Sale!

மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்

0.009.00

மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்

Free Download AZW3/ePub/PDF

 

Description

சிந்துவெளி நாகரிகம் Read online

சிந்துவெளி நாகரிகம்

ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார் (மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி WikiPedia)

உள்ளே…

பதிப்புரை…….

உள்ளுறை……..

1 . புதைபொருள் ஆராய்ச்சி…

2. சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்…

3. பிற மண்டிலங்களின் புதை பொருள்கள்…

4. நகர அமைப்பும் ஆட்சி முறையும்…

5. கட்டிடங்கள்…

6. கிணறுகள் – செய்குளம் – செங்கற்கள்…

7. வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்…

8. கணிப் பொருள்கள்…

9. விலங்குகளும் பறவைகளும்…

10. உணவும் உடையும்…

11. அணிகலன்கள்…

12. வாணிபம்…

13. விளையாட்டுகள் – தொழில்கள் – கலைகள்…

14. சமயநிலை………

15. இடுதலும் சுடுதலும்…

16. சிந்துவெளி எழுத்துகள்…

17. சிந்துவெளி மக்கள் யாவர்?.

 

மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்:

பதிப்புரை

வளத்துக்கும் வாணிகத்துக்கும் இந்தியா எப்போதும் உலக மக்களின் கண்ணில் நிழலாடிக்கொண்டிருக்கிறது; அப்படியே கலை, நாகரிகம் முதலிய பல தலையான ஆராய்ச்சிகளுக்கும் உலக அறிஞர்களின் உள்ளத்தை என்றும் அது கவர்ந்து கொண்டிருக்கின்றது. இந்திய நாட்டின் எல்லை, இந்திய மக்களின் பன்னுற்றுக்கணக்கான சாதி சமய மொழிப் பிரிவுகள், அவ்வவற்றின் பழைமை பெருமை, வளர்ச்சி தளர்ச்சிகள் முதலிய கருத்துக்களைக் குறித்து மேலைநாட்டவரும் கீழைநாட்டவரும் பல காலமாகவே ஆராய்ந்து வருகின்றனர். கடலாழங் காண்பதும் இந்திய் நாகரிக ஆழங் காண்பதும் ஒன்று.

சில காலத்துக்குமுன் வரையில் ஆராய்ச்சியாளர் இந்திய நிலைகளைப் பற்றிப் பற்பல கருத்துடையராயிருந்தனர். ‘இந்திய மக்களில் ஆரிய ரென்பவரே நாகரிகமுடையவர்; அவரது மொழியே வடமொழி யென்பது; அதுவே தமிழ் உட்பட எல்லா இந்திய மொழிகளுக்குந் தாய்; ஆரிய நாகரிகமே உலக நாகரிகங்கட்கு அடிப்படை’ என்பன அக்கருத்துக்களிற் சில. ஆராய்ச்சியாளர் கண்ணுக்கு வடமொழி நூல்களே இந்தியாவின் தலை நூல்கள் என்று அப்போது காணப்பட்டு வந்தமையே அதற்குக் காரணம்.

பின்பு, பண்டைக் காலத்தில் இயற்றப்பட்ட, தமிழ் நூல்கள் சில வெளிப்படலாயின. அவற்றிலிருந்து, தமிழ் மொழியின் பழைமையும் செவ்வியும் ஆராயப்பட்டு, இதற்கு ஆரியமொழி தாய் அன்று என்பதும், இம்மொழியாளரின் நாகரிகம் ஆரிய நாகரிகத்தினும் வேறு என்பதும், உயர்ந்தது என்பதும், வேறு சிலவும் விளங்கின.

