Description
ஆண்டவன் திருப்புகழும்
சிவகுசமயம்.
சிவாசலபதி திருவடிதுணை.
வல்லிக்கேணியில்
சின்னசாமி ஜோசியர் இல்லத்தில் எழுந்தருளியிருக்கும்
ஆண்டவன் திருப்புகழும்,
பலதலங்களின் திருப்புகழும்.
ஆண்டவன் அடிமையாகும்
சப் என்சீனீர் எ. எஸ். விசுவநாதையரால்
ஆண்டவன் அருளை முன்னிட்டு
வரகவியாக இயற்றப்பட்டு
ஸ்ரீமான் சின்னசாமி ஜோசியரால்
சிவகுகார்ப்பணமாக
சிவகுகமயம்.
பழனியாண்டவன் திருவடிதுணை.
விநாயகர் தோத்திரம்.
இராகம் – காம்போதி – தாளம் – ஆதி.
கயமா முகனே சரணஞ் சரணம்
கருணா கரனே சரணஞ் சரணம்
தயவே புரிவா யிறையே சரணம்
தனியே முதலே சரணஞ் சரணம்
சயமா புயனே பரனே சரணம்
சரசா சிவனார் தநயா சரணம்
மயலே யறவே வருவாய் சரணம்
மயில்வா கனர்சோ தரனே சரணம்.
நாமாவளி:
விநாயகர்.
சிற்பா சித்தத் தற்பரக் களிறே
அற்புதக் காட்சி அன்புட னருளே.
வேல்.
அழகா ரயில்வே லகமே மகிழப்
பழகாய் மனமே பவமோ டிடவே.
கோழி.
சண்முகன் கொடிமேற் சகுனமே யென்தன்
கண்மணி யேநீ கருணை புரியே.
வள்ளி நாயகி.
சண்முகற் கினிய தற்பரை வளியே
சண்பக மேயருள் தந்தெனைக் காவே.
தேவதஞ்சரி.
குகனருள் மேவுங் குஞ்சரி யேபொளிர்
சகமருள் தாயே தஞ்சம தருளே.
குமாபார்.
சிவசண் முகனே சிகிவா கனனே
பவபஞ் சனனே பாக்கிய மருளே
ஆண்டவன் திருப்புகழ்.
தானதந்ததன தானதந்ததன-3 – தந்ததான.
இராகம் – சாவேரி-தாளம்-ஆதி.
கானிருந்தவளி யார்முயங்கவெகு
கூனிருந்தகிழ மாய்விளங்கி அரு
கானகம் பரவியே மகிழ்ந்தவுயர் கந்தவேளே
காடுறைந்தமயி லேறியிங்குகண
மாகவென்றனிடர் தீரவந்துதவு
காமிதந்தருகு ணாவனந்தக்ருபை கொண்டவேலா
ஈனருங்கவனி யாவொழுங்குவரு
மேதனென்கதிவி காசமுந்தியெழ
ஈசவுந்தனது பாதபங்கயப்ர சண்டவீர
ஏறுதந்துமன வானரம்படிய
தேகமிஞ்சியது ராசையுந்தணிய
ஈரநெஞ்சுடைய நீயிவண்கடிது வந்துகாவே.
சீனிகொண்டபணி யாரமுங்கருது
பால்கலந்ததெளி தேனுடன்பரவு
தீனிதந்தருசி, நாவிடங்கனிவு கொண்டுபால்
தேவவுன் குகசு நாமமந்திரம்
தோடுமுன்சரண மேறுசிந்தனைய
தேதரும்சாச மாகுமின்பமது தந்ததாமோ
நானுவந்து தமியேனையன் றடிமை
யாகவென்றகுக னேகடம்புமலி
தாரணிந்துசொலி பூஷணம்புனையு மின்பநாதா
சாமியென்றுனடி யேபணிந்தவெனை
வாடலின்றியணை வாய்விளங்குசின்ன
சாமியின்பமுறு வீடமர்ந்துவள ரெம்பிரானே.
