Sale!

மணிமேகலை மூலமும் உரையும்

(1 customer review)

0.0049.00

மணிமேகலை மூலமும் உரையும் eBook

[rehub_affbtn btn_text=”Free for PRO Members Only” btn_url=”https://www.tamilebooks.org/download/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%b2%e0%af%88/”]

மணிமேகலை PDF, ePub, Mobi (Kindle)

Description

மணிமேகலை Free eBooks

மணிமேகலை மூலம் மட்டும் இலவசம். 

மணிமேகலை மூலமும் உரையும்

மணி + மேகலை – மணிமேகலை (Manimegalai) என்றாகிறது. நவ மணிகளால் அமைக்கப்பெற்ற இடை அணியாகிய மேகலை யைக் குறிக்கிறது மணிமேகலை என்ற தொடர்.

[wpsm_promobox background=”#f8f8f8″ button_link=”https://play.google.com/store/apps/details?id=com.rejiya.tamil.audiobooks” button_text=”Click Here” title=”Tamil Novels AudioBooks By Rejiya” description=”தமிழ் ஒலிப்புத்தகம் – ரெஜியா | (Kids Stories, Novels & …) Download Free Tamil AudioBooks App From Android Play Store” ]

இரட்டைக் காப்பியம்

மணிமேகலை சிலப்பதிகாரத்தோடு இணைந்து அமைக்கின்ற காப்பியம். அதனால், இரட்டைக் காப்பியம் என்றும் கூறுவர்.

மணிமேகலை கோவலனின், மனைவியாகிய மாதவியின் மகள். இளங்கோவடிகள் கணிகையாக இருந்த மாதவியைத் தன் காப்பியத்தில் கோவலனின் மனைவி யாக்குகிறார்.

பரத்தையர் 

ஆடல் மற்றும் பாடல்களில் வல்லவரான பெண்கள் தன்னுடைய அழகையும் இன்பத்தையும் ஆடவரிடம் காட்டி அவர்களிடம் பொருளுக்காக உறவாடுபவர்கள். இவர்கள் பொதுவாக ஒருவரோடு நிறுத்தாமல் பல ஆடவர்களுடனும் இவ்வாறு பழக்குவார்கள், இத்தகைய பெண்களை பரத்தையர் என்பர்.

மாதவி, கோவலன் இறந்தவுடன் பௌத்த சமய துறவி யாகிறாள். தன் மகள் பரத்தையர் குலத்தில் இருத்தல் கூடாது என்று கருதி, மணிமேகலையையும் துறவியாக்குகிறாள். இளங்கோடிவகளின் எண்ணத்தின்படி, பரத்தையர் குலத்தை ஒழித்தல் வேண்டும் என்பது. அதனால் கோவலன் இறந்த வுடன் மாதவி துறவியாகி, தன் மகள் மணிமேகலையையும் துறவியாக்குகிறாள். அதனால் பரத்தையர் குலம் முடிந்து விட்டது.

கண்ணகி மகள்

மாதவி மணிமேகலைக் காப்பியத்தில் பல இடங்களில் மணிமேகலையைக் கண்ணகி மகள் என்றே கூறுகிறார். மணி மேகலை வஞ்சிநகர் சென்றபோது, தன் தாய் கண்ணகியை படிமநிலையில் பார்க்கிறாள். கண்ணகி மணிமேகலைக்கு வழி காட்டுவதாகவும் அப்பகுதி அமைகிறது. அதோடு, கோவலன் தந்தை மாசாத்துவானும் பௌத்தத் துறவியாகி வஞ்சிமா நகரில் இருக்கிறார். அவரையும் சென்று பார்க்கிறாள் மணிமேகலை.

மணிமேகலை பௌத்தக் காப்பியம்

மணிமேகலை பௌத்தக் காப்பியமாக இருப்பதால், தமிழ்மரபின் அடிப்படையில் தோன்றியதாகக் கூற இயலவில்லை . மணிமேகலையின் நோக்கம் பௌத்தக் கொள்கைகளைப் பரப்புவதுதான். அதற்குத்தக, கதை அமைகிறது.

கோவலன் கண்ணகி கவுந்தியடிகள் மூவரும் புகார் நகரிலிருந்து மதுரைக்கு ஒன்றரைமாத காலத்தில் நடந்து சென்றனர்.

