பாரதிதாசன் தாலாட்டுகள்

பாரதிதாசன் தாலாட்டுகள்

  • பாரதிதாசன் தாலாட்டுகள் PDF
  • பாரதிதாசன் தாலாட்டுகள் ePub
  • பாரதிதாசன் தாலாட்டுகள் Mobi

Description

பாரதிதாசன் தாலாட்டுகள்

புலவர் த. கோவேந்தன்

தொகுப்பு: த. கோவேந்தன் இல.வல்

பாரதிதாசன் தாலாட்டுகள் உள்ளே…

  • பாவேந்தரின் தனித்தன்மை……
  • தாலாட்டு ஓர் ஆய்வு…
  • நாட்டுப் பாடல் இலக்கியம்..
  • சொல்லாராய்ச்சி..
  • கவிதைப் பொலிவு…
  • வாழ்வெல்லாம் விழா….
  • தாயும் தாலாட்டும்..
  • மனவியல் ஆராய்ச்சி..
  • தாலாட்டும் பள்ளும்..
  • நீலமயில் வாகனன்…
  • முல்லை நறுமலர்.
  • அனுபந்தம்..
  • பெண்குழந்தை தாலாட்டு..
  • திராவிட அன்னை ஆண்குழந்தை தாலாட்டு..
  • ஆண் குழந்தை தாலாட்டு..
  • தாயின் தாலாட்டு..
  • தோழிமார் தாலாட்டு..
  • தங்கத்துப் பாட்டி தாலாட்டு..
  • மலர்க்குழற் பாட்டி தாலாட்டு..
  • தாய் தாலாட்டு..

பாவேந்தரின் தனித்தன்மை

மக்கள் வாய்மொழி இலக்கியத்தின் தமிழ் இலக்கியம் தாலாட்டு. நாட்டுப்புறப் பாடல்கள் பல்வகை இசையிலும் பாங்குறப் பயின்றாலும் உலகில் உள்ள பாடல்களில் எல்லாம் தாலாட்டேமிகவும் பெருமிதமானதாகும். காரணம் ஆண் பெண் அன்புறவில் தாய்மைக் குருதியின் உயிர்ச் சிற்பமன்றோ அது. வருகால உலகத்தை வாழ்விக்க வந்த மக்கட்பேற்றினைப் போன்ற ஒன்றினைச்சீராட்டிப் பாராட்டி செம்மையாக வளர்ப்பது தானே முறை.

உயிரினத்திற்கு இயற்கை அளித்துள்ள கொடைகள் ஏராளம். அவற்றுள் மனித இனம் போன்று சிறந்ததொன்றில்லை. அதில் குழந்தை என்பது ஓர் எதிர் காலத்தின் மகிழ்ச்சிப் பெருக்காகும். இன்றைய குழந்தை நாளைய மாந்தன்’.

குழந்தைப் பருவமே புத்துணர்வும் புத்தெழுச்சியும் செவி வாயாகக் கொள்ளும் உணர்ச்சிப் பருவமாகும். அந்தச் சின்னஞ்சிறு பருவத்தின் எழிலையும் ஏற்றத்தையும் குடும்பப் பெருமையும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்னிசையின் வடிவில் பென்னம் பெரியாதாயுள்ளங்களை தந்தன. ஆனால் சமய வாணர்களோ எவ்வளவுதான் கற்பனைத் திறத்தினைக் காட்டினாலும் பிள்ளைத் தமிழிலும், தனித் தாலாட்டுகளிலும் வாழ்வறத்துக்குப் பொருந்த வியப்பு நிலைக்கதைப் புனைவுகளாகவே அமைந்துவிட்டனர்.

குழந்தைகளின் செவியில் நல்ல இசை என்பது எப்போதும் முன்னேற்றக் கருத்துகள், மனித நேயக் கருத்துகள் கொண்டு மானுடமேன்மைக்குரிய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புகுத்தவேண்டும் என்ற எண்ணம் பாவேந்தருக் கெழுந்தது. எனவே அவரின் தாலாட்டுப்பாடல்கள் தனித்தன்மை பெற்றுத் தலைசிறந்து பெற்றோர்கள் வாயிலும் கற்றோர்கள் வாயிலும் முற்றுகை இட்டன.

ஒவ்வொரு மாந்தனும் தன்மான உணர்வும் தன்ழுெச்சி கொண்டு விளங்கினால் ‘அனைவரும் உறவினர்’ என்போம் ‘வையம் வாழ வாழ்’வோம். அதற்குரியதனைத்தும் குழந்தையின் செவிநுகர் கனிகள்தாம் ஊட்டம் தரும்.

தாலாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், பண்பும் பயனும் காட்டும் அறிஞர் மு. அருணாசலம் அவர்தம் கட்டுரையும் பேரா. தமிழண்ணல் ஆய்வுரையும் இணைத்துள்ளேன். பழமைப்பண்ணையில் புதுமையைவிதைத்த பாவேந்தரை அறிய அவை உதவும். நூலை வெளியிடும் கவிஞர் கழகத்திற்குமிக்க நன்றி.

  • த. கோவேந்தன்

பாரதிதாசன் தாலாட்டுகள் தாலாட்டு ஓர் ஆய்வு

தாய்மை, உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் “தாலாட்டு” என்பது. இது உலகிற்குப் பொதுவான கலை; தமிழகத்திற்குத் தனிச் சிறப்புத் தரும் கலை; இந்த நாட்டில் ஒரு தாய் தான் பெற்ற மகளை வளர்த்து, வாழ்வுக்குகந்த கணவனுடன் மணம் செய்து வைத்து வழியனுப்புங்கால் தரும் சீர்வரிசைகளிலே புற நாகரிகத்தை எடுத்துக்காட்டும் தரும் சீர்வரிசைகளிலே புற நாகரித்தை எடுத்துக்காட்டும் பொருள்கள் பல; பிறப்போடு ஒட்டிய அகப்பண்பாட்டை எடுத்துணர்த்தும் உள்ளத்துச் செல்வங்களும் பல. கலையருவியின் தாயூற்றாக விளங்கும் இத் தாலாட்டு, அவ்வுள்ளத்துச் செல்வங்களிலே உயர்ந்த ஒன்று.

Additional information

Authors Name

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாரதிதாசன் தாலாட்டுகள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன