குறுந்தொகை மூலமும் உரையும்

குறுந்தொகை மூலமும் உரையும் PDF Download

[wpsm_member]

  • குறுந்தொகை PDF Download (1947 – உ.வே.சா. பதிப்பு)
  • குறுந்தொகை PDF Download (1941 – குறுந்தொகை வசனம், சு.அ.இராமசாமி)
  • குறுந்தொகை PDF Download (1955 – பொ.வே. சோமசுந்த்ரனார்)

[/wpsm_member]

 

Description

குறுந்தொகை

குறுந்தொகை (Kurunthogai) எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. “நல்ல குறுந்தொகை” எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள்.

[wpsm_promobox background=”#f8f8f8″ button_link=”https://play.google.com/store/apps/details?id=com.rejiya.tamil.audiobooks” button_text=”Click Here” title=”Tamil Novels AudioBooks By Rejiya” description=”தமிழ் ஒலிப்புத்தகம் – ரெஜியா | (Kids Stories, Novels & …) Download Free Tamil AudioBooks App From Android Play Store” ]

உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

குறுந்தொகை பாடல் 

குறிஞ்சி – தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

செம்புலப் பெயனீரார்(குறுந்தொகை – 40)

குறுந்தொகை பாடியோர்

இத் தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர்.

  • அனிலாடு முன்றிலார்
  • செம்புலப்பெயல் நீரார்
  • குப்பைக் கோழியார்
  • காக்கைப்பாடினியார்

என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள்.

கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

நூலமைப்பு

4 முதல் 8 வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது.

(307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது)

அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல், கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன.

பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.

குறுந்தொகை பழைய உரைகள்

இந்த நூலின் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்களுக்கும் ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.

இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.

குறுந்தொகை காட்டும் செய்திகள்

குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்கு “பொற்கிழி” வழங்கச் செய்தது சிறந்த வரலற்றுச் சான்றாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே

என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது.
வினையே ஆடவர்க்கு உயிரே“- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது.

பதிப்பு வரலாறு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915 இல் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.