இதற்குள் நூலாராய்ச்சியே யல்லாமல், ஞால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி, அகப்பொரு ளாராய்ச்சி முதலான பலவகை ஆராய்ச்சிகள் வளர்ச்சிபெறலாயின. இவற்றின் பயனாக, ஒரு காலத்தில் இந்தியாவின் வடபகுதியும், இமயமலையும் கடலுள் இருந்தன; அப்போது இந்தியாவின் குமரிமுனைக்குத் தெற்கே இந்துமாக் கடலில் குமரிக் கண்டம் என்று ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது; உலகத்திலேயே மக்கட் பிறவியின் தோற்றம் முதல்முதல் அக் குமரிக் கண்டத்திலேயே உண்டாயிற்று; பின்பு, அக்கண்டம் சிறிது சிறிதாகக் கடலுள். ஆழ்ந்து வடக்கே இமயமலை எழுந்தபோது, அக் கண்டத்திலிருந்த மக்கள் வடக்கே வந்து உலகெங்கும் பரவினர். இப்போது தென்னிந்தியாவாக உள்ள திராவிட நிலப்பகுதி எஞ்ஞான்றும் அழியாத மிகப்பழைய நிலமாதலின், வடக்கிலும் உலகத்திலும் பரவிய மக்கள் இத்திராவிட மக்களின் முன்னோரே யாகின்றனர்; இமய மலைக்கு வடக்கேயும் வடமேற்கேயும் சென்ற அம் முன்னோரே பின்னொருகால் வேற்றுமொழியாளர்போல மாறி மீண்டும் இந்தியாவுக்குள் புகுந்தபோது, அவர்கள் அங்கங்குமிருந்து வந்தவராகக் கூற இடமாயிற்றேயன்றி வேறில்லை; ஆகவே திராவிட நாகரிகமே உலக நாகரிகத்துக்கு அடிப்படை என்னும் உண்மைகளெல்லாம் திட்டமாகக் கண்டுபிடிக்கப் பெற்றன; தமிழர்களின் நல்வினைப்பயனால் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட சங்கத் தமிழ் நூல்கள் பல இக்காலங்களில் மேலுமேலும் வெளிவந்து, அவற்றின் ஆழ்ந்த அரிய ஆராய்ச்சிகளாலும் மேலுண்மைகள் நன்றாக வலுப்பெறலாயின; குமரிக்கண்ட நாகரிகம் இக்கால நாகரிகத்தினும் உயர்ந்ததென்பது, தமிழ்மொழியின் பெருமை அக்காலத்திலேயே இன்னும் மிகுந்திருந்ததென்பதும், தமிழ்வளர்த்த தமிழ்ச் சங்கங்களில் முதற்சங்கம் குமரிக் கண்டத்திலிருந்தது என்பதும், இதுபோன்ற பல அருங்குறிப்புகளெல்லாமும் சங்க நூலாராய்ச்சிகளிலிருந்து வெளிப்பட்டன.

எனினும், காண்டல், கருதல், உரையளவைகளில், ஆராய்ச்சி என்பது கருதலளவையிலும் சங்கத் தமிழ் நூல்கள் உரையளவையிலும் அடங்குதலின் காண்டலளவையிலுந்தக்க சான்றுகள் கிடைக்குமாயின், இந்தியா முழுவதுமே ஒரு காலத்தில் திராவிட நாடு; திராவிட மக்களே பிற்காலத்திற் பல்வேறு இந்தியக் கிளையினராயினர் திராவிடமொழியே திரிந்து திரிந்து பல்வேறு இந்திய மொழிகளாயிற்று: திராவிட நாகரிகமே உலக நாகரிகத்திற்கு அடிப்படை இன்னும் திராவிட நாகரிகமே உயர்ந்ததாக உள்ளது’ என்னும் இவ்வளவு பெரிய புதை பொருளுண்மைகளை மிகத் தெளிவாகத் துணிந்து கொள்வதற்கு ஐயுறவில்லாத நிலைப்பு ஏற்படும். ஒரு கருத்தைத் துணிவதற்கு இங்ஙனம் மூவகையளவைகளும் முதன்மையானவை.

