Description
மருதநில மங்கை
மருதநில மங்கை
உள்ளே …
- முன்னுரை…….
- ‘எம்மை நீ அருளினை’
- ஊடுவேன் நான்! கூடும் என் நெஞ்சு!
- கனவினான் எய்திய செல்வம்…
- எம்மையும் உள்ளுவாய்!
- நீர் இதழ் புலராக் கண்…..
- அலர் மார்பு காணிய…
- அழிந்துஉகு நெஞ்சத்தேம்…
- தோலாமோ யாமெனின்….
- நெஞ்சமும் ஏமுற்றாய்…
- ஊடலும் கூடலும்…
- செயற்பாலது என்கொலோ!
- உடன்வாழ் பகை…….
- கையான் மலர்ந்த முகை…….
- புல்லல் எம் புதல்வனை!
- வருக எம் பாக மகன்….
- பெயரனை யாம் கொள்வேம்…
- யரேம் நினக்கு யாம்…
- வெந்த புண்ணில் வேல்….
- யானே தவறுடையேன்!
- வருகென்றார் யாரோ?.
- அன்பிலி பெற்ற மகன்!
- ஊடுதல் என்னோ?.
- தேற்றேம் யாம்…
- அடி சேர்தல் உண்டு…
- நிறையாற்றா நெஞ்சு…
- நின்வயின் நெகிழும் என் நெஞ்சு…
- வேட்டது கண்டாய்…
- கடவுளைக் கண்டாயோ?.
- நகாமை வேண்டுவல்….
- யாம் யாரே?.
- அறிந்தேன், உன் குதிரையை!
- வேழம் வனப்புடைத்து…
- நீ ஆடியது குமரிப் புதுப் புனல்….
- மனைவி துயர் காணாமையும் மன்னர்க்கு ஏற்றதோ?.
- உன்னைக் கழறுதல் வேண்டுமோ?.
முன்னுரை
சங்க இலக்கியம் பயிலத் தொடங்கிய நேரம். அதற்குத் துணை நிற்கும் என்பதால், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடாகிய தமிழ்ப் பொழிலைத் தொடர்ந்து படித்து வந்தேன். அதில், தோரமங்கலம் ஆசிரியர் வரத நஞ்சைப் பிள்ளையவர்கள் கலித்தொகைப் பாடல்களுக்கு அளித்து வந்த விளக்கப் பேருரை, அறிவுக்கு விருந்தளிக்கும் ஆழம் உடையதாய் அமைந் திருந்தது.
அதைப் படிக்கும் பொழுது, கலித்தொகையின் ஒவ்வொரு பாட்டின் கருப் பொருளும் எந்தச் சூழ்நிலையினைச் சுட்டி நிற்கிறது என்பதை விளக்கும் விரிவான உரையை முன்னுரையாக அளித்துப் பாடற் பொருளை விரித்துரைப்பதால், ஒவ்வொரு பாட்டின் பொருளையும் தெளிவாக உணர முடியும். ஒவ்வொரு பாட்டின் விளக்கமும் ஒரு சிறு கதைபோல் அமைந்து படிப்பவர்க்குச் சுவையூட்டுவதாயும் அமையும் என உணர்ந்தேன்.
அவ்வகையில் எழுதப்பட்ட கலிப்பாக்களில், மருதம் சார்ந்த கலிப்பாக்கள் முப்பத்தைந்தின் விளக்கம், “மருத நில மங்கை” என்ற பெயர் தாங்கி வெளிவருகிறது.
இந்த நூலினை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
அன்பன்,
கா. கோவிந்தன்.
Reviews
There are no reviews yet.