Description
வள்ளலாரும் அருட்பாவும்
கி.ஆ.பெ.விசுவநாதம்.
அணிந்துரை
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிச் ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதையுலகிலும் பெரும் புரட்சி செய்தவர் வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள் ஆவர். அன்றாட வாழ்வில் அவதிப்பட்டு நிற்கும் மக்களின் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தியிருக்கின்றார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்’ வாடினார். சமுதாயத்தில் மலிந்து போயிருந்த கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக வேண்டும்’ என்று கடுமையாகச் சாடினார். நலிதரு சிறு தெய்வங்களுக்கு முன் வாயில்லாத சீவராசிகளாம் ஆடு, கோழி முதலியன பலியிடப்படுவதைக் கண்டும் உளம் கொதித்தார். வலைஞர் வலைகொண்டு மீன்பிடிச்சு நீர் நிலை நோக்கிச் சென்ற போதுகூட அவர் உள்ளம் திடுக் கிட்டுத் துடித்தது, வறுமையால் வாடும் மக்களின் பசிப் பிணியினைத் தீர்ப்பதற்கு வழிகாண வேண்டுமென்று கருதினார். உண்மைத் துறவியான அவர். வடலூரில் சத்திய தருமச்சாலையினை அமைத்து ‘பசி’ என்று வந்த ஏழை எளியவர்க்குப் ‘பு? என்று கூறி அன்னமிட்டார். சாதிச் சண்டையிலும், கோத்திரக் குப்பையிலும், சமயச் சழக்கிலும் ஆழ்ந்து கிடந்து மக்களைக் கரையேற்றிவிட சத்திய சன்மார்க்க சங்கம் கண்டார்.
தமிழ்க் கவிதையுலகிலும் அவர் செய்த புரட்சி மகத் தானது. ஏறத்தாழ ஆறாயிரம் CUT LA, GÜ DE SIN GIT இயற்றிய அவர், ஆன்மநேய ஒருமைப்பாட்டி வலியுறுத்தினார். எல்லோரும் இனிது வாழவேண்டும் என்று அவர் கொண்ட கோட்பாடு உலகளாவிய உயர்ந்த கோட்பாடு ஆகும். அஃது யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கவியன் பூங்குன்றனார் வழியில் வந்த – உலகத்தையெல்லாம் ஒன்றாக இணைக்கக்கூடிய உயரிய பண்பாடாகும். நாடெல்லாம் வாழக் கேடொன்றுமில்வை’ என்று கண்ட அவர், சமரச சன்மார்க்கம் என்னுங் கொள்நையினை வலியுறுத்தினார். இவ்வுலகிலே வாழவேண்டிய நெறியில் வகையுடன் வாழ்ந்தால் “மரணமிலாப் பெருவாழ்வு” கிட்டும் என உறுதியாக அவர் நம்பினார். ‘உயிரிரக்கம்’ என்பதே அவர் உயிர்க்கொள்கையாக இருந்தது. ‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்து மரபில்’ ஒருவராய் வந்த அவர், ஒருமையுடன் இறைவன் திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவை வேண்டினார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாது உத்தமர்தம் உறவை நாடினார். இவ்வாறு வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் உண்மை தெளிந்து உணர்ந்த ஞானியாக அவர் வீறுடன் விளங்கினார்.
இத்தகைய சான்றோரைக் குறித்து 1980-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 9, 10 தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி. விசுவநாதம் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு இப் பொழுது நூல் வடிவில் வெளிவருகிறது. திருச்சி தந்த சிறந்த பெரியோர்களில் ஒருவர் நம் முத்தமிழ்க் காவலர் ஆவர். அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும், தமிழ் உலகிலும் அவர்கள் ஆற்றிய பணிகள் பல ஆயிரம் ஆயிரம் மேடைகள் ஏறி, அரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த சொற்பொழிவாளராகவும், எளிய தமிழில் இனிய முறையில் பல அரிய நூல்களை எழுதிய ஆசிரியராகவும் விளங்கும் இவர்கள், ஆயிரம் பிறை கண்ட அண்ணலார் ஆவர், தமிழ்மொழிக்கும். தமிழிணத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் தக்க வகையில் தொண்டாற்றிவரும் இப் பெரியாரை வைணவ மரபில் வாழ்த்தப் பெறுவது போல், இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்’ என வாழ்த்துகிறேன். இச்சிறிய- ஆனால் சீரிய நூலினைத் தமிழ்கூறு நல்லுலகம் ஏற்றுப் போற்றுவதாக, வாழ்க நூலாசிரியர் முத்தமிழ்க் காவலரி! வளர்க அவர்தம் தொண்டு!
ஜி. ஆர். தாமோதரன்
சென்னை -5 26-11-802
Reviews
There are no reviews yet.