‘தமிழ்’ என்பதைப் பிறர் ‘திராவிடம்’ என்றனர்; தமிழ் மக்கள் அங்கங்கும் போக்குவரவின்றித் தங்கியகாலத்தில் அவர்கள் தமிழ்மொழியே பல்வேறு வகையான இந்திய மொழிகளாகத் திரிந்து நின்றன; ஒன்றோடொன்று கலந்து பின்னும் பலவாயின. மிகுதியாகத் திரிந்துவிட்டவை வங்காளம் முதலிய வட இந்திய மொழிகள்; ஒரளவில் திரிந்தவை தெலுங்கு முதலிய திராவிடமொழிகள்; மொழிதிரியவே தமிழ்மக்களும் அவ்வம் மொழிக் குரியவராய் வட இந்தியரும் தென்னிந்தியருமாகத் திரிந்து பல சாதியினராயினர்; இதனால் இந்தியர் யார் என்பதே தெரிந்து கொள்வது அரிதாயிற்று.

இத்தகைய உற்ற நேரத்திலேதான், இந்தியாவின் வடமேற்கே சிந்து ஆற்றின் கரைமருங்கு இற்றைக்கு 5000 ஆண்டுகட்குமுன் சிறந்த திராவிட நாகரிகத்தோடு விளங்கியிருந்து பின் மண்மூடுண்ட ‘மொஹெஞ்சொ-தரோ’ ‘ஹரப்பா’ முதலிய பெரு நகரங்கள், அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டன. தக்க நாகரிகச் சான்றுகள் அவற்றிலிருந்து நேரிற் கண்டெடுக்கப்பட்டுச் சிறந்த ஆராய்ச்சி யறிஞர்களால் நன்கு சோதனை செய்யப்பெற்றன: சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பது காண்டலளவையாலும் மலையிலக்காகத் துலங்குவதாயிற்று. இற்றைக்கு 4500 ஆண்டுகட்கு முன் இந்தியா முழுமையும் திராவிடமே யென்று விளக்கி, நிலப்படப் புத்தகத்திற் (Atlas) படமும் எழுதப்பெற்றிருக்கிறது.

திராவிடர் இப்போது எந்நிலையி லிருக்கின்றனர். தம் முன் நிலைகளைச் சிறிதேனும் எண்ணிப் பார்ப்பாராயின், இந்தியாவில் சாதியாலும் மொழியாலும் சமயத்தாலும் பல பிரிவினராய் ஒற்றுமையின்றி எழுச்சியின்றி மேலுமிருக்க ஒருப்படுவரோ! திராவிடர் தம் தொன்மையையும் வன்மையையும் உலகறிய வைத்து வாழவன்றோ முற்படுவர்! இவ் வுணர்ச்சியும் முயற்சியும் உண்டாகும் பொருட்டே இம் மொஹஞ்சொ-தரோ ஆராய்ச்சிகளை விளக்கமாகத் தமிழ்மொழியில் எழுதுவித்து வெளியிடுகின்றோம். இவ் வெளியீடு அக் கருத்தைச் செவ்வனம் நிறைவேற்றுமென்று நம்புகிறோம்.

நாங்கள் விரும்பியதற்கு ஏற்ப, இந்நூலைப் பல தலைப்புகளில் தகுதியாகப் பாகுபாடு செய்து பன்னூல் ஆராய்ச்சிகளையும் நன்றாகக் கோவைசெய்து பொருத்தி ஏற்ற மேற்கோட் குறிப்புக்களுடன் மிகவும் தெளிவாக மிக எளிய தமிழ் நடையில் நல்லுழைப்போடு எழுதியுதவிய இதன் ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார், M.A., M.O.L., L.T., Ph.D. அவர்களின் தொண்டு தமிழகத்தாராற் பெரிதும் பாராட்டற் பாலதாகும். அச்சிடுங் காலத்தில், இந்நூலை நன்கு பார்வையிட்டுதவியவர் தருமையாதீன வித்துவான், திருவாளர். காழி. சிவ. கண்ணுசாமிப் பிள்ளை B.A. அவர்களாவர். இவ்வறிஞரிருவர்க்கும் எங்கள் நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

