அபிராமி அந்தாதி மூலமும் உறையும்
அபிராமி அந்தாதி
அபிராமி பட்டரால் என்பவரால் அபிராமி அந்தாதி (Abirami Anthathi) என்ற நூல் இயற்றப்பட்டது. அமிர்தகண்டேசுவரர் என்ற அபிராமி அம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் உள்ளது. சிவபெருமான் மார்க்கண்டேயருக்கு காட்சியளித்த தலம் திருக்கடையூராகும்.
அபிராமி அந்தாதியில் உள்ள மொத்த பாடல்கள் எண்ணிக்கை 100 ஆகும்.
ஒரு பாடலின் கடைசி அடியின் இறுதிச்சொல் (அந்தம்), வரும் பாடலின் முதல் சொல்லாக (ஆதி) அமையுமாறு உள்ள இலக்கணமுறை அந்தாதி ஆகும்.
(அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்)
அபிராமி அந்தாதி மூலமும் உறையும்
தேவகி முத்தையா என்பவர் ஆராயசிபடிப்பிற்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சமர்ப்பித்துப் பட்டம் பெற்றிருக்கின்றார்.
இவர்மேலும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பின் தருமை ஆதீனத்தின் ஞானசம்பந்தப் பதிப்பகதின் வெளியீடாக “அபிராமி அந்தாதி ஆராய்ச்சி” என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றிருக்கின்றது.
அபிராமி அந்தாதிப் பாடல்களை விளக்கி “அபிராமி அந்தாதி விளக்கவுரை” எனும் தலைப்பிலும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார்.
அபிராமி அந்தாதி பாடல் வரிகள்
கவிஞர் கண்ணதாசன் உரை
காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே.
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.
பாடல் 1:
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே
உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.
பாடல் 2:
துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.
நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
மேலும் சமயம் சார்ந்த நூல்களை பதிவிறக்க.
There are no reviews yet.