Sale!

சீவகசிந்தாமணி பாடல்கள்

(1 customer review)

0.009.00

சீவக சிந்தாமணி பாடல்கள்

FREE DOWNLOAD AZW3/ePub/PDF

Description

சீவகசிந்தாமணி பாடல்கள் Read Online

சீவகசிந்தாமணி பாடல்கள்

சீவக சிந்தாமணி (Sivagasindamani) என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும், மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றி, சீவக சிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது.

இதனால் விருத்தப்பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது.

சீவகசிந்தாமணி கதைச் சுருக்கம்

மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன்.

இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான்.

இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.

சீவகசிந்தாமணி

சீவகன் + சிந்தாமணி – சீவகசிந்தாமணி ஆகிறது. சீவகன், சீவகசிந்தாமணி என்ற பெருங்காப்பியத்தில் பாட்டுடைத் தலைவன்.

சிந்தாமணி என்ற சொல்லுக்கு வேண்டிய யாவும் வழங்கும் ஓர் இரத்தினம், இந்திரன் அணியும் மணி, தெய்வமணி போன்ற பொருள்கள் உள்ளன. சீவகசிந்தாமணி என்பது தலை அணியாக அமையப்பெறுகிறது.

சீவகசிந்தாமணி சமண சமயக்காப்பியம். தமிழ் மரபின் அடிப்படையில் இக்காப்பியம் தோன்றியதாகக் கூறுவதற்கு இயலவில்லை .

இந்நூலாசிரியர் இச்சரிதத்தை இன்ன நூலிலிருந் தெடுத்து யாம் பாடுகின்றேமென்று கூறாமையின், இதற்கு முதனூல் இன்னதென்று இந்நூலைக் கொண்டு நிச்சயிக்கக் கூடவில்லை . ஆயினும் வடமொழியில்

  1. க்ஷத்திர சூடாமணி,
  2. கத்திய சிந்தாமணி,,
  3. ஜீவந்தர நாடகம்,
  4. ஜீவந்தர சம்பு

என நான்கு நூல்கள் உள்ளன. அவைகளெல்லாம் இச்சீவகன் சரிதமே கூறுகின்றன.

மஹாபுராணத்தின் ஒரு பாகத்தும், மணிப்பிரவாளமாகிய ஸ்ரீபுராணத்தின் ஒரு பாகத்தும் இச்சரிதம் கூறப்பட்டுள்ளது. அவற்றிற்கும் இதற்கும் கதையில் வேறுபாடுகளுண்டு.

அந்நூல்களுள் க்ஷத்திர சூடாமணி என்பதை இதற்கு முதனூலென்று சைனர் கூறுகின்றனர் என்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் தன் முதல்பதிப்பின் முன்னுரையிலேயே கூறுகிறார்.

திருத்தக்கதேவர்

சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்க தேவர். இவருடைய காலம், இடம், ஆதரித்த செல்வந்தர் முதலியோர் பெயர்கள் ஏதொன்றும் தமிழ் நூல்களால் வெளிப்படையாகத் தெரிய வில்லை. இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்களின் பதிப்பில் இருந்து அப்படியே தருகிறோம்.

சமண ஆசாரியர்கள் பற்பல சங்கத்தைச் சார்ந்திருந்தனர். ஒவ்வொரு சங்கத்திலும் பல கணங்கள் இரந்தன. இக் கணங்கள் ஒவ்வொன்றும் பல கச்சைகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. தெற்கே புகழுடன் விளங்கியது திரமிள சங்கம். இதில் சிறந்தவிளங்கியது, அருங்கலான்வயம். இந்த அன்வயத் தோர் பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தனர். இத்தகைய திரமிள சங்கத்து அருங்கான்வயத்தைச் சேர்ந்தவரே திருத்தக்கதேவர்.

மிகச் சிறந்த நூலாசிரியர்களின் வரலாறுகளைப் போலவே, திருத்தக்கதேவர் வரலாறும் தெளிவாக அறிய முடியவில்லை. அகத்தியரும், தொல்காப்பியரும் கூறிய இலக்கணம் இந் நூலுக்கும் இலக்கணம் என்பதை மிகச் சிறந்த உரையாசிரி யரான நச்சினார்க்கினியர் தன் உரையில் குறித்துள்ளார்.

