Sale!

கற்காலம்

0.009.00

Description

கற்காலம்

ஒரு காலத்தில் ஊர் ஓரமாகப் பெரிய கல் ஒன்று இருந்தது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்னரே அந்தக் கல் மட்டும் தோன்றியதாக அறியப்ப- டுகிறது. ஆரம்பத்தில் ஊரின் நடுவே தான் கிடந்ததாம். பிறகு கடும் மழை வந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் ஊரின் தெற்குப் புறம் போய் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்திருந்தது.

அடுத்தடுத்த மழைவெள்ளங்களில் அதன் பாதிக்கு மேல் நீரில் மூழ்க மீதி மட்டும் தரைக்கு மேலே எஞ்சியது. நாளடைவில் அந்தக் கல்லின் மணம்

ஊரெங்கும் பரவப் பக்கத்து ஊர்க்காரர்களும் வந்து வந்து பார்த்துச் சென்றனர். அந்த ஊரிலேயே அப்படி ஒரு கல்லை யாரும் பார்த்ததில்லை. அத்தனை வண்ணங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

உறுதியான அடிப்பகுதியும் அதே நேரம் மிருதுவான மேற்பகுதியும் கொண்டிருந்ததால் காலப்போக்கில் நான்கு திசைகளிலும் விரிந்து உடைந்து பிரியத்தொட- ங்கியது. அந்த ஊரைச் சார்ந்த மூவர் அந்தக் கல்லை மூன்று பகுதிகளாகப் பிரித்து சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த மூவருக்கும் கீழே இன்னும் சிலரும் அந்தக் கல்லை உள்வாடகைக்கு எடுத்திரு- ந்தனர். பிரிந்து சென்ற கற்களையும் ஆங்காங்கே சிலர் வெறுமனே வைத்து உருட்டிக் கொண்டிருந்தனர்.

வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட கல்லும் மண்ணும் சேர்ந்து இக்கல்லை மேலும் பெரிதாக்கவே நாளடைவில் அசதியில் கிடைமட்டமாகப் படுத்துவி- ட்டது. அதன் பின்னர் கல்லின் வேறு வேறு பகுதிகள் தங்களைத் தனித் தனிக் கல்லாகவே நினைத்துக் கொண்டன. தங்கள் கூறுகளையும் மாற்றிக் கொண்டன. இப்படியான ஒரு சூழ்நிலையில் வடமேற்கு திசையிலிருந்து மாடு மேய்க்க வந்த கூட்டத்தினர் இதிலிருந்து உடைந்த கற்களில் ஒன்றைத் திருடித் தமதாக்கிக் கொண்டனர். அதோடு நில்லாது தெருவில் கிடந்த புழுதி மண்ணை வடக்கிலிருந்து கிடைத்த வற்றாத விலையில்லா மழை நீரில் கரைத்துத் தங்கள் கல்லோடு சேர்த்து அதை ஊதிப் பெரியதாக்கி அதைத் தூக்கிக் கூரை மேல் வைத்துவிட்டு அதுவே முழுமுதற்கல் என்று பரப்ப ஆரம்பித்தனர்.

அது மட்டுமல்லாமல் மிஞ்சிய புழுதியை இந்தப் பழைய கல்லிலும் மேற்புறம் தடவி அதுவும் இதுவும் ஒன்றுதான் அது கூரைக்கு மேலே இருப்பதால் மேலானது. அது கடவுளின் கல். ஆகவே அனைவரும் அந்தக்கல்லை வணங்கலாம். இந்தப் பழைய கல் கீழே கிடக்கும் படிக்கல் எனவும் கதைகட்டிவிட்டனர். இப்போது அதை நம்பி இந்தக் கல்லைக் கூறு போட்டு சொந்தம் கொண்டாடியவர்களும் இன்னும் கொஞ்சம் புழுதியை வாங்கித் தாங்களே தங்கள் பகுதிக் கல்லின் மேல் பூசிக்கொண்டனர். காலப்போக்கில் எது புதியது எது பழையது என்றே யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. இதில் கல்லுக்கும் நிறைய வருத்தம். இருப்பினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாகப் படுத்திருந்தது.

முழுமுதற்கல்லை வைத்திருந்தவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் அதை உடைக்கக் கிளம்பிய இருவர் அங்கிருந்து துரத்தப்பட்டு தெருத்தெருவாக அலைந்து இங்கும் வந்து அந்தப் புழுதியைக் கண்டதும் அதை நீக்கிப் பழுதுபார்க்க எண்ணி புத்தாடைகளால் அழகுபார்த்தனர். கல்லும் தன்னகத்தே மகிழ்ந்து தலைமுதல் கால் வரை குண்டலம் மணியாரம் வளையல் சிந்தாமணி சிலம்பு என ஐந்து பெரிய நகைகளையும் ஐந்து சிறு நகைகளையும் கேட்டு வாங்கி அணிந்து கொண்டது. அது மட்டுமல்லாமல் தன் தேவையற்ற பகுதிகளை நீக்கி கீழ்க்கணக்கையும் மேல் கணக்கையும் நேர்செய்து தன்னைச் அழகியதோர் சிலையாக்கிக் கொண்டது. ஆகவே

கண்கூசும் வண்ணம் ஜொலிக்கத் தொடங்கியது.

