனவும்; குறிப்பிட்டவொரு பூரண விபரிப்பானது நாம் வாழும் சுற்றத்திலும், பிரபஞ்சத்திலும் என்னனென்ன பொருட்களில் அடையாளங்காணப்படுகிறதோ, அவைகள் எல்லாம் அச்சொல்லின் ‘பொருள்கள்‘ ஆகமுடியும் எனவும்; இவற்றுள் எவையெவைகளைப் பொருள்களாகக் கொள்ளும் ‘மரபு‘ இருந்து வந்துள்ளதோ, அதற்கேற்ப அவைகள் பொருள்களாகக் கொள்ளப்படும் என்ற முடிவையும் கொண்டுள்ளனர்.

திருக்குறள் பொருளுடன் pdf

இந்த பதிவில் திருக்குறள் பொருளுடன் pdf வடிவில் மூன்று உரை வடிவங்களில் இலவசமாக படித்து பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், நன்றி.

2 reviews for திருக்குறள் மூலமும் உரையும்

  1. sandy

    finally i found thirukkural with meaning in pdf format, thanks.

  2. vipraja

    உங்கள் இந்த சிறந்த சேவையை மனமார பாராட்டி வாழ்த்துகிறேன்.நன்றி

Add a review

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன