Description
சீதாயணம் Read Online
சீதாயணம்
அன்பு நண்பர்களே, “சீதாயணம்” என்ற எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ் மக்கள் இணையம் மூலம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கி றேன். இந்தக் கதையில் வரும் இராமன், சீதா, இராவணன், அனுமான், சுக்ரீவன்,வாலி போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் கடவுள் அவதாரமாகக் கருதுபாவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.
வால்மீகி முனிவரிடம் ஆசிரமத்தில் தன்னுடைய முழுத் துன்பக் கதைகளை சொல்லி, கணவனால் கைவிடப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப கதைகள் தான் இது.
கனிவுடன்,
ஜெயபாரதன், கனடா (ஆசிரியர்)
சீதாயணம் முகவுரை
அன்பு வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமாகக் கருத வேண்டாம். இராமாயணத்தில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகச் சுவைக்காக நிகழ்ச்சிகள் சில இடங்களில் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் சில சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் கடைசி காலப் பெரும் அவலத்தை கூறுகிறது இந்த சீதாயணம்.
இராமாயணம் உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதியிருந்தார் என்பதை இப்போது அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமகாதை பின்னால், பலரால், பலமுறை ஒரு சிலரின் வசதிக்காக மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் ஆனது.
பனை ஓலையில் வால்மீகி எழுதிய இராமாயணம்பல இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மா மேதை இராஜஜி கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை 9 ம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதியவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.
கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார்.
இராமனைக் கடவுளின் அவதாரமாக வால்மீகி சித்திரிக்க வில்லை என்றும், தன்னை ஓர் அவதார தேவனாக இராமன் கருதவில்லை என்றும் இராஜாஜி தன் நூலில் எழுதியுள்ளார்.
இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.
உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை.
உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார்.
இராமன் சீதையை காட்டுக்கு அனுப்பும் (உத்திர காண்டம்) அதிர்ச்சிக் காட்சியை நான் இராமயணத்தின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து அனாதையாக விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகும் மீண்டும் ஏற்றுக் கொல்லப்படாமல் புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து!
இலங்கையில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை (மீட்டதாக சொல்லும்) நான் இராமயணத்தின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!
சீதாயணம்
உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் 10 தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை கோரங்குகளாக சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருத எனக்கு விருப்பம் இல்லை!
சீதையின் பரிதாப மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் முழு காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று இந்துமக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறார்கள்.
காட்டுக்குத் தனித்து துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் (இலவ , குசா) பெற்று, வால்மீகியின் ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
ஆனால் நாம் இந்திய மக்கள் இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகின்றார்கள்!
கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மீண்டும் மானிடனாக மன்னனாக மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது!
இது வால்மீகி அவர்களால் எஉதப்பட்ட இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர சக்திகள் கிடையாது! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் போன்ற யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்!
விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! 10 தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே சித்தரிக்கப்படவில்லை! தென் இந்தியர்களான அனுமான், அங்கதன், சுக்ரீவன் போன்றோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மனிதர்களாக உலவி வருகிறார்கள்.
சீதாயணம்
அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து.
பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு சிலர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு, இன்றைய நவீன அறிவியலில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம்.
இராமாயணத்தில் வரும் அரக்கர்கள் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் 10 தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையாது!
வால்மீகி எழுதிய இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி என்ற வித்தைகள், மாய மந்திரங்கள், 10 தலைகள், வெளியே நீட்டிய கொடிய பெரிய பற்கள், குரங்கு போன்ற வாய்கள், வால்கள் ஆகியவற்றை முழுவதும் வடிகட்டி, அந்த கதா நபர்களை மனிதராக எண்ணி, கதையை சீதையின் பக்கதில் இருந்து நோக்கினால் கிடைப்பதுதான் இந்த சிதயானம்.
அப்படியே இந்த கதையை இரவனின் பார்வையில் இருந்த நோக்கினால் உங்களுக்கு கிடைப்பது புலவர் குழந்தை எழுதிய இராவணக்கவியம்.
https://thamizhdna.org/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-ravana-kaviyam/
இராமாயண கதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா இல்லை தவறா என்ற வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மனித இராமனைத் கடவுளாக உயர்த்தி மாற்றியவருக்கு எப்படி உரிமை இருந்ததோ, அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாக கொண்டுவர எனக்கும் உரிமை உண்டு என்ற துணிச்சலின் அடிப்படையில் இந்த சீதாயானம் நாடகத்தை எழுத தொடங்கினேன்.
Reviews
There are no reviews yet.