Description
இராமாயணக் குறிப்புகள்
பெரியார்
இராமாயணம் நடந்த கதையல்ல!
இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை. அது அறிவுக்குப் பொருத்த மானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேல் லோகம் என்றும் குறிப்பிட்டிருப்பதற்குப் பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேல் லோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரவுக்கு வழியும் இல்லை!
இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால்,தேவர்கள், ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?
தேவலோகத்தில் என்றால், அங்கிருந்த பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்?
எனவே, இப்போது பூதேவர் என்று கூறிக்கொள்ளு ளு பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.
ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே இராமாயணம்!
- இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தமானதோ நடந்த நடப்புகளைக் கொண்டதோ ஆன கதையல்ல என்பதோடு, பெரும் கற்பனைச் சித்திரமும் ஆகும்.
- அதுவும் காட்டுமிராண்டிக் காலத்திய உணர்ச்சியையும் அக்கால ஆரியப் பண்பாடு – பழக்க வழக்கம் முதலிய அவர்களது அன்றைய கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனை இலக்கியமாகும்.
- அது ஒன்றல்ல; பல இராமாயணங்கள் என்னும் பெயரால் நாட்டில் வழங்கிவருகின்றன.
- அவை ஒருவரால் ஏற்பட்டவை அல்ல.
- ஒரே காலத்தில் உண்டாக்கப்பட்டனவும் அல்ல
6.கோர்வை அற்றது.
- முன்னுக்குப் பின் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.
- முன்னுக்குப்பின் பொருத்தமற்ற கற்பனைகள் பல
- மனிதப் பண்பிற்கு ஏற்றதல்ல
- தெய்வீகம் என்பதற்கு ஏற்றதல்ல
Reviews
There are no reviews yet.