Description
நகரம் டான்
நிஜம்:
இந்த நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலைப்படைப்புகள், இலக்கியம், அறிவியல் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும்
உண்மையானவை.
“கன்சார்ட்டியம்” என்பது ஏழு நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு தனியார் நிறுவனம். பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் கருதி அதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இன்ஃபெர்னோ (நரகம்) என்பது தாந்தே அலிஜீரியின் காவியக் கவிதையான தெய்வீக இன்பியலில் விவரிக்கப்படுகின்ற கீழுலகம். அதில் “நிழல்கள்” – அதாவது, வாழ்விற்கும் மரணித்திற் கும் இடையில் மாட்டிக்கொண்ட உடலற்ற ஆன்மாக்கள் என்ற தனியுருக்கள் குடியேறியுள்ள விரிவாக கட்டமைக்கப்பட்ட உலகமாக நரகம் சித்தரிக்கப்படுகிறது.
முன்னதாக…
நான்தான் நிழல்.
இந்த துயர்மிகுந்த நகரத்தின் மீது நான் பறந்து கொண்டி ருக்கிறேன்.
முடிவற்ற கடும்துயரத்துடன் பறக்கிறேன்.
ரிவானோ ஆற்றின் கரையோரமாக மூச்சடைக்கும் போராட்டத்துடன்… இடதுபக்கமாக வயா டெய் கேஸ்ட்டலானி நோக்கித் திரும்பி வடக்குப் பக்கமாக என் வழியை அமைத்துக் கொண்ட நான் யுஃபிஸி மியூஸியத்தின் நிழலை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.
அவர்கள் இப்போதும் என்னை விரட்டியபடியே இருக்கிறார்கள்.
இரக்கமில்லாத தீர்மானத்துடன் என்னை விரட்டிக் கொண் டிருக்கும் அவர்களுடைய காலடிச்சத்தம் இப்போது இன்னும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
பல வருடங்களாக அவர்கள் என்னை விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய இருப்பு என்னைப் பாதாளத் திலேயே இருக்கும்படி வைத்திருக்கிறது… பாவ மன்னிப்பை தீர்மானிக்கும் இடத்தில் வாழ நான் நிர்பந்திக்கப் பட்டேன்… ஒரு கோத்னிக் அசுரனைப் போல் பூமிக்கு கீழே சிறைபட்டேன்.
நான்தான் நிழல்.
இங்கிருந்து மேலே இருக்கும் தரையில் இருந்து வடக்கு நோக்கி நான் என் பார்வையைத் திருப்பினேன். ஆனால் விமோச் சனத்திற்கான நேரடிப் பாதையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை…. எபனைன் மலைத்தொடர்கள் விடியலுக்கான முதல் ஒளியை வீசுகின்றன.
ஒரே ஒரு முள் மட்டும் கொண்ட கடிகாரத்துடனும், பாதுகாப்பு அரண் கோபுரத்துடனும் வீற்றிருக்கும் அந்த மாளிகையை நான் கடந்தேன்… பியாஸா டி சான் ஃபிரென்ஸே நகரில், அதிகாலை வேளையில் தங்களுடைய அடித்தொண்டை யில் பேசும் வியாபாரிகளின் குரல்களுக்கு இடையிலும், லேம்பரடோட்டா காஃபி மற்றும் வறுத்த ஆலிவ்களின் மணங்களுக்கு இடையிலுமாக நான் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தேன். பெர்கல்லோவை கடக்கும் முன்னர் பேடியா கோபுரத்தை நோக்கி மேற்குப் பக்கம் திரும்பிய நான் அந்தப் படிக்கட்டுகளின் அடியில் இருந்த கனமான இரும்பு கேட்டில் வேகமாக மோதிக்கொண்டேன்.
இங்கே எல்லா தயக்கங்களையும் பின்னுக்கு தள்ளிவிட வேண்டும்.
நான் அந்தக் கைப்பிடியை திருகினேன், என்னால் திரும்பி வரவே முடியாது என்று தெரிந்த பாதைக்குள் நான் அடியெடுத்து வைத்தேன். குறுகலாக இருந்த படிக்கட்டுகளில் ஏறினேன்… அந்தப் படிக்கட்டு மேல்நோக்கி சுழன்று செல்லக்கூடியதாக இருந்தது.பளிங்குக் கற்களால் ஆன அது, ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்திருந்தது.
அந்தக் குரல்கள் கீழேயிருந்து எதிரொலித்தன. அவை இறைஞ்சின.
விடாப்பிடியாக எனக்குப் பின்னால் வந்த அவர்கள் என்னை நெருங்கிவிட்டனர்.
வருவது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது… அவர்களுக்கு நான் என்ன செய்தேன் என்பதும் தெரியாது!
கேடுகெட்ட நிலம்!
நான் மேலே ஏறிக்கொண்டிருக்கும்போது கண்ணுக்குத் தெரிந்த காட்சிகள் தெளிவற்றுப் போயின… பேராசைகொண்ட உடல்கள் நெருப்பு மழையில் துள்ளத் துடித்துக்கொண்டிருந்தன. பெருந்தீனி மீது ஆசைகொண்ட ஆன்மாக்கள் மலத்தில் மிதந்து கொண்டிருந்தன. துரோக மனம்கொண்டவர்கள் சாத்தானின் பனிக்கட்டி பிடியில் உறைந்துகொண்டிருந்தார்கள்.
படிக்கட்டின் இறுதியை எட்டிய நான் உச்சியை வந்தடைந் தேன், காலைநேர ஈரக்காற்றினூடாக மரணத்திற்கு அருகாமையில் தடுமாறி நின்றேன். மதில் சுவரின் இடுக்குகள் வழியாக தெரிந்த பிரதான சுவற்றை நோக்கி நான் விரைந்தேன். என்னை நாடு கடத்தியவர்களிடமிருந்து நான் புகலிடம் அடைந்த இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நகரம் கீழே வெகு தொலைவில் இருக்கிறது.
அந்தக் குரல்கள் இப்போதும் அழைத்தன. எனக்குப் பின்னால் நெருங்கி வந்தன. “நீ செய்திருப்பது பைத்தியக்காரத்தனம்!”
பைத்தியக்காரத்தனம் பைத்தியக்காரத்தனத்தையே பிறப்பிக்கும்.
Reviews
There are no reviews yet.