Sale!

அறிந்திடுவோம் அம்பேத்கரை

0.009.00

Description

அறிந்திடுவோம் அம்பேத்கரை

எழுத்தாளர்: இரா.திருநாவுக்கரசு

இவர்கள்

அந்தச் சிறுவன், அவனுடைய அண்ணன், இவர்களின் சகோதரி மகன்கள் நான்கு பேரும் வெளியூரில் வேலை பார்க்கும் தமது தந்தையின் அழைப்பின்படி கோடை விடுமுறையை அவருடன் கழிப்பதற்காக இங் கிலாந்தில் தயாரிக்கப்பட்ட புத்தாடை அணிந்து கொண்டு, உணவுமூட்டை, செலவுக்குப் பணம் எல்லாம் எடுத்துக் கொண்டு உற்சாகமாகத் தொடர் வண்டியில் புறப்படு கின்றனர். அவனது தந்தையார் வந்து இறங்கும் இடத்தைக் குறிப்பிட்டு அங்கிருந்து இவர் களை அழைத்துச் செல்வதற்கு அவரது உதவியாளரை அனுப்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மாலை 5.00 மணியளவில் தொடர்வண்டி அந்த இடத்தை அடைகிறது. வண்டியிலிருந்து இறங்கிய மற்ற பயணி கள் எல்லோரும் சென்றுவிடுகின்றனர். தம்மை அழைத்துச் செல்ல வருவதாகச் சொல்லியிருந்த எவரும் வராத தால் நடைமேடையில் காத்திருக்கிறார்கள்.

ஒரு மணிநேரம் கழிந்தது. நிலைய அதிகாரி சிறுவர்களின் அருகில் வந்து விசாரிக்கிறார். இவர்கள் விளக்குகிறார்கள். அந்த அதிகாரி இவர்களின் தோற்றத்தினைப் பார்த்துப் பார்ப்பனச் சிறுவர்களாகத்தான் இருப்பார்கள் என மிகவும் அனுதாபம் கொள்கிறார். இந்துக்களின் வழக் கப்படி, திடீரென அந்த அதிகாரி நீங்கள் என்ன சாதி எனக் கேட்கிறார். கள்ளமில்லா உள்ளம்கொண்ட அச்சிறுவன் தாமதிக்காமல் மகர் (தீண்டப்படாத) சாதி என்கிறான். அதுவரை அன்பொழுகப் கொண்டிருந்த நிலைய அதிகாரிக்கு முகம் மாறிவிட்டது. வெறுப்புடன் தனது அறைக்குப் போய்விடுகின்றார்.

பேசிக்

சிறுவர்களுக்குக் குழப்பமும், சோகமும் சேர்ந்து திகைக் கின்றனர். அரைமணிநேரம் கழித்து அந்த அதிகாரி அருகில் வந்து என்ன செய்வதாகத் திட்டம் என வேண்டா வெறுப்புடன் கேட்கிறார். எங்களுக்கு வாடகை மாட்டு வண்டி கிடைத்தால் நாங்கள் புறப்படுவோம் என்கின்றனர். அங்கு வாடகைக்குப் பல மாட்டுவண்டிகள் இருந்தன. அதற்குள் அச்சிறுவர்களின் சாதி மாட்டு வண்டிக்காரர் களுக்குத் தெரிந்துவிடுகின்றது.

எவரும் இச்சிறுவர் களை வண்டியில் ஏற்றித் தீட்டுப்படத் தயாராக இல்லை. நேரம் கடக்கின்றது. சிறுவர்களோ வாடகை இருமடங் காகத் தருவதாகச் சொல்லியும் எந்த வண்டிக்காரரும் வர சம்மதிக்கவில்லை. இவர்களின் நிலையைக் கண்டு கல் மனமும் கரைவதுபோல், நிலைய அதிகாரி இவர் களிடம் உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியுமா ? என் கிறார். இவர்களுக்கு ஏற்கெனவே பழக்கம் இருந்ததினால் தெரியும் என சொல்கின்றனர். வண்டிக்கு இரு மடங்கு வாடகை. சிறுவர்களே ஓட்டிக்கொள்ள வேண்டும். வண்டிக்காரர் பயணத்தின்போது நடந்துவரவேண்டும் (தீட்டிலிருந்து தப்பிக்க) என நிலைய அதிகாரி பேசி வண்டிக்காரரை ஒப்புக்கொள்ள வைக்கிறார். சிறுவர்கள் வண்டி ஓட்ட, வண்டிக்காரர் நடந்து வர மாலை 7.00 மணிக்கு பயணம் தொடங்குகிறது.

எங்கும் கும்மிருட்டு. நீண்ட பயணம். பிள்ளை களுக்குப் பயம். அழுகிறார்கள்.

