Sale!

நமக்கு நாமே உதவி

0.009.00

நமக்கு நாமே உதவி

Free Download AZW3/epub/PDF

Description

நமக்கு நாமே உதவி

நமக்கு நாமே உதவி Free Download

  • ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

‘நமக்கு நாமே துணை’

இந்த நினைவுதான் நமது வாழ்க்கைப் பயணத்திற்கு நிம்மதி தரும் பெருந்துணை.

மற்றவர்கள் உதவுவார்கள் என்று நம்பலாம். அந்த நம்பிக்கையுடனேயே நின்று விடுவது தான் பெருங் கொடுமையாகப் போய் விடுகிறது.

நமது உயர்வுக்கு நாம் உழைப்பதன் மூலம்தான் உதவிக் கொள்ள வேண்டும். அதாவது. நம் வயிற்றுப் பசிக்கு நாம் சாப்பிடுவதுபோல.

பிறர் சாப்பிட்டால் நம் பசி தீராது. அதுபோலத்தான், பிறர் உழைப்பும் நமது வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் பயன் கொடுக்காது.

பிறரை நம்பி எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கும் சிலர். ஆரம்பத்திலேயே அழிந்துபோன கதை ஆயிரம் உண்டு.

பாதிதூரம் சென்று, பொருளையும் புகழையும் பறி கொடுத்துவிட்டு, பரிதவித்து நின்றவர்கள் அநேகம் பேர்கள்.

முடிவுக்கு வந்து விட்டாலும், முகம் நிமிர்த்திப் பார்க்க முடியாத அளவுக்குக் கடன்களை சுமந்து கொண்டு கலங்கியவர்கள் கணக்கில் அடங்க மாட்டார்கள்.

எனவே, எந்தக்காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் பலமுறை சொந்த சிந்தனைக்கு இடம் கொடுத்து, ஆராய்ந்திட வேண்டும்.

அனுபவப் பட்டவர்களிடம் அறிவுரை கேட்கலாம். அவற்றைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை.

‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ அப்பொருள் சிறப்பினைத் தெரிந்து கொண்டு, சீர்துக்கிப் பார்த்து செயல்படுபவர் தான் செம்மையானவர்களாகிறார்கள்.

பிறரைப் பார்த்து, பிறர் அனுபவங்களை அறிந்து, உங்கள் திறமைகளை மதிப்பிட்டு, அதன்பின் நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுங்கள்.

அந்த முறைதான் உங்களுக்கு உதவும்.

இந்நூலில் எழுதப்பெற்றிருக்கும் கருத்துக்கள் யாவும், கற்பனைக் கலா மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, மந்திர தந்திரக் காட்சிகளை விவரிக்கும் தன்மை போல் எழுதப்பட்டவை அல்ல.

நான் என் வாழ்க்கையில் பட்ட பாடுகள், அடைந்த அனுபவங்கள். ஆட்பட்ட அல்லல்கள், பிறர் உதவியை நம்பி ஏமாந்த பேரிடர்கள். அவற்றால் தெரிந்து கொண்ட உண்மைகள்தான் இதில் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன.

பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, கல்லூரிப் பேராசிரியராக உயர்ந்து, பலதொழில் நிறுவனங்களுக்கு விளையாட்டு அதிகாரியாகப் பதவி உயர்வுபெற்று, இன்று பல தொழில்களைப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கும் எனது வாழ்க்கை அனுபவங்களின் சாறுதான் இந்த நூலாகும்.

வாழ்க்கையில் தனித்தன்மையுடன் உயர்ந்திட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டவே இந்த நூல் எழுதப் பெற்றிருக்கிறது. நீங்கள் படித்துப் பயன்பெற விரும்புகிறேன்.

அழகுற அச்சிட உதவிய ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் அவர்களுக்கும், அச்சிட்டு உதவிய அச்சகத்தாருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

 

நமக்கு நாமே உதவி

Table of Contents

  • பதிப்புரை
  • முன்னுரை
  • அறிவா! உறவா?!
  • இதுதான் இதமான சமயம்
  • உழைப்பே உற்சாகம்
  • தொழிலைத் தேர்ந்தெடுக்கும் திறம்!
  • தொழிலும் சிந்தனையும்
  • நம்மாலும் முடியும்
  • நமக்குள்ளே ஒரு சக்தி!
  • சக்தியும் சாமர்த்தியமும்
  • சுவனமும் புவனமும்
  • வாழ்வில் ஏற்றம் பெறுவோம்

 

Additional information

Authors Name

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “நமக்கு நாமே உதவி”

Your email address will not be published. Required fields are marked *