Description
குண்டலகேசி மூலமும் உரையும்
குண்டலகேசி Free PDF
- குண்டலகேசி PDF (வ. வேணுகோபாலன் உரை ) PDF Download
குண்டலகேசி (Kundalakesi) தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. குண்டலகேசி ஒரு புத்த சமயம் சார்ந்த நூலாகும். வேறு பல தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய உரை ஆசிரியர்கள் தங்கள் உரை நூல்களில் குண்டலகேசி நூலின் பாடல்களை எடுத்துக்கட்டியுள்ளார்கள்.
குண்டல கேசி நூலில் கிடைத்துள்ள அணைத்துப்படல்களும் இவ்வாறு வேறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. 19 பாடல்கள் மட்டுமே இவ்வாறு முழுமையாக கிடைத்துள்ளன.
குண்டலகேசி அறிமுகம்
குண்டலம் + கேசி- குண்டலகேசி ஆகும். குண்டலம் காதணி, கேசி-தலைமயிர். வளைந்த தலைமயிரை உடையவள் குண்டலகேசியாக இருக்கலாம். இந்நூல் குண்டலகேசி விருத்தம் என்றும் அழைக்கப்பெறுகிறது.
வளையாபதியில் 72 பாடல்கள் கிடைத்து உள்ளன. குண்டலகேசியில் 19 பாடல்களே கிடைத்துள்ளன.
இந்நூல் பற்றிய செய்தியை தொல்காப்பியர் உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை, நீலகேசி, சிவஞான சித்தியாவிர்த்தி ஞானபிரகாச எழுதிய உரை இவற்றிலிருந்து குண்டலகேசி பாடல்கள் கிடைக்கின்றன.
ஐந்து சிறுகாப்பியங்கள் ஒன்றான நீலகேசி என்னும் சமணநூல் குண்டலகேசிக்கு மறுப்பாக எழுதியுள்ளதாகக் கூறுவர்.
குண்டலகேசி பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல். நீலகேசி உரையில் குண்டலகேசி என்னும் பெண் ஆபரணம் என்னும் நகரில் சமண ஆசிரியரான நாதகுத்தனாரோடு வாதிட்டு வென்றாள் என்ற செய்தி காணப்பெறுகிறது.
குண்டலகேசி PDF
இந்த குண்டலகேசி நூலின் மின்பதிப்பு (குண்டலகேசி PDF) இணைத்துள்ளேன். விரையில் ePub மற்றும் Mobi வடிவில் இந்த தளத்தில் குண்டலகேசி கிடைக்கும்.
குண்டலகேசி என்னும் வணிகப்பெண் வணிக மரபினனும், களவுத் தொழிலை மேற்கொண்டவனுமான காளன் என்பவனைக் காதலித்து மணம்புரிந்து கொண்டாள். ஊடற் காலத்தில் கணவனைக் கள்வன் என இகழ்ந்தாள். சினம் கொண்ட கணவன் அவளைக் கொல்லக் கருதி, ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான்.
காளனின் வஞ்சகத்தை உணர்ந்த குண்டலகேசி ஒரு சூழ்ச்சி செய்தாள். இறுதியாக அவனை ஒருமுறை வலம்வந்து வணங்க விழைவதாகக் கூறினாள். அவனும் அனுமதி அளித்தான். கணவனைச் சுற்றி வலம் வந்தபோது மலை உச்சியிலிருந்து அவனைக் கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.
வாழ்க்கையின் வெறுப்புற்ற குண்டலகேசி, உஞ்சை மாநகர் சென்று அருகச் சந்திரன் என்னும் பௌத்தத் துறவியுடம் அருள் உபதேசம் பெற்றுப் புத்தரின் பெருமைகளை அறவுரைகளை எங்கும் பரவ வகை செய்தாள்.