மணிமேகலை

மணிமேகலை எங்கு சென்றாலும் வான்வழி தான் செல்வாள். சில நிலைகளில் தன் வடிவத்தை மாற்றிக் கொள் கிறாள். மணிமேகலை காயசண்டிகை வடிவம் எடுக்கிறாள். முனிவரைப் போன்ற முதியநிலையில் காட்சி அளிக்கிறாள். இவ்வாறு பல கோலங்களில் மணிமேகலை காட்சி தருகிறாள்.

இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் மணிமேகலை யில் அதிகம். பிறவிகள் பற்றிய கதைகள் மிகுதியாக உள்ளன.

மணிமேகலையின் மிகப்பெரிய சிறப்பு அட்சய பாத்திரம். உலக உயிர்கள் அனைத்தின் பசியைப் போக்கியது அட்சய பாத்திரம்.

மணிமேகலை முழுவதும் சங்க இலக்கியம் போன்று ஆசிரியப்பாக்களால் ஆனது. சிலப்பதிகாரம் போன்று 30 காதைகளைக் கொண்டது. சிலப்பதிகாரத்தில் காண்டங்கள் உண்டு. மணிமேகலையில் காண்டங்கள் இல்லை.

சிலப்பதிகாரத்தின் மொழிநடைக்கும், கவிதை அமைப்பிற்கும் பல நிலைகளில் மணிமேகலை வேறுபட்டு உள்ளது.
அதனால், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் கூற்றின்படி, மணிமேகலை காப்பியம் சிலம்புக்கு முன்பு எழுதப்பெற்றதோ? என்ற ஐயம் கூற தோன்றுகிறது.

சீத்தலைச் சாத்தனார்

மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகளுக்கு கண்ணகி கதையைக் கூறியவர். சிலப்பதிகாரத்தின் இறுதியில் நூல்கட்டுரையில்
மணிமேகலையின் மேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது.

சீத்தலைச்சாத்தனார் சங்க இலக்கியப் புலவர்களுள் ஒருவர். இவர் வணிக மரபினர். தானிய வியாபாரம் செய்து கொண்டிருந்ததால் சாத்தனார் என்ற பெயரைப் பெற்றார்.

சீத்தலை என்பதற்கு விளக்கம் தர பல கதைகள் உள்ளன. பிறர் பிழைகளைத் தான் உணர்ந்த போது, தன் தலையில் குத்திக்கொண்டு, அதனால் சீழ் வடித்த தலை, சீத்தலை ஆயிற்று என்று கூறுவதும் உண்டு.

‘சாத்து’ என்கிற வணிக தலைவராக இருந்ததாலோ அல்லது புத்தரின்  கொள்கையைக் கொண்டிருந்த ‘சாது’ (சாத்து) என்பதாலோ சாத்தன் என அழைக்கப்பட்டிருக்கிறார்.

சங்க இலக்கியப் பாடல்களில் நற்றிணையில் மூன்று பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும், அகநானூற்றில் ஐந்து பாடல்களும், புறநானூற்றில் ஒரு பாடலும், திருவள்ளுவமாலையில் ஒரு பாடலும் இவர் எழுதியதாக வரலாறு கூறுகிறது.

சிலப்பதிகாரம் இயற்றிய சமணத் துறவி இளங்கோவடிகள் மணிமேகலை இயற்றிய சீத்தலைச் சாத்தனாரின் மிக நெருங்கிய நண்பராக இருந்ததாக அறியப்படுகிறது.

சீத்தலைச் சாத்தனார் ‘நன்னூற் புலவன்’, ‘தண்டமிழ்ச் சாத்தன்’ என்று போற்றப்படுகிறார்.

[wpsm_promobox background=”#f8f8f8″ button_link=”https://play.google.com/store/apps/details?id=com.rejiya.tamil.audiobooks” button_text=”Click Here” title=”Tamil Novels AudioBooks By Rejiya” description=”தமிழ் ஒலிப்புத்தகம் – ரெஜியா | (Kids Stories, Novels & …) Download Free Tamil AudioBooks App From Android Play Store” ]

மணிமேகலை மூலமும் உரையும் PDF

மணிமேகலை மூலமும் உரையும் PDF வடிவில் பதிவிறக்க இந்த இணைப்பை பயன்படுதவும். விரைவில் மணிமேகலை மூலமும் உரையும் eBoook வடிவில் இந்த பக்கத்தில் கிடைக்கும்.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

1 review for மணிமேகலை மூலமும் உரையும்

  1. Thanusha

    Review for மணிமேகலை மூலமும் உரையும்
    ★ ★ ★ ★ ★

Add a review

Your email address will not be published. Required fields are marked *