Description
வங்கச் சிறுகதைகள் Read Online
வங்கச் சிறுகதைகள்
நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக , இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் “ஆதான் -பிரதான் ” என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர் . அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு , நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் , சமூகம் இவற்றின் சித்திரம் இந்தத் தொகுப்பில் கிடைக்கும் ,
வங்கச் சிறுகதைத் துறையில் முதற்பெருங் கலைஞர் ரவீந்திரநாத் தாகூர் அவரது கையில்தான் சிறுகதை உயிர் பெற்றது , வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றது . சிறுகதையின் பல்வேறு அம்சங்களிலும் அவரது கலைத்திறன் ஒளிர்கிறது – காதல் , இயற்கை , சமூகப் பிரச்சினைகள் , தத்துவம் , காவியத்தன்மை , புனைவியல் , வரலாறு , கேலி போன்ற பல துறைகளிலும் அவர் அனாயசமாக நடமாடினார். 1890 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டுவரை ஓர் அரை நூற்றாண்டுக் காலம் அவர் சிறுகதைகள் எழுதினார்.
Reviews
There are no reviews yet.