பெருங்காப்பியங்கள்
தமிழில் பெருங்காப்பியங்கள் என்று கூறப்படுவன 5 அவை முறையே
- சிலப்பதிகாரம்
- மணி மேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
நாதகுத்தனார்
குண்டலகேசி நூலின் ஆசிரியர் நாதகுத்தனார். இவர் பௌத்த சமயத்தை சார்ந்தவர் என நீலகேசி உரை (பாடல் 344) குறிப்பிடுகிறது. இவருடைய காலம் கி. பி 10-ம் நூற்றாண்டு என கருதப்படுகிறது.
குண்டலகேசி நூல் வரலாறு
கேசி என்ற சொல்லின் பொருள் பெண்களின் கூந்தலை குறிக்கும், மேலும் சுருண்ட கூந்தலை குறிப்பதற்கு குண்டலகேசி என்ற பெயரை பயன்படுத்துவார்கள். இந்த கதையின் நாயகியின் கூந்தல் அவ்வாறு சுருண்டு இருந்ததால், இதன் மூலம் நூலிற்கு குண்டலகேசி என பெயர் வந்தது. குண்டலகேசி காப்பியம் முழுவதுமாக நமக்கு கிடைக்கப்படவில்லை.
குண்டலகேசி கதை சுருக்கம்
குண்டலகேசி கதையின் நாயகியின் பெயர் பத்திரை என்பதாகும். இவருடைய தந்தையார் இராச கிருக நாட்டின் அமைச்சராக பணியாற்றினார்.
ஒரு நாள் கள்வன் ஒருவன் காவலாளிகளால் கைது செய்யப்பட்டு அரசவைக்கு கொண்டு வரப்படுகிறார்.
பத்திரை காதல்
அந்த கள்வனின் இளம் வயது தோற்றத்தையும் கவர்ச்சியையும் கண்டு தன் மனதைப் பறி கொடுக்கிறாள் நம் கதையின் நாயகி பத்திரை. இதை அறிந்து கொண்ட பத்தியறையின் தந்தை, அரசரிடம் நிறைய பொருள் கொடுத்து அந்த கள்வனை தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.
சிறிது காலம் இருவரும் மகிழ்ச்சியாக இல்லறவாழ்வை மேற்கொள்கின்றார்கள், பிறகு ஒருநாள் விளையாட்டாக ‘நீ கள்வன் மகன் அல்லனோ” என கேட்க கோபம் கொண்ட அந்த கள்வன், பத்திரையை கொலைசெய்துவிட்டு அவள் நகைகளை பரித்துக்கொள்ள திட்டம் தீட்டுகிறான்.
பத்திரை கொலை
அவனூடைய திட்டத்தின்படி தன் மனைவியை ஒரு மலை உச்சிக்கு கொண்டு சென்று அங்கிருந்து அவளை கீழே தள்ளி கொலை செய்வது என முடிவு செய்கிறான்.
இந்தத் திட்டத்தைப் புரிந்து கொண்ட பத்திரை, கணவன் பேச்சை கேட்பது போல நடித்து தான் இறப்பதற்கு முன்பாக உன்னை வலம் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறாள். எனவே கணவனை வலம் வருவதுப்போல நடித்து பின் பக்கதில் இருந்து அவனை மலையுச்சியிலிருந்து தள்ளிவிடுகிறார் பத்திரை.
குண்டலகேசி சமண சமயத்தை தழுவுதல்
அதன்பிறகு வாழ்க்கையை வெறுத்த குண்டலகேசி அங்குமிங்கும் அலைந்து திரிந்து ஒருவழியாக சமண சமயத்தைத் தழுவுகிறாள். தன் தலைமுடிகளை மழித்துவிட்டு சமண துறவியாகின்றாள். பிறகு உடனடியாக பத்திரையின் மயிர் சுருண்டு வளர்கிறது. இதனால் பத்திரை-க்கு குண்டலகேசி என அழைக்கப்படுகின்றாள்.