பலதலங்களில் கோவில் கொண்டிருக்கும்
ஆண்டவன் திருப்புகழ். *
தந்தன தந்தன தானதந்தன தானதனந்தன
தானதந்தன-3-தந்ததான.
இராகம் – செஞ்சுருட்டி – தாளம்-ஆதி,
அன்றெதிர்வந்தெனை யாளநன்றொளிர்
பாலவளங்கொடு தானதந்தன
வென்றுநடங்கொளு மாகுகன்களி
யாடுசிவன்கிரி ஏரகம்திரை
அண்டர்தொழுந்திரு வாவினன்குடி
நாகைவளம்பெறு மாயுரம்சிறு மந்தியாடும்
அந்தமுறுங்கபிலாசலம்கடை
யூரருள் வந்திடு சோலையங்கிரி
* இப்பாடல் பலதலங்களிலும் கோவில் கொண்டிருக்குக் ஆண்டவனை அதிகாலையில் துயில் நீங்கி எழுந்தவுடன் தோத் திரம்செய்யுமாறு அச்சிடப்பட்டது. மற்றபொழுதும் பாடலாம்.
சுந்தரமிஞ்சிய சோணையங்கிரி
கோலமிகுந்தக ரூர்குடந்தையு
மந்தணர்தங்குப வானிதஞ்சைநில்
லூர்மயிலம்பழை யாறைதங்கிய கந்தவேளே.
குன்றையரும்பதி சிர்மிகுந்தநள்
ளாறு விரிஞ்சைநெ ரூர்சிதம்பர
முந்திருநின்றிடு பாகையும்பழு
வூர்சுரகுஞ்சரி யார்மணந்தடி
கொண்டபரங்கிரி கூடலெண்கணு
மாகவிளங்குவி ராலியென்றிடு மின்பமேவுங்
குன்று, தணிந்துத னாதிடம்புகு
வோர்வினைசென்றிட நீள்பதந்தரு
கஞ்சி அவந்திம காகனம்பெறு
காசி அவுண்குல மோடவென்றிடர்
குன்றவமர்ந்திடு சீஜயந் திமுள்
வாய்கழுகுன்றமு மேவிகின்றிடு கங்கைபாலா
றுமனங்கனி வாகுமம்பர்சி
ராமலை திண்டுகல் தாவுதுன்பம
கன்றிடுமின்கதிர் காமமுந்திரு
வாதி நெடுங்கள மோடுயர்ந்தொளிர்
சிங்கைபெருங்குடி கோகர்ணஞ்சிவ
காசிஸ்தலம்கழு காசலம்தவ ஜம்புகேசம்
செஞ்சுடர்நங்கையு மேயுவந்தெழி
லாடுறுகந்தணை நாடுகுன்று + நல்
வஞ்சைசுகந்தரு வா கையும்பிர
மாபுரமும்புக லூர்வணங்கிய
*வள்ளிமலை.
சிந்தனை வந்தவ தேதருங்கிரி
சீசயிலம்குட வாயில் வந்துறை செங்கைவேலா
நன்றுதருந்தணி காசலம்பழ
மாமலை கொஞ்சுநெல் வாயில்கந்தசி
ருங்கமதுங்கயி லாசமுஞ்சிச
சேதுவுடன் சக மாருமம்பல
நன்றெனமங்கள மாகவின்பம்
தோடுறைதந்தரு ளீயுமிந்திர மங்கைபாகா
நன்மைநிதந்தர தேவகுஞ்சரி
யார்வள்ளிநங்கைய ரோடுகுங்கும
சந்தனமண்டித சோபையுஞ்சுடர்
நீபமிலங்கிட வேலுடன்சிகி
ன்றுகனிந்தினி தாடமங்கள
மாகிமனங்களி கூடவந்தரு ளெம்பிரானே.
நாமாவளி.
கந்தா குந்தாயுகா குங்கும சோபிதா குஹ
எந்தா யுந்தாதையாய் எங்குரு மோகனா ஹா.
சிவமலைச் சீராளனுக்கு ஹரோஹா
செந்திற் செல்வனுக்கு ஹரோஹா
Reviews
There are no reviews yet.