Sale!

முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவது எப்படி?

0.009.00

Description

முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவது எப்படி?

அன்புள்ள தோழிகளுக்கு,

இந்தப் பகுதியின் தொடக்கமாக, பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்டுவதைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன். பின்னர் வேலை தேடுவது, நேர்முகத் தேர்வு, இப்படி பல விஷயங்கள் பேச ஆசை.

அறுசுவை அரங்கம் உலகளாவியது, எனினும் நான் இந்தியாவில், தமிழ் நாட்டில் இருப்பதால் இங்கு உள்ள சூழ்நிலையை வைத்து முதலில் எழுதுகிறேன். வீட்டில் இருந்தபடியே என்று ஆரம்பித்ததுமே, ஊறுகாய் போடுவது, தைப்பது, காட்டரிங் என்று ஆரம்பிப்பேனோ என்று பயப்பட வேண்டாம். உண்மையில் இவை யாவுமே விரிவாகப் பேச வேண்டிய விஷயங்கள்தான். இவற்றைப் பின்னால் பார்க்கலாம்.

மருத்துவர், பொறியாளர், கணிணிப் பொறியாளர், ஆசிரியர் என்று “காரியர் உமன்” ஆகவே ஃபோகஸ் செய்து, படித்து, வேலையிலிருப்பவர்களைப் பற்றி அப்புறம் – இப்போது நாம் பார்க்கப் போவது எதோ ஒரு இளநிலைப் பட்டமோ, அல்லது முதுநிலைப் பட்டமோ வாங்கி, கல்யாணத்தை எதிர்பார்த்துக் கொண்டோ, அல்லது கல்யாணம் செய்து கொண்ட பின், படித்த படிப்பு வேலைக்குச் சென்று சம்பாதிக்க உதவவில்லையே, என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்காக!

முதலில் முதல் இல்லாமல் தொடங்குவது, மற்றும் நம்மைத் தயார் செய்து கொள்வது எப்படி, வருமானம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவது எப்படி?

முதலீடு இல்லாமல் எந்தத் தொழிலும் தொடங்கவும் முடியாது, சம்பாதிக்கவும் முடியாது. பின்னே? உங்களுடைய படிப்பறிவும், நீங்கள் உழைக்கத் தயாராக இருக்கும் நேரமும்தான் முதலீடு. நான் சொல்வது, பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது பற்றித்தான்.

இவ்வளவுதானா என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். அழகாகத் திட்டமிட்டு, செயல் படுத்தினால், நல்ல வருமானமும், கௌவரமும், மதிப்பும் தரும் தொழில் இது. முதலில் நாம் செய்ய வேண்டிய களப் பணித் திட்டங்கள் பற்றி பார்ப்போம். (Base Work and Plans

உங்களுடைய பட்டப் படிப்பில்/முது நிலைப் படிப்பில் எது சிறப்புப் பாடம்?

மொழி, விஞ்ஞானம், கணக்கியல், கணிதம், உயிரியல், சரித்திரம், கணினியியல் இப்படி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களால் அடிப்படைப் பாடங்களை, 6 வயது முதல் 14 வயது வரை அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பாடங்களை புரியுமாறு சொல்லிக் கொடுக்க, கண்டிப்பாக முடியும். இதற்கு முதலில் உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள பள்ளிகளின் பாடத் திட்டம், பெற்றோர், மாணவர்களின் பொருளாதார வசதி, போன்ற சில தகவல்கள் அறிந்து கொள்வது நல்லது. இது தவிர உங்கள் பகுதியிலோ, அல்லது அருகாமையிலோ டியூஷனுக்கு வகுப்பு வாரியாக என்ன கட்டணம்

வாங்குகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய வீட்டின் இட வசதியைப் பொறுத்து, டியூஷன் எடுப்பதற்கு என்று ஒரு இடத்தைத் தயார் செய்து கொள்ளுங்கள். இந்த இடம் வீட்டில் மற்றவர்களுடைய புழக்கத்திற்குத் தொந்தரவாக இல்லாமலும், படிக்க வரும் மாணவர்களுடைய கவனம் சிதறாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். (அதாவது தொலைகாட்சிப் பெட்டி, வானொலி இல்லாமல்).

எந்த நேரத்தில் வகுப்புகள் எடுக்கப் போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். காலையில் 6 மணி முதல் 8 மணி வரை, மீண்டும் மாலையில் 5 மணி முதல் இரவு 9 மணி வரை – இப்படி – வரையறுத்துக் கொள்ளுங்கள். அதிக செலவு பிடிக்காத முறையில் ஒரு அறிவிப்புப் பலகை வீட்டு வாசலில் மாட்ட முடிந்தால் நல்லது. (“இங்கு டியூஷன் வகுப்புகள் எடுக்கப் படும்)

எடுத்த எடுப்பிலேயே மிகவும் சிறிய குழந்தைகளையோ அல்லது பள்ளியிறுதி வகுப்பில் அதிக மதிபெண்கள் எடுப்பதை எதிர் நோக்கும் மாணவர்களையோ உங்கள் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ள முடியுமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள். இது உங்கள் பொறுமையையும் கற்பிக்கும் திறமையையும் பொறுத்தது.

வகுப்புகள் எடுக்கும்போது, வீட்டில் தானே இருக்கிறோம் என்று சாயம் போன நைட்டியிலோ, தலை வாராமலோ இருக்காதீர்கள். மாணவர்களிடம் “இந்தக் கணக்கை போட்டுக் கொண்டு இருங்கள், இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு, அடுப்படியில் போய் உப்புமாவுக்கு தாளித்துக் கொட்டாதீர்கள்.

மாணவர்கள் வரும் போது உங்கள் முழுக் கவனமும் அவர்கள் மீது இருக்கும் வகையில், வீட்டு வேலைகளை முதலிலேயே முடித்து விடுங்கள். சுத்தமான உடை உடுத்தி, நன்கு தலை வாரி, பளிச்சென்று இருங்கள்.

மாணவர்களைக் கொண்டு விட வரும் பெற்றோர்கள், அவர்கள் வீட்டுப் பெரியவர்களிடம், மரியாதையோடு, அதே சமயம், அளவோடு பேசுங்கள். தேவையில்லாத, வீண் அரட்டை வேண்டாம்.

பொதுவாகவே டியூஷன் என்பது, பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடத்தை செய்யும் இடமாகவே கருதப் படுகிறது. முன்பு படிப்பு வராத மாணவர்களுக்கு டியூஷன் என்ற நிலை மாறி, இப்போது நன்றாகப் படிக்கும் மாணவர்கள் இன்னும் அதிக மதிப் பெண்கள் எடுக்கவும், மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் சுமையைக் குறைக்கவும் டியூஷனுக்கு அனுப்புகிறார்கள். எனவே நீங்கள் சிறப்பாக வகுப்புகள் எடுப்பதன் மூலம் மாணவனின் மதிப்பெண்ணின் தரம் உயர்ந்தால் வாய் மொழியாகவே செய்தி பரவி, அதிக மாணவர்கள் உங்கள் வகுப்பில் சேருவார்கள்.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவது எப்படி?”

Your email address will not be published. Required fields are marked *