சமண சமயக் கொள்கைகளை நன்கு கற்றறிந்து மேலும் பிற சமய கருத்துகளையும் பற்றி படித்து தன் அறிவை வளர்த்துக் கொள்கிறாள்.
குண்டலகேசி புத்தரிடம் சரணடைதல்
பெரிய அறிஞர்களுடன் சமயவாதம் செய்ய துவங்குகின்றாள், இவ்வாறு சமயவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள், கௌதம புத்தரின் மாணவர் சாரிபுத்தரிடம் தோற்று விடுகிறாள். எனவே சாரிபுத்தரின் ஆணைப்படி புத்த துறவியாக ஒப்புகொள்கிறாள்.
சாரிபுத்தர் குண்டலகேசியைப் (பத்திரை) புத்தரிடம் அழைத்துச் சென்று, அவர் முன்னிலையில் குண்டலகேசி பௌத்தத் துறவியாகிறாள்.
குண்டலகேசி பாடல்கள் விளக்கம்
புலனடக்கமே மெய்யான தவம், இன்பமும் புகழும் மனத்தூய்மை உடையவர்க்கே உரியன. அவாவினை நுகர்ந்து அழிக்கலாம் என்பது எரியும் தீயை நெய்யினால் அவிக்கலாம் என்பதனோடு ஒக்கும்.
நாளென்னும் வானில் வாயில் மக்கள் தலை வைத்துள்ளனர். எல்லாம் ஊழால் அமைவன, ஆதலால் இழப்பின்போது வருந்துதல் வேண்டாம். ஆக்கத்தின் போது மகிழ்தலும் வேண்டாம் என்பன போன்ற அறங்களைக் குண்டலகேசி திறம்படி எடுத்துக் கூறுகிறது.
கிடைத்தவை சில பாடல்களே எனினும் அத்தனையும் முத்தான பாடல் களாகத் திகழ்கின்றன.
(ஐம்பெருங்காப்பியங்கள் – தொகுதி – 5 – உரையாசிரியர். பேராசிரியர். ஜெ. ஸ்ரீசந்திரன் – வர்த்தமானன் 1, பதிப்பகம்- நான்காம் பதிப்பு – 2007 – பக். 514 )
இது தமிழிற் சிறந்த ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. இதில் கூறப்பெறுவன புத்தவாதம். இஃது இப்பெயர் பெற்ற வணிக குலமகளிரின் வரலாறு கூறி அவள் பல சமயங்களை வென்று புத்தமதத்தை நிறுத்தினதைத் தெரிவிக்கும்.
இஃது ஒரு பௌத்த பேய்க்கும், சைனப் பேய்க்கும் | நடந்த வாதத்தைப் பற்றிக் கூறும் வாதநூல் ஆகும்.
(- அபிதான சிந்தாமணி செம்பதிப்பு – ஆ. சிங்கார வேலுமுதலியார் – சீதை பதிப்பகம் – 2010 – பக். 566)
குண்டலகேசியின் ஆசிரியர் தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றவர் என்பதை பல பாடல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, திருக்குறளையும் சீவகசிந்தாமணியையும் நன்றாக கற்றுள்ளார் என்பது சில பாடல்கள் வழி தெரிகின்றது.
யாக்கை நிலையாமை என்ற பாடலைத் தரும்போது, திருக்குறளில்,
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
குறள். 331
இதே கருத்து சீவகசிந்தாமணி பாடலில் உள்ளது.
சாதலும் பிறத்தல் தானும் தம்வினைப் பயத்தின் ஆகும் ஆதலும் அழிவும் எல்லாம் அவைபொருட்கு இயல்புகண்டாய் நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுணர் வின்மை அன்றே பேதைநீபெரிதும் பொல்லாய்பெய்வளைத் தோளி என்றான்
சிந்தாமணி. 269
குண்டலகேசி நூல் முழுவதும் கிடைத்திருந்தால் மணிமேகலை யுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குத் துணையாக அமையும்.
Reviews
There are no reviews yet.