 

மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்:

உள்ளுறை

  1. புதைபொருள் ஆராய்ச்சி பக்கம் 1 – 17

புதை பொருள் ஆராய்ச்சி ஆராய்ச்சி அவா உண்டாவதேன்? ஆராய்ச்சிக்குரிய இடங்கள் – மால்ட்டா – எகிப்து – பாலஸ்தீனம் – அசிரியா – பாபிலோனியா – மெசொப்பொட்டேமியா – ஏலம் – இந்நான்கு இடங்களிலும் நடந்த ஆராய்ச்சி ‘உர்’ நகரில் ஆராய்ச்சி – பாரசீகம் – இந்தியாவில் ஆராய்ச்சி – சிந்துவெளி நாகரிகம்.

 

  1. சிந்துவெளியிற் புதையுண்ட நகரங்கள் 18- 34

சிந்து யாறு – பஞ்சாப் மண்டிலம் – சிந்து மண்டிலம் – கீர்தர் மலைத்தொடர் – ஹரப்பா – மொஹெஞ்சொ – தரோ – ஸ்துபத்தையுடைய மண்மேடு – 1925-1934 வரை நடைபெற்ற ஆராய்ச்சி – குறிப்பிடத்தக்க செய்திகள் – சான்ஹ தரோ – லொஹாஞ்சொ – தரோ – தகஞ்சொ – தரோ – சக்பூர்பானி எபியால் – அலிமுராத் – பாண்டிவாஹி அம்ரி. கோட்லா நிஹாங் கான் நூற்றுக்கு மேற்பட்ட மண்மேடுகள்.

 

  1. பிறமண்டிலங்களின் புதைபொருள்கள் 35 – 53

ஆராய்ச்சி இடங்களிற் பாயும் ஆறுகள் கங்கை நருமதை தபதி யாறுகள் – தென்னாடு கோதாவரி கிருஷ்ணை – காவிரி தாமிரபரணி – பெரியாறு -ஆற்றுவெளிகளில் பண்டை மக்கள் – ஐக்கிய மண்டிலத்துப் புதை பொருள்கள் – கெளசாம்பி தோன்றிய காலம் – பீகார் மண்டில்த்துப் புதைபொருள்கள் – நடு மண்டிலத்து வெள்ளித் தாம்பாளங்கள் – ஒரிஸ்ஸாவில் இரட்டைக் கோடரிகள் – டெக்கான் – சென்னை மண்டிலம் – மகிழ்ச்சிக்குரிய மண்மேடு – புதுக்கோட்டையில் தாழிகள் – திருவிதாங்கூர் – டெக்கான் பகுதி தனித்திருந்ததா? – பண்டைத் தமிழ் நகரங்கள் சங்கு சான்று பகரும் . மேனாட்டார் முயற்சி நம்மவர் கடமை.

 

  1. நகர அமைப்பும் ஆட்சி முறையும் 54 – 65

மறைந்தாரின் மண் மேடுகள் – ஆற்றோரம் அமைந்த நகரம் நகரம் அமைந்த இடம் – தெருக்களின் அமைப்பு – கால்வாய் அமைப்பு – சுவருக்குள் கழிநீர்க் குழை – மூடப்பெற்ற கால்வாய்கள் இடை இடையே பெருந் தொட்டிகள் – மதகுள்ள கால்வாய்கள் – பன்முறை உயர்த்தப் பெற்ற கால்வாய்கள் – மலம் கழிக்க ஒதுக்கிடம் நகர ஆட்சி முறை அவசியமே ഷിക്കവ வளர்ப்பது பிற நாடுகளில் இல்லாத அற்புத நகர அமைப்பு.