சீவக சிந்தாமணி என்னும் ஒப்பற்ற காப்பியத்தைத் திருத்தக்கதேவர்பெருமான் எழுதியது பற்றிய குறிப்புச் சமணிரிடையே பரவலாக வழிவழியாக அறியப்படுகிறது. திருத்தக்கதேவர் சோழர் குடியில் தோன்றியர். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். ஐவகைச் சீலமும் அமையப் பெற்றவர்.

சீவகசிந்தாமணி குறிப்பு

சீவகசிந்தாமணியின் காலம் 9ஆம் நூற்றாண்டு.
சீவகசிந்தாமணி தமிழில் விருத்தப்பாடல்களைக் கொண்டு இயற்றிய பெருங்காப்பியங்களில் முதல்நிலையாக அமைகிறது.

சீவகசிந்தாமணி 3145 விருத்தங்களும் 13 இலம்பகங்களில் அமைகின்றன. இலம்பகம் என்ற உட்பிரிவு தலைப்பு சீவக சிந்தாமணிக்கே உரியது.

உச்சிமேற்புலவர்களுள் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர் சிந்தாமணிக்கு உரையெழுதியுள்ளார். தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் கலித்தொகை, பத்துப்பாட்டு இவற்றிற்கும் காப்பியத்தில் சிந்தாமணிக்கும் மிகச்சிறந்த உரையை எழுதியுள்ளார்.

சீவக சிந்தாமணி மூலமும் உரையும்

நச்சினார்க்கினியர் உரை

நச்சினார்க்கினியர் பொது நிலையில் தமிழ்மொழியும் வடமொழியும் மிகநன்று கற்றவர். தன் வாழ்நாள் முழவதும் உரையெழுதுவதற்காக செலவு செய்தவர்.

வடமொழி செல்வாக்குக் காரணமாக வடமொழிக் கருத்துக் களை எடுத்துக் கூறுவது அவருடைய இயல்பாக அமைகிறது. அவருடைய உரைக்கு ஓர் சான்றாக, 2529ஆம் பாடலில் உரையை எடுத்துக்காட்டலாம்.

இக்கவிமுதலாக வேட்கைபிறவாப் பருவத்தாரும், பிறக் கின்ற பருவத்தாரும், பிறந்த பருவத்தாருமென முன்று கூறாக்கிக் கூறுகின்றார்.

பேதையல்லை மேதையங் குறுமகள் பெதும்பைப் பருவத் தொதுங் கினை புறத்தென (அகம். 7) என்றலின், பேதை வேட்கை பிறவாப் பருவத்தாதலும், பெதும்பை வேட்கை பிறக்கின்ற பருவத்தாதலும் பெற்றாம்.

இவையொழிந்த மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை என்னும் பெயர்கள் வேட்கை பிறந்த பருவத்துப் பெயர்களாம். அன்றியும் அவையும் பல பருவத்தையுணர்த்தும் பெயர்களெனின், அது முதனூல் களிற் கூறாமையானும், சான்றோர் வேறுபாடு கூறாமல் மகளிர்க்குப் பொதுப்பெயராகச் செய்தலானும் தேவர்க்கும் அது கருத்தென்றாம். இனி, உலாவிற்கு அங்கமாகப் புதிய நூல்களிற் கூறிய விதி இதற்காகாமையுணர்க. உள்ளென்று கொள்ள நோக்காது வெள்ளைமை கலந்த நோக்கோடென்க.

வேட்கை பிறவாப் பருவத்தாரும், வேட்கை பிறக்கின்ற பருவத்தாரும், வேட்கை பிறந்த பருவத்தாருமென இங்கே கூறியது போல் மகளிரை மூன்று கூறாக்கி வழங்குநர் வடநூலாரும்.

சீவகசிந்தாமணி மூலமும் உரையும்

சீவகசிந்தாமணி மூலமும் உரையும் PDF வடிவில் இங்கு பதிவிரக்குக.  சீவக சிந்தாமணி மூலமும் உரையும் ebook விரைவில் வெளியிடப்படும்.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

1 review for சீவகசிந்தாமணி பாடல்கள்

  1. sendamare

    I have just started

Add a review

Your email address will not be published. Required fields are marked *