வண்டிக்காரர் சமாதானம் சொன்னபடி நடக்கிறார். தூரத்தில் ஒரு வெளிச்சம். அருகில்

போனால் அது ஒரு சுங்கச்சாவடி. கடும் பசியால் வாடிய சிறுவர்கள் வண்டிக்காரரிடம் நாங்கள் சாப்பிட வேண்டும். தண்ணீருக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். உங்கள் சாதி தெரிந்தால் தண்ணீர் தரமாட்டார்கள். நீங்கள் யார் என்று கேட்டால் முக மதியர் என்று சொல்லுங்கள் என்றார்.

சுங்கச்சாவடி அலுவலர் அதேபோல் யார் நீங்கள் என்றார். முகமதியர் என்றனர் சிறுவர்கள். அவர் இந்து மனநிலையிலேயே தண்ணீர் இங்கு இல்லை என்று சொல்லிவிட்டார். இரவு நேரம் ஆனதினால் தண்ணீருக்கு வழியில் லாமல் தாம் கொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிட முடியாமல் பசியாலும், இருள் பயத்தினாலும் வண் டிக்கு அடியிலேயே படித்து இரவைக் கழிக்கின்றனர். அடுத்த நாள் காலை பசி மயக்கத்துடன் தமது பய ணத்தைத் தொடங்குகிறார்கள். ஒன்பது வயது சிறு வனின் உள்ளத்தில் இந்நிகழ்ச்சியானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அச்சிறுவன் வண்டியில் அமர்ந்தபடி சிந்தித்துக் கொண்டே போகிறான். பள்ளியில் மாணவர்களுடன் வரிசைப்படி அமரவைக்காமல் தனியாகச் சாக்குத் துணியில் அமர வைக்கிறார்கள். அந்தச் சாக்குத் துணி யைக்கூடப் பள்ளியை சுத்தம் செய்யும் வேலைக்காரர் தொடமாட்டார். பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குப் போகும் போது புத்தகப்பையுடன் சாக்குத் துணியையும் கை யோடு எடுத்துக்கொண்டு போய் காலையில் பள்ளிக்கு வரும்போது அந்த சாக்குத் துணியோடு வரவேண் டும். பள்ளியில் இருக்கும்போது தண்ணீர்த் தாகம் ஏற்பட்டால் பள்ளி ஆசிரியரின் பணியாளரின் அனுமதி பெற்று தீண்டத்தகுந்த ஒருவர் குழாயைத் திறந்தால்தான் தண்ணீர் குடிக்க முடியும்.

பள்ளிப்

ஒரு வேளை பள்ளிப் பணியாளர் இல்லாவிட்டால் தண்ணீர் குடிக்க முடியாது. குடியிருக்கும் இடத்தில்கூட பணம் எவ் வளவு கொடுத்தாலும் சலவையாளர் துணியைத் துவைத்துக் கொடுக்க முன்வரமாட்டார். வீட்டில் சகோதரிகள்தான் அந்த வேலையைச் செய்வார்கள். பணம் எவ்வளவு கொடுத்தாலும் முடிவெட்டுபவர்கூட எங்களுக்கு முடிவெட்டிவிடமாட்டார். அதை எங்கள் சகோதரிதான் வெட்டிவிடுவார். இப்படித் தீண்டாமைத் தீயில் கறுகிக்கொண்டும் எண்ணச்சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அந்த சிறுவன் யார்? விடுதலை பெற்ற இந்தியாவிற்கு அரசமைப்புச் சட்ட வரைவை உருவாக்கித் தந்த பீம்ராவ் என்ற இயற்பெயர் கொண்ட மேதை அம்பேத்கர்தான்.

பள்ளிப்படிப்பை முடித்த அம்பேத்கர் 1912இல் பி.ஏ. தேர்ச்சி பெற்றார். பரோடா மன்னரின் உதவியால் 10 ஆண்டுகள் அவரது சம தானத்தில் வேலைபார்க்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல் கிறார். கொலம்பியா பல்கலைக்கழகத் தில் அவர் அரசியல், வரலாறு, சமூகவியல், மானுடவியல், தத்துவம், உளவியல், பொருளியல் ஆகிய துறைகளைப் படித்தார். தினமும் படித்தார்.

18 மணிநேரம்

1915-இல் Administration and Finance of East India Company (கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும், நிதியமைப்பும்) என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை அளித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். இந்தியாவின் தேசிய பங்கு வீதம் – வரலாற்று மற்றும் பகுப்பாய்வு மதிப்பீடு என்ற தலைப்பில் (National Dividened of India,a Historical and Analytical Study) ஆராய்ச்சி செய்து முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார். 1916-இல் மானுடவியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு Castes in India – their Mechanism, Genesis and Devolpment (இந்தியாவில் சாதிகள் – அவற்றின் நுட்பம், மூலகார ணம், வளர்ச்சி) என்ற கட்டுரை வாசித்தார்.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறிந்திடுவோம் அம்பேத்கரை”

Your email address will not be published. Required fields are marked *