Sale!

மாரியம்மன் தாலாட்டு

0.009.00

Description

மாரியம்மன் தாலாட்டு

பராசத்தி துணை 

எத்தேசங்களிலும் இடைவிடாமற்

சிந்தித்துவரும்

மாரியம்மன் தாலாட்டு 

 விநாயகர் துதி 

காப்பு கொச்சக்கலிப்பா 

பூதலத்தியவர்களும் போதரவாயென்னாளும்

மாதரசியென்று வாழ்த்துகின்றமாரியம்மன்

சீதரனார் தங்கைச் சிறப்பானதாலாட்டைக்

காதலுடனோதக் கணபதியுங்காப்பாமே.

வெண்செந்துறை

முந்தி முந்திவிநாயகரே முக்கணனார் தன்மகனே

கந்தருக்குமுன்பிறந்த கற்பகமேமுன்னடவாய்

வேலவர்க்குமுன்பிறந்த விநாயகரே முன்னடவாய்

வேம்படியின் பிள்ளையாரே விக்கினரேமுன்னட வாய்

பேழைவயிற்றோனே பெருச்சாளி வாகனரே

காரானமால்மருகா கற்பகமேமெய்ப்பொருளே

சீரான நல்மருகா செல்வக்கணபதியே

ஒற்றைக்கொம்போனே யுமையாள் திமருகனே

கற்றைச்சடையணிந்த கங்காதரன்மகனே

வித்தைக்குவி நாயகனே வெண்ணையுண்டோன்மருகா

மத்தக்கரிமுகவா மாயோன்மருகோனே

ஐந்துகரத்தோனே யானைமுகத்தோனே

தந்திமதவாரணனே தற்பரனே முன்னடவாய்

நெஞ்சிற்குடியிருந்து நீயெனக்குமுன்னடவாய்

பஞ்சுயஞ்சுமெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே

வேழகத்தோனே விநாயகரே முன்னடவாய்

தாழ்விலாச்சங்கரனார் சற்புத்திராவாருமையா

முன்னடக்கும்பிள்ளையார்க்குகண்ணடக்கம் பொன்னாலே

கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்புமுத்தாலே

முத்தாலே தண்டைகொஞ்ச முன்னடவாய்பிள்ளையாரே

செல்வக்கணபதியுன் சீர்பாதம் நான்மறவேன்

சரஸ்வதி துதி 

தாயே சரஸ்வதியே சங்கரியேமுன்னடவாய்

என்தாயேகலைவாணி யேகவல்லி நாயகியே

வாணிசரஸ்வதியே வாக்கில்குடியிருந்து

என்னாவிற்குடியிருந்து நல்லோசை தாருமம்மா

கமலாசனத்தாளே காரடிபெற்றவளே

என்-குரலிற்குடியிருந்து கொஞ்சடிபெற்றவளே

என்னாவுதவராமல் நல்லோசை தாருமம்மா

மாரியம்மன் தன்கதையை மனமகிழ்ந்துநான்பாட

சரியாகயென்னாவில் தங்கிகுடியிருமம்மா

கன்னனூர் மாரிமுத்தே கைதொழுது நான்பாட

பின்னமில்லாமல் பிறகிருந்துகாருமம்மா

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “மாரியம்மன் தாலாட்டு”

Your email address will not be published. Required fields are marked *