Description
R.சோமசுந்தரத்தின் காதல் கதை .
(An R.S.S love story)
–டான் அசோக்
டான் அசோக் குறிப்பு:
2007ஆம் ஆண்டு முதல் டான் அசோக் என்கிற பெயரில் வலைப்பூ, சமூக வலைதளங்களிலும் மற்றும் உயிர்மை, நக்கீரன், தினமலர், இந்து தமிழ், ஈழமுரசு, எதிரொலி போன்ற அச்சு ஊடகங்களிலும் சமூகம், சமூகநீதி மற்றும் திராவிட இயக்கம் சார்ந்த அரசியல் கட்டுரைகள் எழுதி வரும் இவர், தமிழ் சினிமாவில் அசோக்.R எனும் பெயரில் முழுநேர கதை, திரைக்கதை, வசன எழுத்தாளராகவும் பணியாற்றுகிறார். மதுரையில் பிறந்து வளர்ந்து இப்போது சென்னையில் வசித்து வரும் முதுநிலை பட்டதாரியான இவர் 2009ல் தனது தகவல் தொடர்புத்துறை வேலையை விடுத்து முழுநேர எழுத்தாளரானார். சினிமா மட்டுமல்லாது பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களின் தமிழ் மற்றும் ஆங்கில விளம்பரப்படங்களை எழுதியிருக்கும் டான் அசோக், 2013ல் தனது முதல் நூலான ‘பெரியப்பாவின் காது,’ எனும் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார். பெரியாரை இக்காலத்திற்கேற்ற புதிய பரிமாணத்தில் அணுகிய இவரது ‘பெரியார் 2.0’ எனும் கட்டுரை 2013ஆம் ஆண்டுக்கான நக்கீரன் சின்னக்குத்தூசி விருதைப் பெற்றது. 2018ஆம் ஆண்டில் நாட்டைவிட்டுப் போகிறேன் எனும் பதிவுகள் தொகுப்பையும், நாட்டைவிட்டுப் போகமாட்டேன் எனும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்ட இவரின் முதல் நாவலாக ‘R.சோமசுந்தரத்தின் காதல் கதை’ நூல் கிண்டிலில் வெளிவந்திருக்கிறது.
13ஆம் நம்பர் காதலி
என் பெயர் R.சோமசுந்தரம். தலைப்பைப் பார்த்தவுடன் நான்தான் நாயகன் என நினைத்திருப்பீர்கள். இல்லை. இந்தக் கதைக்கு மட்டுமல்ல எந்தக் கதைக்குமே நாயகன் ஆகும் தகுதி எல்லாம் எனக்குக் கிடையாது. வாழவந்தவர்கள் மத்தியில், வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வந்தவன் நான். வேலைகளை மட்டுமல்ல, வேடிக்கை பார்ப்பதைக் கூட பாதியில் விட்டுவிடுவதுதான் என் பழக்கம். எதையுமே நான் முழுதாக முடித்ததாக வரலாறு இல்லை. வேடிக்கை பார்ப்பவர்களால் கதாநாயகர்களாகவோ, வில்லன்களாகவோ ஆகவே முடியாது, கடைசிவரை எக்ஸ்ட்ராதான் என்பார் என் வாத்தியார் பொன்னுச்சாமி.”பரவாயில்ல சார். சினிமாலகூட எனக்கு
பொன்னுச்சாமி.”பரவாயில்ல ஹீரோயின் பின்னாடி தொப்பையோட ஆடுற எக்ஸ்ட்ரா பொண்ணத்தான் ரொம்பப் புடிக்கும். நான் அப்படியே இருந்துட்டுப் போறேன்,” என்றேன். அதிலிருந்து அவர் என்னிடம் பேசுவதில்லை. சரி. அந்தாளை விடுங்கள். இன்னொரு டெக்னிக்கல் சிக்கலும் உண்டு. நான் சொல்லப்போகும் கதையில் நானே நாயகனாக இருக்க கூச்சமாக இருக்கிறது. ஏனெனில், நாமே நாயகன் என்றால் நம் வாழ்க்கையை அப்படியே சொல்லத் தோன்றாது. நமக்கே தெரியாமல் கொஞ்சம் பில்டப்புகளை ஏற்றுவோம். 25 வயதாகியும் இன்னும் ஒரே ஒரு காதல்கூட செய்ய வக்கில்லாத எனக்குத்தான் தகுதி இல்லையே தவிர, என் அண்ணன் R.சண்முகசுந்தரத்திற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது.
நன்றாகப் படித்தவன். வேலைக்குப் போகிறான். பார்க்கவும் அழகாக இருப்பான். நான் வளர்ந்ததே அவனைப் பார்த்துதான். பார்க் பெஞ்சில் ஆயாசமாக உட்கார்ந்துகொண்டு, நன்றாக ஓடி விளையாடும் மற்ற குழந்தைகளை நிதானமாக வேடிக்கை பார்க்கும் சோம்பேறிக் குழந்தையைப் போல என் அண்ணனைச் சிறுவயதில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறேன். அவனுடைய இந்த 27 வயதில் இதுவரை 12 பெண்களைக் காதலித்திருக்கிறான். அதில் 11 பெண்கள் அவனைக் காதலித்திருக்கிறார்கள். ஒரு பெண் லெஸ்பியன் என தெரிந்தபின் இவனே விட்டுவிட்டான். ஆனால் அந்தப் பெண், இப்படி ஒரு ஆணை காதலிக்கவிடாமல் இயற்கை சதிசெய்துவிட்டதாக மிகவும் வருந்தியிருக்கிறாள். இப்படி தொட்டதெல்லாம் வெற்றி, தொடமுடியாததும் கூட வெற்றி என போய்க்கொண்டிருந்த அண்ணனின் வாழ்க்கையில் 13வதாக வந்தவள்தான் ஹன்னா. அவள் முழுப்பெயர் ஹன்னா ஸ்மைல்ஸ்.
பெயரைப் பார்த்ததும் வெள்ளைக்காரி என நினைத்துவிடாதீர்கள். நான்காவது தெருவில் வசிக்கும் மிகச்சாதாரண பெண்தான். பெந்தகோஸ்தே கிறிஸ்டியன். அண்ணனுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவளுக்கும் அண்ணனை மிகவும் பிடிக்கும். எந்த அளவுக்கு அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பிடிக்கும் என்பதை அவர்களோடு ஒருமுறை வெளியில் சென்றபோது கண்ணால் கண்டிருக்கிறேன். ரோட்டில் போகும் பெண் யாராவது அண்ணனைப் பார்த்தால் அண்ணனின் கைகளை ஹன்னா இறுகப் பிடித்துக்கொள்வாள். இது அந்தப் பெண்களுக்கான சிக்னல். அந்தப் பெண்களை அண்ணன் பார்த்துவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கான சிக்னல் கொலைகொடூரமாக இருக்கும். அண்ணனின் கையின் உட்புறத்தில் கிள்ளிவைப்பாள். கிள்ளி வைப்பதென்றால் செல்லமாக இல்லை, நெயில்கட்டரை வைத்து நல்ல சதை உள்ள பகுதியில் கிள்ளினால் எப்படி இருக்கும்? அதைப் போல! அந்தக் காட்சியைப் பார்க்கும் நமக்குதான் குவெண்டின் டாரண்டினோ படம் பார்த்ததைப் போல பகீரென இருக்கும். ஆனால் அண்ணனோ ஒரு ரொமாண்டிக் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகனைப் போல காதல் பொங்கும் முகத்துடன் நடப்பான்.
Reviews
There are no reviews yet.