
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்றிய இராவண காவிய சிறப்புப் பாயிரம்
பாவண மல்குமி ராவண காவியம்
நாவண மல்கிய நல்லா சிரியனும்
நலமலி ஓல வலசுவாழ் முத்துச்
சாமிசின் னம்மை காமுறு செல்வ
மைந்தனும் ஆய செந்தமிழ்க் குழந்தை
செப்பினான் அறிவுல கொப்பு மாறே.
இராவண காவியம் எனுமிது தமிழகத்
திராவிடம் இலையெனத் திராவிடர் புரிக.
ஆக்கியோன் குழந்தையும் போக்கறு பனுவலும்
ஆழிசூ ழுலகில் என்றும்
வாழிய நன்றே வாழிய நன்றே.

தொடர்புடைய பதிவுகள்
- இராவண காவியம் எதற்கு? ஏன் ?
- இராவண காவியம் – அறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை
- இராவண காவியம்; கலைஞர் கருணாநிதி ஆராய்ச்சி முன்னுரை
- இராவண காவியச் சிறப்பு
- இராவண காவியம் தலைவர்களின் பரிந்துரைகள்
- இராவண காவியம் eBook
- புலவர் குழந்தை வாழ்க்கை வரலாறு
Share this:
Related
SaveSavedRemoved 0