Description
விலைவாசி உயர்வும் தி. மு. க. போராட்டமும்
முன்னுரை
விலைவாசி உயர்வு என்பது சகல மக்களையும் பாதிக்கும் பிரச்சினை. தமிழ்நாடுரீதியாக மட்டுமன்றி அகில இந்தியரீதியாக வும் தீர்வு காணப்படவேண்டிய முக்கிய பிரச்சினை.
இந்தப் பிரச்சினையை ஆளும் கட்சியினர் எவ்விதம் சரியான கண்ணோட்டத்தோடு பார்க்கத் தவறிவிட்டனர்? எவ்விதம் இதற் குத் தகுந்த,உகந்த பரிகாரம் காணத் தவறிவிட்டனர்?
இந்தப் பிரச்சினையை கம்யூனிஸ்ட் கட்சி எப்படிப் பார்க் கிறது? இதற்கு அது கூறும் பரிகாரங்கள் என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 50 இடங்களைப் பெறும் வாய்ப் பைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தி. மு. க எவ்வாறு இந்த மக்கள் பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதன் தலைமையின் குறுகிய தன்னலப்போக்குக் காரணமாக சந்தர்ப் பத்தை வீணாக்கிவிட்டது?
இவற்றைப்பற்றியெல்லாம் தீர்க்கமாக விவாதித்து அண்மை யில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக நிர்வாகக் குழு ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அத்தீர்மானமே இங்கு புத்தக வடிவில் தமிழ் மக்கள் முன்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இப்பிரச்சினையைத் தீர்க்க மார்க்கம் என்ன என்பதறியாது மக்கள் தவித்து நிற்கும் வேளையில் இச் சிறுபிரசுரம் அவர்களுக்கு வழிகாட்ட மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
தமிழ்நாடு கவுன்சில்.
விலைவாசி உயர்வும் தி. மு. க. போராட்டமும்
விலைவாசிகள் மேலும் மேலும் உயர்ந்துவருவதையும், அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதையும் கண்டு கம்யூனிஸ்டுக் கட்சி யின் தமிழ்நாடு நிர்வாகக் கமிட்டி ஆழ்ந்த கவலைப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மக்கள் அன்றாடம் உபயோ கிக்கும் எண்ணெய், புளி, பருப்பு, மிளகாய் முதலிய பல பொருள்களின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
தேர்தல் காலத்தில் முதலமைச்சர் காமராஜர் உள்பட பல மந்திரிகள் விலைவாசி ஏற்றத்தினால் மக்கள் படும் கஷ்டங் களைக் கண்டு “கண்ணீர்” வடித்தனர். இந்தக் கஷ்டங் களைப் போக்குவதற்காக விலைவாசிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய உருப்படியான நடவடிக்கைகள், மீண்டும் அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால், எடுப்பதாக வாக்குறுதி அளித் தனர்.
ஆனால் தேர்தல் முடிந்தவுடன், இவ்வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் ஆத்திரத்தைச் சமாளிப்பதற்காக வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் விலை வாசி உயர்வைத் தவிர்க்கமுடியாது என்று மந்திரிகள் பிரச் சாரம் செய்து வருகின்றனர்,
Reviews
There are no reviews yet.