 

  1. கட்டிடங்கள் 66 – 80

கட்டிட அமைப்பு முறை அணி அணியான கட்டிடங்கள் – பருத்த சுவர்கள் நெடுஞ் சுவர்கள் – பலவகைக் கட்டிடங்கள் – எளியவர் இல்லங்கள் பெரிய முற்றமுடைய இல்லங்கள் பல குடும்பங்கள் வாழ்ந்த வீடுகள் செல்வர் தம் ‘ மாட மாளிகைகள் – அரசனது அரண்மனையோ! – தையலார்க்குத் தனி அறைகள் – நீராடும் அறைகள் – சமையல் அறைகள் அங்காடியோ? அம்பலமோ? கள்ளுக்கடையோ? தண்ணிர்ப் பந்தலோ? உண்டிச் சாலையோ? – வேட்கோவர் விடுதிகள்! – வீட்டுவாயில்கள் – தூண்கள்- ஹரப்பாவில் கட்டிட அமைப்பு இருவகை இல்லங்கள் – பெருங் களஞ்சியம் – தொழிலாளர் இல்லங்கள் – வீட்டிற்கு உரிய வீடுகளே.

 

  1. கிணறுகள் – செய்குளம் – செங்கற்கள் 81 – 89

5000 ஆண்டுகட்கு முற்பட்ட கிணறுகள் இன்றும் சுரப்புடைய கிணறுகள் – மாளிகைகளில் உள்ள கிணறுகள் . கயிறும் உருளைகளும் பலமுறை உயர்த்தப்பட்ட கிணறுகள் – அழகிய செய்குளம் குளத்தின் அடிமட்டமும் உட்சுவர்களும் – நிலக்கீல் – குளத்திற்கு வடக்கே – குளத்திற்கு நீர் வசதி செங்கற்கள் – பண்டை நாடுகள் – செங்கற்கள் சுடப்பட்ட முறைகள் உலர்ந்த செங்கற்கள் – செங்கற்களின் அளவுகள்.

 

  1. வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும் 90 – 104

வீட்டுக்குரிய பொருள்கள் – மட்பாண்ட மாண்பு பலவகை மட்பாண்டங்கள் – களிமண் கலவை வேட்கோவர். உருளைகள் காளவாய் மெருகிடும் கருவிகள் பல நிறப் பாண்டங்கள் நிறங்களைப் பூசுவானேன்? – ஒவியம் கொண்ட மட்பாண்டங்கள் – எங்கும் இல்லா எழிலுறு ஒவியம் வேறு பல ஒவியங்கள் மட்பாண்ட வகைகள் பூசைக்குரிய மட்பாண்டம் கனல் சட்டி – குமிழிகள் கொண்ட தாழி – வெண்கற் பானைகள் கைப்பிடி கொண்ட கலன்கள் – மைக்கூடுகள் புரிமனைகள் புதைக்கப்பட்ட தாழிகள் – எலிப்பொறிகள் பீங்கான் செய்யும் முறை அம்மி, எந்திரம், உரல் பலவகை விளக்குகள் – பிற பொருள்கள் – விளையாட்டுக் கருவிகள் இன்றும் ஊதும் ஊதுகுழல் தலை அசைக்கும் எருது – வண்டிகள் – சொக்கட்டான் கருவிகள்.

 

  1. கணிப் பொருள்கள் 105-116

பயன்பட்ட கணிப் பொருள்கள் – பொன்னும் வெள்ளியும் – செம்பில் ஈயக் கலவை-செம்பில் நிக்கல் கலவை – செம்பு கலந்த மண் – வெண்கலம் – வெள்ளியம் – காரீயம் – மக்களின் மதி நுட்பம் – வேலை முறை – செம்பு, வெண்கலப் பொருட்கள் ஈட்டிகள் – உடைவாள்கள் இடை வாள்களும் கத்திகளும் வேல்கள் – அம்பு முனைகள் – இரம்பம் – உளிகள் – தோல் சீவும் உளிகள் – கோடரிகள் – வாய்ச்சி – மழித்தற் கத்திகள் – உழு கருவிகள் தூண்டில் முட்கள் பிற கருவிகள் – சாணைக்கல் எண் இடப்பட்ட கருவிகள்.

