Description
சாதி ஒழிப்பு கவிதைகள் Read Online
சாதி ஒழிப்பு கவிதைகள்
ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நாம் தமிழரல்லர் !
பள்ளென்போம்; பறையென்போம்;
நாட்டா ரென்போம்!
பழிதன்னை யெண்ணாமல் வண்ணா
ரென்போம்!
பிள்ளையென்போம்; முதலியென்போம்;
நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர், படையா
ளென்போம்! –
எள்ளல்செய் திழிக்கின்றோம். தாழ்விக்
கின்றோம்!
எண்ணுங்கள், நமைத் தமிழர்
என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது
தொலையு மட்டும்
கூசுங்கள்; நாணுங்கள்;
தமிழ்நாட் டாரே!
“சாதி ஒழிப்பு கவிதைகள்” என்ற நூலின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றி விரிவாக இங்கு படிக்க
Reviews
There are no reviews yet.