Description
நீதி கதைகள் 19 Read Online
நீதி கதைகள் 19
பெரியவர், சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு அறிவை தூண்டும் நல்ல நீதி கதைகள் இலவச புத்தகம், நீதி கதைகள் eBook (PDF, Mobi, ePub வடிவில்).
[wpsm_promobox background=”#f8f8f8″ button_link=”https://play.google.com/store/apps/details?id=com.rejiya.tamil.audiobooks” button_text=”Click Here” title=”Tamil Novels AudioBooks By Rejiya” description=”தமிழ் ஒலிப்புத்தகம் – ரெஜியா | (Kids Stories, Novels & …) Download Free Tamil AudioBooks App From Android Play Store” ]
உள்ளே …
- தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்..
- மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது..
- நன்றி மறந்த சிங்கம்..
- மூளை இல்லாத கழுதை…..
- இந்தியா ஏன் குப்பைக் காடாக இருக்கிறது..
- தத்துவக்காரத் தவளையும் ஆயிரங்கால் அட்டையும்..!
- நீரும் மீனும்
- உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே….
- திட்டமிடாத வேலை பயனற்ற வேலை……
- உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.
- கிணறு வாங்கிய குமார்.
- கோவக்காரஇளைஞன்..
- மூட்டை காட்டிய இன்ப துன்பம்..
- உலகில் சண்டை சச்சரவுகள் எதனால் ஏற்படுகிறது..
- ஒற்றை பத்துரூபாய்நோட்டு எங்கே ?.
- நல்லதை தந்தால் நல்லது வரும்..
- தூணில் கட்டபட்ட பூனை……
- எலிகளிடமிருந்து கோவணத்தை பாதுகாப்பது எப்படி ?
- புல்லின் நிறம் நீலம்..
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்
ஒரு ஊருலஒரு முனிவர் இருந்தாரு.ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் ”தெரியலயேப்பா’ன்னு”ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லணும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது. அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.
மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம்.
இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன’ன்னு கேட்டாரு.,
அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு.
அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,”ஏம்பா உன் கருத்து என்னன்னு?
ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன், ” இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.,
இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”. ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.
கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு அவன்,”தெரியலயே சாமின்னு”, சொன்னான்.
இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிது.
நீதி:
நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம்.
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.
புல்லின் நிறம் நீலம்
ஒரு காட்டில், ஒரு கழுதைக்கும் புலிக்கும் வாக்குவாதம்.
கழுதை சொன்னது: புல்லின் நிறம் நீலம் என்று. புலி சொன்னது பச்சை என்று. வாக்குவாதம் முற்றி யாரும் யாரையும் சமாதானப்படுத்த முடியவில்லை.
அப்போது இரண்டு விலங்குகளும் சிங்கராஜாவிடம் சென்றன. சென்ற உடனே, யாரும் பேசும் முன், கழுதை “நான் புல்லின் நிறம், நீலம் என்று சொல்கிறேன்.. இந்த முட்டாள் புலி, பச்சை என்கிறது.” என்று கத்த ஆரம்பித்து விட்டது.
உடனே சிங்கராஜா, புலியை சிறைக்கு அனுப்பி தண்டனை கொடுத்தது. கழுதை, மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றது.
பின்னர், புலி சிங்கராஜாவை சந்தித்த போது, நடந்த உரையாடல்:
புலி: சிங்கராஜா, புல்லின் நிறம் பச்சை தானே?
சிங்கராஜா: ஆம்
புலி: பின்னர், சரியாக சொன்ன எனக்கு ஏன் தண்டனை கொடுத்தீர்கள்?
நீதி:
சிங்கராஜா: உனக்கு சரியாக சொன்னதற்காக தண்டனை கொடுக்கவில்லை. நீ ஒரு முறை சொல்லி இருக்கலாம், அல்லது இரண்டு முறை சொல்லி இருக்கலாம். அதை விட்டு விட்டு, இந்த அற்பமான விசயத்திற்காக, ஒரு முட்டாள் கழுதையுடன் தர்க்கம் செய்து, இங்கு வரை வந்து, என் நேரத்தையும், உன் நேரத்தையும் வீணடித்து இருக்கிறாயே.. அந்த முட்டாள்தனத்திற்கு தான்!!
தூணில் கட்டபட்ட பூனை
ஆதி காலத்தில் குரு ஒருவர், தம் நண்பர் வீட்டில் பூனை குட்டி இருப்பதை பார்த்து அவரிடம் ஒரு குட்டி பூனையை வாங்கி வளர்த்து வந்தார்.
அது குறும்புக்கார பூனையாக போனது எனவே, தினமும் போதனை செய்யும் போது பூனை இடையே வந்து தொந்தரவு செய்தது.
அவர் சீடர்களுக்கு கற்றுகுடுக்கும்போது பூனை தொந்தரவு செய்யாமல் இருக்க பூனையை ஒரு தூணில் கட்டி பக்கத்தில் பால் வைத்துவிடுவார். அதுவும் சமத்தாக தொந்தரவு செய்யாமல் இருக்கும்.
சிறிது காலம் சென்றவுடன் குரு இறந்து விட்டார். அவரது சீடர்களில் ஒருவர் புதிய குருவாக வந்து விட்டார். அவரும் அவரது குருவைப் போலவே அந்த பூனையை தூணில் கட்டிவிட்டு சீடர்களுக்கு பாடம் எடுத்து வந்தார்.
சிறிது காலம் கழித்து புதிதாக ஒருவர் சீடராக வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த சிறிது காலத்திற்கு பிறகு அந்த புதிய குரு இறந்து விட்டார். புதிதாக வந்த சீடர் எப்படியோ குரு ஆகி விட்டார். அவருக்கு இந்த பூனையை பற்றி எதுவும் தெரியாது. கற்க வேண்டிய எல்லாவற்றையும் முழுதாக கற்கவும் இல்லை. எப்படியோ அவருக்கு தெரிந்ததையும் தோன்றியதையும் வைத்து அவரது சீடர்களுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டு வந்தார்.
இப்போது அந்த பூனை இறந்து விட்டது.
நமது அரைகுறை குரு, பூனை என்பது ஒரு குருவாக இருப்பவருக்கு அவசியம் போலவே அதனால் தான் நமது முந்தைய குருக்களும் பூனை வைத்திருந்தார்கள் மேலும் இதை இந்த தூணில் கட்டவேண்டும் போல, இந்த பூனை இறந்துவிட்டது எனவே நாம் வேறு ஒரு பூனை வாங்கி வந்து இதே தூணில் கட்டி விடுவோம் என நினைத்தார்.
புதிதாக ஒரு பூனை வாங்கி வந்து தூணில் கட்டிவிட்டு போதனை எடுக்க தொடங்கி விட்டார்.
அவருக்கு பின்னால் வந்தவர்களும் பூனையை தூணில் கட்டுவதை தொடர்ந்து விட்டார்கள்…
- ஓஷோ கதைகள் படிக்க இங்கு சொடுக்கவும்
கதையின் நீதி:
எதை செய்தாலும் புரிந்து செய்ய வேண்டும். இந்த கதை வேடிக்கையாக இருந்தாலும், இதிலும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது. சரியாக புரிதல் இல்லாமல் நம் சமூகத்தில் இப்படிதான் ஏராளமான மூடநம்பிக்கைகள் முளைத்து கிடக்கிறது.
மேலும் பல சிறுவர் நூல்கள், நீதி கதைகள் இலவசமாக படிக்க இங்கு சொடுக்கவும்
fiz –
good story