Description
Panchathanthira Kathaigal ebook
பஞ்ச தந்திரக் கதைகள் (Panchathanthira Kathaigal) பொழுது போக்குக் கதைகளாக இருந்தாலும் இது நீதி பற்றிய மூலக் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் கதைகளாகவே இருக்கின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீதியின் ஏதாவது ஒரு விளக்கத்தை அளிப்பதாகவே இருக்கிறது. இதில் அரசநீதியின் மையக்கருத்துக்கள் விலங்குக் கதைகளின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.
பஞ்ச தந்திரக் கதைகள்
பஞ்ச தந்திரக் கதைகளில் ஐந்து முதன்மையான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன:
- நண்பர்களின் இழப்பு – நட்பைப் பிரித்தல்
- நண்பர்களைப் பெறுதல்
- நண்பர்களுக்கிடையேயான வேறுபாடு – பகை நட்டல், அடுத்துக் கெடுத்தல்
- பிரிவு – பெற்றதை இழத்தல்
- ஆராய்ந்து செயல் புரிதல்/அடாவடியான செயல்
ஆசிரியர்: பாவலர் நாரா. நாச்சியப்பன்
என் ஆசை: பாவலர் நாரா. நாச்சியப்பன்
பஞ்ச தந்திரக் கதைகள், உலகப் புகழ்பெற்றவை. கதை என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு எடுத்துக்காட்டாக உள்ள நூல்களிலே ‘பஞ்ச தந்திரக் கதைகள்’ ஒன்றாகும். சிறந்ததுமாகும்.
கதை ஒரு கருத்தை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கு, அது படித்தவுடன் நெஞ்சில் பசுமரத் தாணி போல் பதிவதாக இருக்க வேண்டும்; திரும்பத் திரும்பச் சொன்னாலும் புதுச் சுவை வழங்குவதாயிருக்க வேண்டும். சலிப்புத் தராத தன்மையும் அந்தக் கதைக்கு இருக்க வேண்டும் இந்தச் சிறப்புக்களெல்லாம் பஞ்ச தந்திரக் கதைகளில் அடங்கி யிருக்கின்றன.
தமிழில் பஞ்ச தந்திரக்கதைகள், எத்தனையோ பதிப்புகள் வெளிவந்து விட்டன. பாட்டு வடிவிலும், உரைநடையிலும் பலப் பல பதிப்புக்கள் பலப் பல நூலகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளன. இருந்தும், மீண்டுமொரு முறை வெளி வருவதென்றால், அதில் ஏதாவது புதுமை யிருக்க வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்ப்பது இயல்புதான். வாசகர்கள் ஏமாற வேண்டியதில்லை; இதில் நிறையப் புதுமை இருக்கிறது.
முதலாவதாக இதுவரை வெளிவந்துள்ள எந்தத் தமிழாக்கத்திலும் கையாளப்படாத மிக எளிமையான தமிழ் நடையை நான் கையாண்டிருக்கிறேன். பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்களும் படிக்கவேண்டும் என்ற கருத்தோடு, மிகமிக முயன்று எளிமையாக எழுதியிருக்கிறேன். எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்ல தமிழைக் கை விட்டு விடவில்லை. வேண்டாத சில கதைகளை விலக்கியுமிருக்கிறேன்.
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி அறிவைப் பயன்படுத்துகிறவன் எடுத்த செயலைச் சிறக்கத் தொடுத்து வெற்றி பெற முடிப்பான் என்பதுதான் பஞ்ச தந்திரக் கதைகளில் அமைந்துள்ள கருத்தாகும். முன்னதாகவே ஆழ்ந்து சிந்தித்து வேலை செய்யும் அறிவுடைமைக்கு பஞ்ச தந்திரக் கதைகளின் ஆசிரியர் முதன்மை கொடுத்துச் சிறப்பிக்கிறார். சூழ்நிலைக்கேற்ற சிந்தனையை அடுத்தபடியாக ஆதரிக்கிறார். மேற்போக்காகப் படிக்கும் போது, ‘எப்படியாவது சூழ்ச்சி செய்து. தான் வாழ்ந்தால் போதும்’ என்ற கருத்தை ஆசிரியர் கூறுவதாகத் தோன்றக் கூடும். ஆழ்ந்து கதைகளைப் படித்துப் பார்த்தால்தான், ஆசிரியர் நெறி வழிப்பட்ட சூழ்ச்சி முறைகளை மட்டுமே ஆதரிக்கிறார் என்பது தெளிவாகப் புலப்படும். ஆசிரியர் கொள்கை, யாரும் ஏமாளித்தனமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதேயாகும்.