 

  1. விலங்குகளும் பறவைகளும் 117 – 123

மனிதனுக்கு முன் தோன்றிய விலங்குகள் காலத்திற் கேற்ற மாறுபாடு – சிந்துப் பிரதேச விலங்குகள் – யானை – எருதுகள் – நாய்கள் – பூனைகள் – பன்றிகள் – ஆடுகள் – கழுதைகள் – மான்கள் . எருமைகள் – ஒட்டகம் முயல்கள் – ஆமை முதலியன – பறவைகள் – நாகங்கள்.

 

  1. உணவும் உடையும் 124 – 130

விளைபொருள்கள் – மருத நிலமும் நகர் வளமும் புலால் உண்ட மக்கள் – பிற உணவுப் பொருள்கள் சமையற் பொருள்கள் – உணவு – கொண்ட முறை – உடைகள் அணங்குகளின் ஆடைச்சிறப்பு – முண்டாசு கட்டிய மகளிர்கால் சட்டையோ – கூத்த மகள்.

  1. அணிகலன்கள் 131 – 151

அணிகலன்கள் – புதைக்கப்பட்ட நகைகள் புதையுண்ட வெள்ளிக்கலன்கள் – புதையுண்ட செம்புக்கலன்கள் காட்சிக் கினிய கழுத்துமாலை மற்றும் இரு கழுத்து மாலைகள் – ஹரப்பாவில் கிடைத்த கழுத்து மாலைகள் – அழகொழுகும் இடைப் பட்டைகள் – துளை இட்ட பேரறிவு – ஆறு சரங்கொண்ட அழகிய கையணி – உள்ளே அரக்கிட்ட காப்புகள் பலவகைப்பட்ட வளையல்கள் – ஒவியம் தீட்டப்பட்ட வளையல்கள் – கால் காப்புகள் – நெற்றிச் சுட்டிகள் காதணிகள் – மூக்கணிகள் – மோதிரங்கள் பொத்தான்கள் – தலைநாடாக்கள் – கொண்டை ஊசிகள் – சமயத்தொடர்புள்ள பதக்கம் – பலவகைக் கற்கள் – மணிகள் செய்யப்பட்ட விதம் ஒவியம் அமைந்த மணிகள் – பட்டை வெட்டப்பட்ட மணிகள் கற்களிற் புலமை – தங்கக் கவசம் கொண்ட மணிகள் – சிப்புகள் – கண்ணாடிகள் மகளிர் கூந்தல் ஒப்பனை – மைந்தர் கூந்தல் ஒப்பனை – மீசை இல்லா ஆடவர் கண்ணுக்கு மை – முகத்திற்குப் பொடி.

 

  1. வாணிபம் 152 – 165

உள்நாட்டு வாணிபம் – வெளிநாட்டு வாணிபம் நந்தி வழிபாடு எகிப்தியருடன் வாணிபம் – நீர்வழி வாணிபம் நிலவழி வாணிபம் பண்டைக்காலப் பலுசிஸ்தானம் சிந்துவெளி மக்கட்குப் பின் நிறைக் கற்கள் நிறை அளவுகள் – தராசுகள் அளவுக்கோல் முத்திரை பதித்தல்.