இப்படியே விட்டுவிட்டால் கல்லைச் சொந்தம் கொண்டாடிவிடுவார்கள் என்றெண்ணிய அந்த ஊர்மக்கள் அந்த இரண்டு பேருடன் வந்தவர்க- ளையும் கர்ண கொடூரக் கேள்விகளைக் கேட்டு அடியில் ஆப்பு சொருகி அனுப்பிவிட்டனர். வடக்குக் கல்லைப் போலவே காவி நிறத்தில் இன்னும் இரண்டு மேலதிகத் துணியை வாங்கிச் சுற்றிவிட்டனர். இந்தக் காவித் துணியை குறுக்காகக் கிடைமட்டமாகப் போடுவதா இல்லை செங்குத்தாக மேலிருந்து கீழாக சுற்றுவதா என்ற குழப்பம் எழுந்தது. பின்பு இந்தக் குழப்பத்தில் கல்லைப் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதால் குறுக்காகவும் பின் நெடுக்காகவும் தத்தம் வசதிக்கேற்ப போட முடிவுசெய்யப்பட்டது. கல்லும் தப்பிக்க நினைத்துத் தப்பிப்பதாக எண்ணி சிக்கிக் கொண்டது. கூடவே மஞ்சளும் குங்குமமும் தூவி மங்களகரமானதாக மாற்றப்பட்டது. மேற்பகுதியை நெற்றியாக்கிப் பொட்டுக்கட்டி விட்டனர். பின்பு அந்தப்

பொட்டுக்கட்டுவதையே ஓரு குலத் தொழிலாக்கி விட்டனர். கூத்தும் கும்மாளமுமாய்க் கழிந்தன பொழுதுகள். நாளொரு பஜனையும் பொழுதொரு பூஜையுமாக அந்தக் கல் திமிலோகப்பட்டது.

பின்பு எல்லையிலிருக்கும் கல் என்பதால் நடுகல் இடுகல் என்றெல்லாம் பெயர் சூட்டிப் பின் அதெல்லாம் வேண்டாம் என்று ஒரு வீச்சருவாளை அருகில் வைத்து அய்யனார் என்று பெயர் வைக்கப்பட்டது. அய்யனார் என்பது நீளமாக இருந்ததால் அய்யன் என்று சுரு- க்கப்பட்டது. அய்யன் என்பது மரியாதைக் குறைவாக இருந்ததால் அய்யர் என்று மாற்றப்பட்டது. அய்யர் என்று வைத்துவிட்டு பூணூல் இல்லாமல் எப்படி இருப்பது என்று ஒரு பூணூலும் சுற்றப்பட்டது. கூடவே எதிர்க்கேள்வி கேட்பவர்களை இல்லாமல் செய்ய பலவித ஆயுதங்களும் திணிக்கப்பட்டன. ஏற்கனவே காவி வண்ணத் துணியால் மூச்சுத் திணறிக்கிடந்த கல்லுக்குப் புதிதாக சாற்றப்பட்ட பூணூலோ தூக்குக் கயிறு போல் கழுத்தை இறுக்கத் தொடங்கியது.

இப்படியான சூழ்நிலையில் ஊரே வட மேற்கிலிருந்து குறுக்கு சந்து வழியாக வந்த கொள்ளையர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது. அவர்கள் தங்கள் பங்குக்கு கல்லும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று காற்றைக் காவலாக வைத்துவிட்டுக் கீழே வந்தனர். இந்தக் கல் இஷ்டத்துக்குப் பிளந்து கிடந்தது. அப்படியும் பலங்கொண்ட மட்டும் நகர்த்திப் பார்த்தபோது இம்மியளவும் அசையவில்லை. இது வேலைக்காகாது என்று ஒரு பச்சைத்துணியை முக்காடு போல் தலையில் போர்த்திவிட்டு அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் கல்லின் கண்பார்வை மறைந்தது தான் மிச்சம்.

இப்போது கல் எங்கே இருக்கிறதென்று கல்லே தன்னைத் தேடவேண்டிய நிலை. இதுவும் போதாதென்று வேற்று ஊர்க் கொள்ளையர்கள் வியாபாரிகள் என்ற பெயரில் ஆளாளுக்குத் துப்பாக்கியும் கையுமாக ஆற்றுவழியே படகில் வந்து ஒட்டுமொத்தக் கல்லையும் உடைத்துத் தங்களுக்கு வேண்டியது போல உருமாற்றிக் கொண்டனர். ஒட்டுமொத்த ஊரையும் கவனிக்க வேண்டி வந்ததால் தங்கள் அடிவருடிகளைக் கல்லுக்குக் காவலாக்கினர். பின்பொரு நாள் அவர்கள் ஊரைக் காலி செய்ய வேண்டிய நிலை வந்த போது கல்லுக்குள் தாங்கள் கண்டுபிடித்த ஊசியை ஏற்றிவிட்டு ஒரு வெள்ளைத் துணியைப் போர்த்திவிட்டுத் தங்கள் சொம்புதூ- க்கிகளிடம் விட்டுவிட்டுச் சென்றனர். மேற்படி சொம்புதூக்கிகள் அந்த வெள்ளைத்துணியின் மேல் குங்குமத்தைக் கரைத்து ஊற்றிக் காவியாக்கிவிட்டனர்.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “கற்காலம்”

Your email address will not be published. Required fields are marked *