நல்ல கதைகள்
நல்ல கதைகள்
ஆசிரியர் : டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா M.A., M.P.Ed. Ph.D., D.Litt., D.Ed., FUWAI (பல்கலைப் பேரறிஞர், தேசிய விருதுபெற்ற பேராசிரியர்)
நல்ல கதைகள்
இப் புத்தகத்தில் உடங்கியுள்ள கதைகள் அனைத்தும் சிறுவர்க்குச் சிறந்தவை. ‘பணம் தந்த பரிசில்’ வரும் கண்ணனைப் போன்ற மாணவர்கள் பலர் இன்றும் உள்ளனர். கண்ணன் திருந்துவது போல் இக்கதையாலும் பலர் திருந்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘தூக்கம் தந்த பரிசு’ இன்றைய சிறார்க்கு ஒரு சிறந்த பாடமாகும். மாணவரில் பலர் தூக்கத்தால் தங்களது கல்வியினை இழந்து வாழ்வில் துயறுற்று வருந்துகின்றனர்.
அவர்கள் தூக்கத்தால் வாழ்வில் நல்லதொரு வாய்ப்பை இழந்த மணியை நினைத்துக் கொள்ளட்டும். அன்பு உலகின் அனைத்துக்கும் அடிப்படை. அன்பால் எவரையும் நன்னெறிப்படுத்தலாம். இக்கருத்துக்களை மையமாகக் கொண்டு ‘அன்பு தந்த பரிசு’ என்னும் கதை எழுதப்பட்டுள்ளது. பல்வேறு தீய குணங்களைத் தன்னகத்தே கொண்ட சிங்காரம் அன்பால் திருத்தப் பட்டு தன்னைத் தாக்கிய சந்திரனையும் நண்பனாக்கிக் கொள்ளும் கதைதான் ‘அன்பு தந்த பரிசு இம் மூன்று கதைகளும் சிறுவர் கதையுலகில் மூன்று மணிகளாக என்றும் ஒளி விடும் என்பதில் ஐயமில்லை.
இந்நூலை எங்கள் பதிப்பகத்தில் வெளியிட வாய்ப்பளித்த டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்களுக்கு எங்கள் நன்றி.
Share this:
Related
Specification: நல்ல கதைகள்
|
There are no reviews yet.