Sale!

மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு

0.009.00

மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு

FREE DOWNLOAD AZW3/ ePub/ PDF

Description

மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு Read Online

Table of Contents

பதிப்புரை…….

  • புன்சிரிப்போடு குழந்தை வளர்ந்தது…
  • இணைபிரியாத வளர்ப்பு..PDF
  • விளையாட்டிலே விருப்பம் இல்லை………
  • கல்வி பயிலாமல் அறிவுக்கூர்மை……..
  • மழைக்காகப் பிரார்த்தனை………
  • ஆண்டவன் கட்டளை……..
  • கிறிஸ்துவத் துறவியின் பாராட்டு…
  • இயற்கை வனங்களைப் படைத்த ஆண்டவன்….
  • நம்பிக்கைக்கு உரியவர்கள்…
  • ஏழை பங்காளர்..
  • பொறுமை மிக்கவர்கள்…
  • சச்சரவைத் தீர்த்து வைத்தார்கள்…
  • வியாபாரத்தில் நற்பெயர்..
  • 14. பிராட்டியாருக்கும் பெருமானாருக்கும் திருமணம்…
  • இணைந்த அன்பு-இனிய உபசரிப்பு.
  • அடிமையை விடுவித்த உயர்பண்பு..
  • முதல் அறிவிப்பு-“ஓதுவீராக!”.
  • துரோகியின் சூழ்ச்சி முறியடிப்பு..
  • பஞ்சத்தின் கொடுமையை அகற்றுதல்….
  • பகைவர்களின் தாக்குதல்….
  • பகைவரின் மனமாற்றம்…
  • பிராட்டியாரின் பிரிவு….
  • எண்ணத்தில் தூய்மை – சொற்களில் உண்மை……..
  • மக்காவை விட்டுப் பிரிதல்….
  • முதல் பள்ளிவாசல்….
  • மதீனாவில் பள்ளிவாசல்….
  • பெருமானார் அவர்களின் எளிய வாழ்க்கை…….
  • புதல்வியர் திருமணம்…
  • பெருமானார் கண்ட கனவு….
  • கேடயமாக நின்று காத்தனர்..
  • திருமுகத்தில் இரத்தம் பீறிடுதல்….
  • போர்முனைக்கு ஓடி வந்தனர்..
  • கவலையும் துக்கமும் பறந்து ஓடின….
  • உயிர் இழந்த உத்தமர்கள்…
  • கொலை செய்யச் சதி…
  • யூதர்களின் சூழ்ச்சி…
  • வழிகாட்டிய ஒளி….
  • தளராத உறுதி…
  • தோல்வியும் தண்டனையும்…
  • கருணை மிகுந்த உள்ளம்…
  • உண்மையும் நாணயமும் உள்ளவர்..
  • ஆண்டவன் அருளிய வெற்றி….
  • பெருமானார் அவர்களின் பெருமை……..
  • ஆண்டவன் வழி காட்டுவான்….
  • இஸ்லாத்தை உலகுக்கு அறிவித்தல்….
  • பெருமானார் அவர்களின் முத்திரைக் கடிதம்…
  • பெருமானார் அவர்களின் கடைசிப் போர்..
  • பெருமானார் அவர்கள் கூறிய அறிவுரை…….
  • நேரில் வந்து கண்டு மகிழ்ந்தனர்..
  • ஆடம்பரமும் அகம்பாவமும் அடங்கியது…
  • தொழுகையை நடத்தச் சொல்லுதல்….
  • இறுதிச் சொற்பொழிவு….
  • முடிவை உணர்தல்….
  • தருமம் செய்துவிடுங்கள்…
  • பெருமானார் அவர்களின் பிரிவு….
  • கடமைகளை நிறைவேற்றிய நபிகள் நாயகம் அவர்கள்!

பதிப்புரை

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உலகிற்குப் புரட்சியை தோற்றுவித்தார்கள்; புதுமையான தத்துவக் கருத்துக்களையும் அறக் கோட்பாடுகளையும் உருவாக்கி தாமே அதற்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.

நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு என்பது மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும்.

அப் பொக்கிஷத்திலிருந்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிபடுத்துகிற 56 நிகழ்ச்சிகளை தொகுத்து நூலாக வழங்கியுள்ளோம்.

பதிப்பகத்தார்

1. புன்சிரிப்போடு குழந்தை வளர்ந்தது

பெருமானார் அவர்களின் குழந்தைப் பருவம் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் ஆதரிப்பில் இருந்தது.

அப்துல் முத்தலிப் அவர்களின் உடல் முதுமையால் நலிந்து, தளர்ந்தது.

தாம் உயிரோடிருக்கும் பொழுதே, குழந்தையைத் தக்க பாதுகாப்பில் விட்டுவிடக் கருதினார். அதற்காக தம்முடைய புதல்வர்களை அழைத்து ஆலோசித்தார்.

அப்பொழுது, முதலாவதாக அபூலஹப், அக்குழந்தையின் பராமரிப்பை தாம் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.

“நீயோ பணக்காரன்; கடின உள்ளம் உடையவன்; தாய் தந்தையற்ற இக்குழந்தையை மகிழ்வோடு வளர்க்க உன்னால் இயலாது” என்று கூறிவிட்டார் அப்துல் முத்தலிப்.

ஹல்ரத் அப்பாஸ் தாம் வளர்ப்பதாகக் கூறினார்.

“உனக்குக் குழந்தைகள் அதிகம். அவற்றோடு இக்குழந்தையை எவ்வாறு ஆதரிக்க இயலும்?” என்று கூறிவிட்டார்.

 

இறுதியாக, அபூதாலிப் அவர்கள், “நான் பணக்காரன் அல்லன் எனினும் இக்குழந்தையை வளர்க்கும் நற்காரியத்துக்கு நான் தகுதியானவன் என்று நீங்கள் கருதினால், நான் மனப்பூர்வமாக அப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்” என மிகப் பணிவோடு வேண்டிக்கொண்டார்.

அதைக்கேட்டதும், “இதற்கு நீ பொருத்தமானவன் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆயினும் அந்தக்குழந்தையே அதைத் தீர்மானிக்கட்டும்” என்று கூறி, பெருமானார் அவர்களை அருகில் அழைத்து, “அருமைக் கண்மணியே! எனக்கோ வயதாகிவிட்டது. உடலும் தளர்ந்து விட்டது. இனி அதிக நாட்கள் உயிரோடு இருக்கமாட்டேன். ஆகவே, நம் குடும்பத்தவர்களான, இவர்கள் உம்மைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கத் தயாராயிருக்கின்றனர். இவர்களில் எவருடன் இருக்க நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார் முதியவர்.

புன்சிரிப்புத் தவழ, அபூதாலிப் அவர்கள் மடியில் போய் உட்கார்ந்தார்கள் பெருமானார்!

உடனே அப்துல் முத்தலிப் கண்களில் நீர் தளும்ப, தம் மகனை நோக்கி, “அபூதாலிபே! தாய் தந்தையற்ற இக்குழந்தைக்குப் பெற்றோரின் அன்பும், பாசமும் இன்னது என்று தெரியாது. ஆகையால், இக்குழந்தையை, ஒரு குறையும் இன்றி, மகிழ்வோடு வளர்த்து வருவாயாக!” என்றார்.

அதன்பின் சில நாட்களில் அப்துல் முத்தலிப் மனஅமைதியோடு காலமானார்கள்.

Additional information

Authors Name

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *