Description
ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சாகசங்கள்
செம்பு மரங்களின் மர்மம்
தமிழாக்கம்: தென்றல் சோமு
முன்னுரை
ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்க ளுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தா ளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதை களுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக் கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய் பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர் கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர் லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர்.
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் என்று சொன்னால் மிகையா காது. 1892 ஆம் ஆண்டு “The Strand Magazine” என்னும் ஆங்கில இதழில் வெளியான ஒரு சிறு கதை இது.
செம்பு மரங்களின் மர்மம்
“கலையை நேசிக்கும் ஒருவனுக்காக” என்றப டியே ஹோல்ம்ஸ் அந்த தினத் தந்தியின் விளம் பரப் பக்கத்தை விட்டெறிந்தார். “கவனம் ஈர்க் காத அற்பமான சில இடங்களில்தான் பேரின் பங்கள் கிடைக்கின்றன பெரும்பாலும். இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள் என்பதை இதுவரை நீங்கள் சேகரித்த வழக் குகளின் ஆவணங்களை ஆராய்ந்து பார்க் கும்போது கவனித்தேன். அது எனக்கொரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அழகுபடுத்தும் பொருட்டு நான் ஈடுபட்டிருந்த புகழ்வாய்ந்த வழக்குகளை விடுத்து அற்பமான வழக்குகளை மட்டுமே எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள் என் பதை நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் அவைகள்தான் எனது பகுத்தறிந்து தர்க்க ரீதியில் தொகுத்து வழங்கும் அறிவிற்கு வேலை கொடுத்தன. அவைகள்தான் எனக்கு மிகவும் பிடித்தமான துறைகளும் கூட”
“இருந்தாலும்” என்று புன்முறுவல் பூத்தவாறே நான் சொன்னேன். “என்னுடைய ஆவணங்கள் வெளி வந்தாலே அதில் ஒரு பரபரப்பு தொற் றிக் கொண்டு விடுகிறது மக்களின் மனங்களில். அந்தக் குற்றத்தில் இருந்து எப்படித்தான் நான் விடுவித்துக் கொள்ளப் போகிறேனோ தெரிய வில்லை.”
“ஒருவகையில், நீங்கள் செய்தது தவறுதான்” என்று அனுமானித்தார். இடுக்கியை வைத்துக் கங்கு ஒன்றை எடுத்துச் செர்ரி மரத்தால் செய்த புகைக் குழாயில் இருக்கும் புகை இலை யைப் பற்ற வைத்தார். அமைதியாய் தியானிக் கும் நேரத்தில் அவர் அப்படிச் செய்வதில்லை. வாதம் செய்யும் நேரத்தில் அப்படிச் செய்வது தான் அவரது இயல்பு. என்னென்ன கார ணங்களினால் என்னென்ன விளைவுகள் ஏற் பட்டன என்று தீவிரமான ஆராய்ச்சிக்கு நேரத் தைச் செலவிடுவதை விடுத்து நீங்கள் உங்க ளது ஒவ்வொரு சொல் தொடருக்கும் வண்ண மிட அல்லது உயிர் கொடுக்க முயற்சி செய்வதில் ஒருவேளை தவறு செய்திருக்கலாம். சொல்லப் போனால் அது ஒன்றுதான் அந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று.”
Reviews
There are no reviews yet.