Description
தமிழகக் கலைகள்
டாக்டர் மா. இராசமாணிக்கனார் M. A, L. T., M.O L., Ph D,
1. கலைகள்
‘கலை’ என்பது யாது?
மனிதனது உள்ளத்தைத் தன் வயமாக்கி, நிரம்பி, அவ்வளவோடு நில்லாமல் வெளிப்படும் ஆற்றலே கலை என்பது.
கூடுதல், குறைதல் இன்றி எப்பொருளும் அள வோடு அமைந்திருப்பின், அந்த அமைப்புக் அந்த அமைப்புக் கண்ணைக் கவருவது இயல்பு. கண்ணையும் கருத்தையும் கவரும் அந்த அமைப்புப் பாராட்டத்தகும் நிலையை அடை கின்றது, அப்பொருள் கலையறிவோடு அமைக்கப்பட்டது என்று நரம் பாராட்டுகின்றோம். எனவே, கலை என்ப அளவும் பொருத்தமும் தன்னுள் அடக்கி நிற்பது; அதே சமயத்தில் உள்ளத்திற்கு உவகை ஊட்டுவது; உள்ளத் தைத் தன்பால் ஈர்ப்பது.
கலையாற்றல் உள்ளத்தை ஈர்க்கும் காவியமாக வெளிப்படலாம்; கண்ணைக் கவரும் ஓவியமாக வெளிப் படலாம்; சிற்பமாக உருக்கொள்ளலாம்; கண்ணையும் கருத்தையும் தன்பால் ஈர்க்கும் அழகிய கட்டடமாக வெளிப்படலாம்; பிறவாகவும் தோன்றிக் காட்சி அளிக்கலாம்.
கலையின் படைப்புக்கள்
நாகர்கத் தொடக்கத்தில் தவழத் தொடங்கிய பழைய கற்கால மனிதன், தான் வாழ்ந்த மலைக்குகையில் இருந்த பாறைகள் மீது தன் கைவண்ணத்தைக் காட்டி னான். அக் கைவண்ணம் சில ஓவியங்களாக இன்றளவும் காட்சி அளிக்கிறது. அவனது உள்ளத்திலிருந்து பொங்கி எழுந்த கலை உணர்வே அவனை ஓவியப் புலவனாக்கியது. சிறிய கத்தியைக் கொண்டு சிறிதளவு மரப்பட்டையைச் சீவி, அச்சீவப்பெற்ற இடத்தில் அழகிய பிள்ளையார் உருவத்தைக் கல்வாக் களிமகன் அமைக்கின்றான். அவனது உள்ளத்திலிருந்து பொங்கி எழும் கலை ஆற்றலே. அவன் கை வழியாகப் புகுந்து அவ்வழகிய சிற்பத்தை அமைக் கின்றது.
அறுபத்து நான்கு கலைகள்
இவ்வாறு மனிதனுள் இருக்கும் கலை ஆற்றலே உலகத்தார் வியக்கும் சித்தன்ன வாசல் ஓவியங்களையும், தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்களையும் உண்டாக்கியது; கிரேக்க நாட்டுச் சிற்பங்களையும், காந்தாரச் சிற்பங்களையும், கண்ணையும் கருத்தையும் கவரும் தென் னிந்தியச் சிற்பங்களையும், சாஞ்சி, அமராவதி முதலிய இடங்களில் உள்ள பௌத்த சிற்பங்களையும் படைத்தது; விழித்த கண் விழித்தபடி பார்க்கத்தக்க பேரெழில் படைத்த த்த தாஜ்மஹால் என்னும் கவினுறு கட்டடத்தை உண்டாக்கியது; மனத்திற்கு இன்பத்தை ஊட்டும் மலர்ச் சோலைகளையும், பூங்காக்களையும் அமைக்கின்றது; ‘உலக அதிசயங்கள்’ என்று சொல்லத்தகும் அரிய படைப்புக் களைப் படைத்தது. அம்மம்ம கலையாற்றலின் திறத்தை உள்ளவாறு எடுத்துக் கூறுவது அரிதினும் அரிது!
