Description
எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல Read Online
எகிப்தின் மர்மங்கள்: பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல
இந்தப் புத்தகத்தை எழுத (மன்னிக்கவும் தட்சு செய்ய, இப்பலாம் யாருங்க எழுதிகிட்டு உட்கார்ந்த போது எகிப்திய நாகரீகத்தின் சுவாரசியமான சில விசயங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் நண்பர்களின் வேண்டுகோள் விரிவாக எழுதவேண்டும் என்பது. அதுவும் சரிதான் எனப் பட்டதால் எழுதுவதுதான் எழுதுகிறோம் கொஞ்சம் விரிவாக இந்தப் புத்தகத்தை எழுதலாம் என்று மனம் மாறியது. மனம் மாறிவிட்டாலும் கடலின் அலையில் காலை நனைப்பதற்கும் ஆழ் கடலில் நீந்துவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறதுதானே.
வரலாற்று ஆய்வாளர்களுக்கு, தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு. எழுத்தாளர்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு என்று பலருக்கும் எகிப்திய நாகரீகம் ஒரு கடல் போன்றது. அதில் முடிந்தவரை நீந்திக் கரை சேரப் பார்க்கலாம் நண்பர்களே. ஒரு ஊருல ஒரு ராசா இருந்தாராம் அப்படின்னு ஆரம்பிச்சா இன்றைக்குக் குழந்தைகள் கூடக் கேட்கமாட்டார்கள். ஆகையால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவாரசியமான விசயங்களைப் பிய்துப்போட்டு அவைகளைப் பின்பற்றி ஒரு முழுமையான எகிப்திய நாகரீகம் குறித்த அறிமுகத்தை எழுத முயற்சி செய்கிறேன்.
Reviews
There are no reviews yet.