வருங்காலக் குமுகாயம், சூழ்ச்சிகளுக் காட்படாத-ஏமாறாத-தன்னறிவுள்ள குமுகாயமாக வளர வேண்டுமானால், இதுபோன்ற சூழ்ச்சி முறைக் கதைகளை நிறையப் படிக்க வேண்டும். அறிவு வளர வேண்டும். இதுவே என் ஆசை.
நாரா நாச்சியப்பன்
பஞ்ச தந்திரக் கதைகள்
உள்ளே ..
பஞ்ச தந்திரக் கதைகள்
பஞ்ச தந்திரக் கதைகள் பகுதி 1
- எருதும் சிங்கமும்
- ஆப்பு பிடுங்கிய குரங்கு
- முரசொலி கேட்ட நரி
- தங்களால் தாங்களே கெட்டோர்
- கரும்பாம்பைக் கொன்ற காகம்
- சிங்கத்தைக் கொன்ற முயல்
- கொக்கைக் கொன்ற நண்டு
- மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்
- ஒட்டகத்தைச் கொன்ற காகம்
- கடலை வென்ற சிட்டுக்குருவி
- வாயடக்கம் இல்லாத ஆமை
- மூன்று மீன்கள்
- குரங்குக்கு அறிவு சொன்ன கொக்கு
14 சாட்சி சொன்ன மரம்
- கொக்கு முட்டை தின்ற பாம்பு
- ‘எலி இரும்பைத் தின்றது’
- வாழ்வு தந்த கிழட்டு வாத்து
பஞ்ச தந்திரக் கதைகள்
பகுதி 2 – நட்பு உண்டாக்குதல்
- நான்கு நண்பர்கள்
- புலியால் மாய்ந்த பார்ப்பனன்
- வஞ்சக நரி
- பூனைக்கு இடம் கொடுத்து மாண்ட கழுகு
- ஆசையால் நேர்ந்த அழிவு
பஞ்ச தந்திரக் கதைகள்
பகுதி 3- அடுத்துக் கெடுத்தல்
- கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்
- தன் வாயினால் கெட்ட கழுதை
3. யானையை வென்ற வெள்ளை முயல்
4. மோசம் போன முயலும் மைனாவும்
- ஏமாந்த வேதியன்
- உதவி செய்த கள்ளன்
- அன்பரான அரக்கனும் கள்ளனும்
- இரகசியத்தை வெளியிட்டழிந்த பாம்புகள்
- வேட்டைக்குதவிய புறாக்கள்
- பொன்னாய் எச்சமிடும் பறவை
- சிங்கத்தின் மோசம் அறிந்த நரி
12. உருவம் மாறிய எலி
13. பாம்பு வாகனமேறிய தவளை
பஞ்ச தந்திரக் கதைகள் பகுதி 4
- கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை
- பாம்புடன பழகிய தவளை
- அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை
- குயவன் சேனாபதியானான்
- சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி
- குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு
- சாம பேத தான தண்டம்
- கடிபட்ட நாய்
பஞ்ச தந்திரக் கதைகள்
பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல்
- கீரிப் பிள்ளையைக் கொன்றான்
- பொரிமாக் குடத்திலே இழந்த போகம்
3. கழுமரமேறிய நாவிதன்
- ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு
- தலையில் சுழன்ற சக்கரம்
- மந்திரத்தால் அழிந்தமதிகேடர்
- அறிவுரை மறுத்தழிந்த மீன்கள்
- பாட்டுப் பாடி அடிபட்ட கழுதை
- வரங் கேட்டிறந்த நெசவாளி
- பழிவாங்கிய குரங்கு
- குறுக்கில் பேசித் துன்புற்ற குரங்கு
- தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர்
13. அகப்பட்டவனை விட்டு விட்ட அரக்கன்
- இளைஞனைக் காப்பாற்றிய நண்டு
Reviews
There are no reviews yet.