Description
நபிகள் நாயகம்
கி.ஆ.பெ.விசுவநாதம்
முன்னுரை
சென்ற ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற அகில இந்திய மீலாத் விழாவில் நாள் பங்குபெற்றுப் பேகிய பேச்சு இது இப் பேச்சை இஸ்லாமியப் பெருமக்கள் பலரும் ஸ்லாமியப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் சிலரும் பாராட்டியிருந்தனர்.
இதை நூல்வடிவில் வெளியிடவேண்டுமெனப் அன்பர்கள் வற்புறுத்தி எழுதியிருந்தனர்.இன்னும் சிறிது விரிவுபடுத்தி ஒரு பெரிய நூலாக வெளியிட எண்ணியும் என்னால் முடிய வில்லை. இந்த அளவுக்கேனும் வெளியிட முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
இதை எழுதுவதற்கு எனக்குந் துணை புரிந்த கோயமுத்தூர் வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைத் தமிழ் ஆசிரியர் அன்பர் திரு சுந்தசாமி எம்.ஏ. அவர் களுக்கும் (இதனை ஒப்புநோக்கி உதவிய திருச்சி ஜமால் முகமது கல்லூரித் தலைமைத் தமிழ் பேராசிரியர் ஜனாப் சி.நயினார் முகம்மது எம்.ஏ. அவர்களுக்கும். எவ்வளவோ வேலைகளிருந்தும் நூல் முழுவதையும், நன்கு ஆராய்ந்து படித்து, திருத்தங்களும் செய்து உதவி, மதிப்புரையும் எழுதி வழங்கிய மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஐஸ்டிஸ்
எம். எம். இஸ்மாயில் எம்.ஏ.,பி.எல் அவர் களுக்கும்,இந்நூலின் எழுத்துப் பிரதியை முழுதும் படித்துப் பார்த்து. நூலை வெளியீட ஒப்புதலும் அளித்து, பாராட்டுரையும் வழங்கி உதவிய திருச்சி நகர காஜியார். ஆலி ஜனாப் மௌல்வி முன்ஷி பாகில் சையத் அப்துல் கனி அவர்களுக்கும் எள் நன்றியறிதலையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டு உதவிய சென்னை மாருதி அச்சகத்தாருக்கும், விரைவில் வெளியிட்டு உதவிய சென்னை பாரி நிலைய உரிமையாளர் திரு.அ.செல்லப்பன் அவர்களுக்கும் என் நன்றி. இதை இஸ்லாமியப் பெருமக்கள் மட்டுமின்றி எல்லாச் சமயமக்களும் படித்து வாழ்க்கைக்குப் பயன்படுத்திப் பலனடைவது நல்லது.
மதிப்புரை
திரு.கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சாதி சமய பேதமின்றி தமிழர்கள் அனைவருடைய அன்புக்கும் மதிப்புக் கும் மரியாதைக்கும் பாத்திரமானவர்கள். அவர்களுடைய பகுத்தறிவுப் பற்று இஸ்லாத்திடத்திலும் அதன் திருத்தூத ராண முஹம்மது நபி அவர்களிடத்திலும் உண்மையான ஈடுபாட்டை உண்டாக்கிற்று. சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் முஹம்மது நபி அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக நடக்கும் மீலாது’ விழாக் களில் பெருமளவு அவர்கள் பங்குகொண்டு நபிகள் நாயக மவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும். போதனைகளைப் பற்றியும் விரிவாகப் பேசி வருகிறார்கள். அகில இந்திய மீலாது விழா என்று அண்மையில் கும்பகோணத்தில் நடந்த விழா ஒன்றில் அவர்கள் பேசிய பேச்சு இப்புத்தக வடிவில் வெளியிடப்படுகிறது.
நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு, அவர்கள் செய்த செயற்கருஞ் செயல்கள், அவர்கள் உணர்த்திய சகோதரத்துவம், அவர்களுடைய அருங்குணங்கள், அவர்கள் கையாண்டு போதித்த சிக்கனம், பிறருடைய குற்றங்களை மன்னிக்கும். கருணை உள்ளம், அவர்கள் நபித்துவம் பெற்றது, அவர்கள் இறைவனிடமிருந்து பெற்று உலகுக்கு வழங்கிய திருக்குர்-ஆன், நபிகள் நாயகமவர்கள் உலகிலே நிலைநிறுத்திய சீர்திருத்தங்கள்.அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பல துறைகளிலே காட்டிய பெருந்தன்மை, உணர்த்திய குறிக்கோள்கள் ஆகியவற்றோடு இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்கள்.அதன் ஐம்பெருங் கடமைகள் முஹம்மது நபியவர்கள் இறுதி தீர்க்கத்தரிசி என்ற கொள்கை ஆகியவையும் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.
நூல் முழுவதிலும் ஆசிரியர் அவர்களுடை தல் லெண்ணமும், சிரத்தையும், இஸ்லாத்திடத்தும் முஹம்மது நபியவர்களிடத்தும் முஸ்லிம்களிடத்தும் அவர்களுக்குள்ள விசுவாசமும் மிகத்தெளிவாகத் தெரிகின்றன. இத்தகைய நல்லெண்ணத்திற்காகவும், முஸ்லிம்கள் திரு.கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.
இந்நூலில் சரித்திர ஆதாரமில்லாமல் கர்ண பரம்பரை யாக வழங்கிவருகின்ற நிகழ்ச்சிகள் சிலவும் சில தவறுகளும் டப்பெற்றிருக்கின்றன. சில அச்சுப் பிழைகளும் காணப் படுகின்றன. இவை அடுத்த பதிப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என் நோக்கம். இப்பதிப்பிலும் அவை எடுத்துக் காட்டப்பெற்று இந்நூலின் இறுதியியில் பிழை திருத்தம் என ஒரு குறிப்பும் வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆசிரியர் அவர்களுடைய இந்த முயற்சியும் பணியும் எல்லோருடைய போற்றுகலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியன. இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகமவர்களைப் பற்றியும் சாதாரண மக்களிடையே நிலவும் தவறான சில எண்ணங்களைத் திருத்தக்கூடிய கருத்துக்களும் இந்நூலின் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய கருத்துக்களை அகமார்ந்து ஆர்வத்தோடு வெளியிட்டிருக்கும் திரு. கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுதலையும் நன்றியையும் மரியானதயையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை 20-9-74
மு. மு. இஸ்மாயில்
Reviews
There are no reviews yet.