நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது (நல் நற்றிணை). இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.
இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் “பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி” ஆவான்.
நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.
குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் –
என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.
நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவைச் சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.
மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய “தூது” என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம்.
மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
நற்றிணை 12, கயமனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் 5
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
‘இவை காண்தோறும் நோவர் மாதோ,
அளியரோ அளியர் என் ஆயத்தோர்’ என
நும்மொடு வரவு தான் அயரவும்,
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. 10
பாடல் பின்னணி: தலைவனோடு தலைவி செல்லத் தோழி உடம்படுத்தினாள். பின்பு தலைவியிடம் அவ்வுடன்போக்கு இப்போது வேண்டாம் என்று நிறுத்தினாள். தலைவனிடம் சென்று, ‘தலைவி உன்னுடன் வர உடன்பட்டாள். ஆனால் தோழியர் நோகுவர் என வருந்தினாள்’ என்று அச்செலவைத் தவிர்த்தாள். திருமணத்திற்கு முயல்க என அறிவுத்துகின்றாள்.
பொருளுரை: நிறைந்த தயிர் பானையில் உள்ள நாற்றத்தைப் போக்க விளாம்பழத்தை இட்டு வைத்துள்ளனர். அதன் மணம் கமழ்கின்றது. தயிர்ப்பானையைத் தயிர் கடையும் கயிறு ஆடி தேய்த்ததால், மத்தின் தண்டு தேய்ந்திருக்கின்றது. வெண்ணை எடுக்கக் கடைவதால் அதன் ஓசை அதிகாலையில் தூணின் அடியிலிருந்து முழங்கும்.
அப்பொழுது அவள் தன் உடம்பை மறைத்து, காலில் உள்ள சிலம்பைக் கழற்றினாள். அதையும் வரியுடைய பந்தையும் ஒருசேர வைக்கச் சென்றாள். தன் தோழிமார் இதனைக் கண்டால் வருந்துவார்களே என்று நினைத்தாள். அவள் கண்கள், அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீரைச் சொரிந்தன. ஆனாலும் உன்னோடு வருவதற்குத் தான் அவள் விரும்புகின்றாள்.
குறிப்பு: ஒளவை துரைசாமி உரை – ‘தலைவரு விழும நிலை’ (தொல்காப்பியம், பொருள் 39) என்று தொடங்கும் நூற்பா உரையின்கண் இதனைக் காட்டி, ‘இந் நற்றிணை போக்குத் தவிர்ந்ததாம்’ என்றும், ‘தாயத்தினடையா’ (தொல்காப்பியம், பொருள் 25) என்ற நூற்பா உரையில் ‘தன் கால் அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் ‘இவை காண்தோறும் நோவர் மாதோ’ என்ற இப்பகுதியைக் காட்டி, ‘என்பதும் இதன்கண் அடங்கும்’ என்று கூறுவர் நச்சினார்க்கினியர்.
இஃது உடன்போக்குத் தவித்தற்பொருட்டுக் கூறியதென்பர் இளம்பூரணர்.
என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம!!நாணுதும் நும்மொடு நகையே!
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் தான் இயற்றிய புத்துரையுடன் 1915 இல், பதிப்பித்து வெளியிட்டார் இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்.”
Available Downloads | |
---|---|
Size (PDF) | 40 to 50 MB |
Authors Name |
வாழ்க தமிழ் .. வளர்க தமிழர் ..