Sale!

ஆசிய ஜோதி

0.009.00

Description

ஆசிய ஜோதி

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

ஆசிய ஜோதி 

1.புத்தர் அவதாரம்

இறைவன் தேவர் சபையில் தெரிவித்தல்

‘வையகத்தில் உயிர்கள்மிக வாடக் கண்டேன்;

வழியறியாது அவைமயங்கி வருந்தக் கண்டேன்;

மெய்யிதுஎன்று உய்யுநெறி காட்டிநன்மை

விளைவிப்பார் எவரையுமே கண்ணிற் காணேன். 1

எண்ணிரிய சென்மங்கள் எடுத்து முன்னம்

எவ்வுடம்பின் எவ்வுயிருக்கும் இடர்க ளைந்தேன்;

மண்ணுலகம் ஈடேற இன்னும் ஓர்கால்

மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டேன். 2

இப்பிறப்பை யல்லாது பிறப்பு வேறிங்கு

எனக்குமில்லை; என்னை வழிபட்டு வாழும்

ஒப்பரிய அடியவர்கள் எவர்க்கும் இல்லை;

உண்மைஈது எந்நாளும் உண்மை யாமால். 3

வானெழுந்து வளர்இமய மலையின் தென்பால்

வாழும்உயர் சாக்கியர்தம் மன்ன னுக்கு

யானுமொரு மகனாகச் செல்வேன்” என்றான்.

இமையவரை நோக்கிஅருள் இறைவன் மாதோ! 4

                மாயாதேவி கனாக் காணுதல்

                வேறு

அந்நாளில் அவ்விரவில் சுத்தோத னப்பேர்

அண்ணற்கு வாய்த்தமனை அலர்மங்கை யனையாள்

எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்

எந்நாடும் எவ்வுயிரும் இன்புறவே அம்மா! 6

                வேறு

ஆறு கதிரொளி செய்திடுமீன் – கண்ணுக்கு

அற்புதக் காட்சி அளித்திடுமீன்

ஏறும் அழகு பொலிந்திடுமீன் – திசை

எட்டும் ஒளிர ஒளிவிடுமீன். 6

சின்னஞ் சிறுமருப் பாறுளதாய்க் – காம

தேனுவின் பால்நிறம் பெற்றுள்ளதாய்,

மன்னும் மதவேழம் போன்றிடுமீன் – இந்த

வையம் ஒளிர ஒளிவிடுமீன். 7

விண்ணகம் விட்டு விரைந்திறங்கி – வரும்

வீதி யெலாம்ஒளி வீசிவந்து,

மண்ணகம் வாழ வலந்திரிந்து தேவி

மாயை வயிற்றில் புகுந்ததுவே.8

மாயை மாயாதேவி; புத்தரது அன்னை.

                வேறு

வலமருங்கில் விண்மீனும் வயிற்றிற் பாய

மாதேவி துயிலுணர்ந்து மகிழ்ச்சி யுற்றாள்;

உலைவறியாத் திருவருளை வியந்து றின்றாள்;

ஒருதாயுங் கண்டறியா இன்பங் கண்டாள். 9

                உலகில் நன்மை விளைதல்

வேறு

காலைக் கதிரோன் உதிக்குமுன் – ஆசிய

கண்ட மெலாம்ஒளி கண்டதுவே;

வேலைத் திரைகள் அடங்கினவே – திசை

வெற்புகள் நின்றுகூத் தாடினவே.

பட்ட மரங்கள் தளிர்த்தனவே – எங்கும்

பாழ்ங்கிண றும்ஊறிப் பொங்கினவே;

திட்டுத் திடர்மணற் காடும் சுடுகாடும்

சில்லென்று பூத்துச் சிலிர்த்தனவே.

சீரிய ஓடை குளங்களிலே – நல்ல

செந்தா மரைகள் மலர்ந்தனவே;

பாரிலே அவ்விராக் கண்ட – புதுமையைப்

பாடிட வல்லவர் யாரேயம்மா!

வேறு

ஓண்சுடர் உலகில் உதித்தெழு காலை

மன்னிருட் சோலையோர் பொன்னிறம் பொலிய,

நிரந்தொளி பரந்து நிறைவது போல,

மாயையின் மனத்தெழு மகிழ்ச்சியும் பொங்கி

இடைவெளி யின்றி எவ்வெவ் வுலகும்

பாதல மீறாப் படர்ந்து சென்றது;

“பிறந்திட இறந்தீர்! இறந்திடப் பிறந்தீர்!

எழுமின்! எழுமின்! யாவரும் எழுமின்!

புத்த பெருமான் புவியில் உதித்தனன்;

அவனை வணங்குமின்; அவன்வழி பற்றுமின்;

அவனுரை கேண்மின்; அழிமனம் ஒழிமின்;

நலமுறு மெனவே நம்பி நாடுமின்;

உள்ளந் தெளிமின்; உறுதி கொண்மின்;

உய்யும் வழிஈது; உண்மையும் ஈதாம்;

என்னும் மொழிகள் எவ்வெவ் விடத்தும்

மந்திர மொழிகளாய் வந்தெழக் கேட்டனர்.

அதனால்,

அமைதி நிலவி, அன்பு தழைத்துக்

குவலய முழுதும் குதூகல முற்றது.

கடலும் மலையும், காடும் மேடும்,

பூவுல கறியாப் புதுமணம் கமழ,

இனிய தென்றல் எழுந்து வீசியது.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆசிய ஜோதி”

Your email address will not be published. Required fields are marked *