சுலைகள்
சிறந்த சொற்பொழிவாளன் தான் பேச விரும்பும் பொருளைக் கேட்போர் எளிதில் புரிந்து பயன் பெறும் வகையில் முறைப்படுத்தி, இடத்திற்கு ஏற்ப, குரலைத் தாழ்த்தியும் உயர்த்தியும் சமப்படுத்தியும், பொருளுக்கு ஏற்ற உணர்ச்சிகளைக் காட்டியும் அளந்து பேசினால், அவன் ‘சிறந்த பேச்சாளன்’ என்று பாராட்டப்படுவான். ‘அவன் கலையறிவோடு பேசினான்” என்று அறிஞர் அவனைப் பாராட்டுவர். இதனைப் பேச்சுக்கலை என்று சொல்லலாம். இவ்வாறு ஒவ்வொரு செயலும் நெறி தவறாமல், முறை தவறாமல், செம்மையாகச் செய்யப்படுமாயின், கலைத் தன்மையை அடைகின்றது என்பது அறிஞர் கருத்து பேச்சு முதலிய ஒவ்வொன்றிலும் கலை உணர்வைக் கண்ட நம் முன்னோர், கலையை அறுபத்து நான்கு வகையாகப் பிரித்தனர்.
வடமொழியில் காம சூத்திரத்தை எழுதிய வாத்ஸ்யா யனர் அறுபத்து நான்கு கலைகளின் பெயர்களைக் குறிப் பிட்டுள்ளார். புத்தர் வரலாற்றைக் கூறும் லலித விஸ்தரம் என்னும் நூலிலும், சமண நூல்களிலும், இந்து நூல் களிலும் அறுபத்து நான்கு கலைகளின் பெயர்கள் காணப்
படுகின்றன. சமணர் நூல்களில் ஆடவர் கலைகள் எழுபத்திரண்டு என்றும், பெண்களுக்குரிய அறுபத்து நான்கு என்றும் கூறப்பட்டுள்ளன்.
1.ஆடல், 2. பாடல்,3. இசைக் கருவிகள், 4. வீணை, தமரு-வாத்தியம், 5. ஓவியம், 6. கவிதை, 7.நிகண்டு, யாப்பு, 9. அணி இலக்கணம், 10. நாடகம் ஆடுதல், 11. செய்யுளின் ஓரடியைக் கொண்டு மற்ற அடிகளை நிரப்பிப் புதிய செய்யுள் செய்தல், 12. போட் டியில் ஒருவர் சொல்லும் செய்யுளின் இறுதி எழுத்தில் தொடங்கும் வேறொரு செய்யுளைச் சொல்லுதல், 13. புதிர் போல் அமைந்த பாக்களைச் செய்தல்,14.எளிதில் ஒலிக்க முடியாத கடினம் அமைந்த பாக்களைப் படித்தல், 15.மறை பொருளாகச்செய்யுளில் பொருள்களை அமைக்கும் புதிர்வகை, 16. பிறரை ஏமாற்றுவதற்கான செய்யுள் செய்தல், 17. பல நாட்டு மொழிகளைக் கற்றல், 18. கீழோர் மொழிகளை அறிதல், 19. நூல்களை அழகாகவும் தெளிவாகவும் படித்தல், 20. முன்பு படிக்காத நூலை ஒரு வருடன் கூடிப் படிக்கும் திறமை, 21. மனத்தில் ஒரு செய்யுளை வைத்துக்கொண்டு சில குறிப்புக்களை மட்டும் ஒருவர் தர, மற்றவர் அச்செய்யுளைச் சொல்லுதல், 22. மனப்பாடம் செய்வதற்குரிய முறைகள், 23. மனையடி சாத்திரம், 24. தச்சுக்கலை, 25. பருவங்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பத் தரையை மாற்றி அமைத்துக் கொள்வது, 26. தோட்டக் கலை, 27.அரிசி முதலியவற்றால் ஆன கோலங்கள், 28. பலவகைத் தின்பண்டங்களைத் தயாரிப்பது 29. பலவகைக் குடி நீர்களைத் தயாரிப்பது, 30.நூல் நெசவும் தையலும், 81. பிரம்பு பின்னல், 32. பூ வேலைகள், 33. மாலை கட்டுதல், 34.தலைக்கொண்டை முடிச்சு அலங்காரங்கள், 35. உடை அலங்காரம், 30. காதணிகள், 37. வாசனைப் பொருள்கள், 38.நகைகள், 39. உடம்பு பிடிப்பது, தலை மயிரைக் கோதிவிடுவது, 40.உதட்டிற்கு வண்ணம் தீட்டுவது,
Reviews
There are no reviews yet.