 

  1. விளையாட்டுகள் – தொழில்கள்- கலைகள் 166-187

பலவகை விளையாட்டுகள் – வேட்டையாடல் – கோழி, கெளதாரிச் சண்டைகள் – கொத்து வேலை – மட்பாண்டத் தொழில் – கல்தச்சர் தொழில் மரத் தச்சர் தொழில் – கன்னார வேலை – அரண்மனையுள் காளவாய்கள் – பொற்கொல்லர் தொழில் -இரத்தினக் கல் சோதனை – செதுக்குவேலை சங்குத் தொழில் – மீன் பிடித்தல் – வண்டி ஒட்டுதல் – நாவிதத் தொழில் – தோட்டி வேலை – காவல் தொழில் – கப்பல் தொழில் – பயிர்த்தொழில் – நெசவுத் தொழில் – தையலும் பின்னலும் – தந்த வேலை – மணி செய்யுந் தொழில் பாய் பின்னுதல் – எழுதக் கற்றவர் – வாணிபத் தொழில் – சிற்பக் கலை – ஒவியக் கலை – தொடர்ந்து வரும் தொன்மை நாகரிகம் – இசையும் நடனமும் – கணிதப் புலமை – மருத்துவக் கலைவானநூற் புலமை உடற்பயிற்சி நகர மக்கள்.

 

  1. சமய நிலை 188 – 205

சான்றுகள் – தரைப் பெண் வணக்கம் – கவின்பெறு கற்பனை நரபலி உண்டா? – தலையில் விசிறிப் பாகை – சிவ வணக்கம் லிங்க வழிபாடு – புத்தர் பெருமானா? கண்ணபிரானா? கொம்புள்ள தெய்வங்கள் – நான்கு கைத் தெய்வங்கள் – சமண சமயமும் பண்டையதோ? நந்தி வழிபாடு ஒற்றைக் கொம்பு எருது – ஆறுதலை விலங்கு – கதிரவக் கடவுள் கலப்பு உருவங்கள் பிற விலங்குகள் நாக வணக்கம் – புறா வணக்கம் கருட வணக்கம் மர வணக்கம். – மர தேவதைகள் – ஆற்று வணக்கம் – பலி இடும் பழக்கம் – தாயித்து அணிதல் – சமயப் பதக்கம் – கடவுள் உருவங்களின் ஊர்வலம் – நேர்த்திக் கடன் – இசையும் நடனமும் – படைத்தல் பழக்கம் – கோவில் வழிபாடு – சிந்து வெளிச் சமயம் யாது? – சைவத்தின் பழைமை.

 

15 இடுதலும் சுடுதலும் 206-211

சுடுதல் – இடுதல் – ஈரானியர் பழக்கம் – தாழிகள் மீது ஒவியங்கள் மயில்கள் தெய்வீகத் தன்மை பெற்றவையா? பறவைமுக மனித உருவங்கள் – தாழிகளுட் பல பொருள்கள் – உடன் இறக்கும் வழக்கம் – முடிவு.

 

  1. சிந்துவெளி எழுத்துகள் 212-225

எழுத்து ஆராய்ச்சியாளர் – படிக்க முடியாத எழுத்துகள் எழுத்துகளைப் பெற்றுள்ள பொருள்கள் – எழுதும் முறை எழுத்துகளால் அறியப்படுவன . ரா.) எழுத்துகள் – எழுத்துகள் முடிவுரை.

 

  1. சிந்துவெளி மக்கள் யாவர்? 226-261

பண்டை இந்திய மக்கள் – நீக்ரோவர் . ஆஸ்ட்ரேலியர் மெலனேவியர் – மத்தியதரைக் கடலினர் . மங்கோவிய . அல்பைனர் மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த எலும்புக் கூடுகள் – காலம் யாது இம் மக்கள் வாழ்க்கை ஆரியர் – ஆரியர் அல்லாதவர் (அநாரியர்) – ஆரியர் – அநாரியர் போர்கள் – இந்த அநாரியர் சிந்துவெளி மக்களே – சிந்துவெளி மக்கள் யாவர்? – மொழி ஆராய்ச்சி கூறும் உண்மை – பிற சான்றுகள் – இந்திய மக்கள் பற்றிய அறிக்கை நெடுங்காலம் வாழ்ந்த மக்கள் – முடிவுரை.

Additional information

Authors Name

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்”

Your email address will not be published. Required fields are marked *