பெருங்கதை காப்பியம்

(1 customer review)

பெருங்கதை காப்பியம்

பெருங்கதை காப்பியம் PDF

 • பெருங்கதை பகுதி 1 (526 mb) PDF Download
 • பெருங்கதை பகுதி 2 (365 mb) PDF Download

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

பெருங்கதை

குணாட்டியர் என்பவரால் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிரகத்கதா என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டதே பெருங்கதை ஆகும். சோழர் காலத்தைச் சேர்ந்தது. இதை ஆக்கியவர் கொங்குவேளிர் என்பவராவார். இவர் ஒரு சமணர். கௌசாம்பி நாட்டு அரசனின் மகனான உதயணன் என்பவனின் கதையே இது.

கதையமைப்பு

உதயணனின் தாய் கருவுற்று இருந்தபோது, சரபம் என்னும் ஒரு பறவை அரண்மனையில் இருந்து அவளைத் தூக்கிச் சென்று விபுலாசலம் என்னும் இடத்தில் போட்டுவிட்டுச் செல்கிறது. அங்கே உதயணன் பிறக்கிறான். இதிலிருந்து, உதயணனின் வீரதீரச் செயல்கள், அரசனாதல், பல பெண்களை மணத்தல் என்பவற்றினூடாகத் துறவு பூணும்வரையான கதையைக் கூறுகிறது இக்காப்பியம்.

உதயணகுமார காவியம்

இதே உதயணனின் கதையை உதயணகுமார காவியமும் கூறுகிறதெனினும் இலக்கியச் சுவை குன்றியிருத்தற் பொருட்டு அது ‌ஐஞ்சிறுங்காப்பிய வரிசையில் வைக்கப்பட்டது.

நூற்பிரிவு

அகவற்பாவால் பாடப்பட்டுள்ள இந்நூலுள் பின்வரும் ஐந்து காண்டங்கள் உள்ளன.

 1. உஞ்சைக் காண்டம்
 2. இலாவாண காண்டம்
 3. மகத காண்டம்
 4. வத்தவ காண்டம்
 5. நரவாண காண்டம்

பெருங்கதை அல்லது உதயணன் கதை

பெருங்கதை என்ற நூலுக்கு வேறு இரண்டு பெயர்களும் உண்டு அவையாவன.

 • கொங்குவேள் மாக்கதை,
 • உதயணன் கதை

இருப்பினும் பொதுவாக இந்த நூலை பெருங்கதை என்று அழைப்பர்.

கொங்குவேள் மாக்கதை

1924 இல் ஊ.வே சாமிநாத அய்யர் முதன்முதலில் பெருங்கதை நூலை  பதிப்பித்து வெளியிட்டார், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட இரண்டு சுவடிகளில் கொங்குவேள் மாக்கதை என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.  இலக்கணக் கொத்துப் பாயிர உரையில் (ஆசிரியர்: சாமிநாத தேசிகர்) 7-வது நூற்பபவின் ஒரு பகுதி இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு,
கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்து”

மேலும் தனிப்பாடல் ஒன்று

“உருத்தக்க கொங்குவேள் மாக்கதை”

(உரு என்பதன் பொருள் = அழகு)
என கூறியுள்ளது.

கம்ப ராமாயணம், பெருந்தேவனார் பாரதம், வில்லி பாரதம் என்பன போல, நூலசிரியாரின் பெயரையும் சேர்த்துக் கொங்குவேள் மாக்கதை என்று இந்த நூலுக்கு பெயர் வந்து இருக்க வேண்டும்.

உதயணன் கதை

பழைய உரையாசிரியர்களால் உதயணன் கதை என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பெயர் வைத்து அழைத்த உரையாசிரியர்களின் பெயர்கள் இங்கே குறிபிடுகின்றோம்.

 • பேராசிரியர் – தொல். பொருள். செய்யுளியல். 24
 • அடியார்க்கு நல்லார் – சிலம்பு. 4, 3, 41, 42
 • யாப்பருங்கல விருத்தியுரை – நூற்பா. 53, 69
 • வீரசோழிய உரை – யாப்புப்படலம். 9
 • தக்கயாகப் பரணி உரை – தாழிசை 33, 137, 258

இதன்மூலம், பழங்காலத்தில் உதயணன் கதை என்றே பெருங்கதையின் பெயர் இருந்துள்ளது என அறிய முடிகிறது.

பெருங்கதை

பெருங்கதை என்பதற்கும் மாக்கதை என்பதற்கும் தொடர்பு உண்டு. மா என்றால் பெரிய என்பது பொருள். எனவே மாக்கதை என்பதை பெரிய கதை அல்லது பெருங்கதை என்றும் அழைக்கலாம்.

சிலப்பதிகார வேனிற்காதை 23 – 26 அடிகளுக்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதும்போது, பெருங்கதை என இந்த நூலை குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பழங்காலத்திலேயே பெருங்கதை என்ற பெயரும் வழக்கில் இருந்துள்ளதை உணரமுடிக்கின்றது.

பெருங்கதையின் முதல் நூல்கள்

வால்மீகியின் ராமாயணத்தை முதல் நூலாகக் கொண்டு கம்பராமாயணம் எழுதப்பட்டது. வியாச பாரதம் என்ற நூலை வைத்து வில்லிபாரதம் என்ற நூல் எழுதப்பட்டது. இதேபோல் பெருங்கதை முதல் நூல் ஒன்று உண்டு.

ஒரு சில ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, அதாவது இந்த பெருங்கதை காப்பியத்தின் கதை வட இந்தியாவில் நிகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவே இதன் மூலம் பெருங்கதையின் முதல்நூல் வடமொழியில் இருக்க வாய்ப்பு உண்டு என சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த பெருங்கதை காப்பியத்தின் தலைவன் உதயன்’னுடைய வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் பல வடமொழி நூல்கள் உள்ளன. இங்கு அவற்றில் சில நூல்களே குறிப்பிடுகிறேன்.

1) பிருகத் கதா சுலோக சங்கிரகம்
2) பிருகத் கதா மஞ்சரி
3) பிருகத்கதா சரித் சாகரம்
4) உதிதோதய காவியம்
5) இரத்னாவளி
6) பிரிய தர்சிகா
7) சொப்பன வாசவதத்தா
8) பிரதிஞ்ஞா யௌகந்தராயணம்
9) வாசவதத்தா
10) மிருச்ச கடிகம்
11) கருப்பூர மஞ்சரி
12) காதம்பரி

மேலும் உதயகுமாரன் கதையை மையமாகக் கொண்டு தமிழில் இரண்டு நூல்கள் உண்டு அவற்றுள் ஒன்று உதயணகுமார காவியம் அதாவது இந்த பெருங்கதை, மற்றொன்று வச்சத் தொள்ளாயிரம்.

ஆனால் வச்சத் தொள்ளாயிரம் நூல் முழுவதுமாக கிடைக்கவில்லை.
குணாட்டியர் என்பவர் சாதவாகனன் அரசனின் அரசவையில் அமைச்சராக பணியாற்றினார் அப்பொழுது பைசாச மொழியில் பிருகத் கதா எனும் நூலை இயற்றினார். இந்த கதையே உதயணன் கதை. ஒரு சிலர் இந்த காப்பியத்தை பெருங்கதையின் முதல் நூல் என்று கருதுகிறார்கள்.

1 review for பெருங்கதை காப்பியம்

 1. D.Asokan

  அருமை

Add a review

Your email address will not be published. Required fields are marked *