Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

55. இடங்கழி நாயனார்

இவ்வடியார். கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசர். அவர் சிவபெருமானிடம் மிகவும் உறுதியான பக்தி கொண்டிருந்தார் . சைவ ஆகமங்களின்படிச் சிவன் கோயில்கள் எல்லாவற்றிலும் வழிபாடுகள் நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை அவர் செய்தார். அதே ஊரில் மகேசுவர பூசை செய்யும் இன்னொரு சிவபக்தர் இருந்தார். தம பூசையைத் தொடர்ந்து செய்து சிவபக்தர்களுக்குத் திருவமுது படைக்க முடியாதவாறு அவர் வறுமையுற்றார். ஆதலால் ஒரு நாள் இரவில் அவர் இடங்கழி நாயனாருடைய , நெற்கூடுகள் நிறைந்த கொட்டகாரத்தில் துழைந்து நெல்லைக் களவாடத் தொடங்கினார். காவலர் துவரைக் கையும் களவுமாகப் பிடித்து அரசரிடம் அழைத்துச் சென்றார். சிவபக்தர் க்ளவாடியதன் நோக்கம் சிவனடியார்களுக்குத் திருவமுது படைப்பதேயாகும் என்று விசாரித்தறிந்த அரசர். அவரை விடுதலை செய்தார்.

இந்நிகழ்ச்சி அரசருடைய கண்களைத் திறந்து விட்டது . உடைமை எதுவும் தமக்கு உரியதல்ல என் பதையும், தம்மிடம் உள்ள எல்லாச் செல்வங்களுக்கும் உரிமை உள்ளவர்கள் சிவபெருமானும், சிவனடியார் களும் மட்டுமே என்பதையும் அரசா உணர்ந்து கொண்டார். எனவே அவர் சிவனடியார்கள் அனை வருக்கும் தம் அரண்மனையிலும், நெல் கொட்டகாரக் திலும் நுழையவும். அவர்கள் விரும்பிய பொருள்கள் எவற்றையும் கொண்டுபோகவும் அனுமதி தந்தார். இவ்வாறு அவர் சைவ சமயத்தைப் பரப்புவதில் தமக் கருந்த ஊக்கத்தைப் புலப்படுத்தினார். இவ்வாறு அவர் சிவபெருமானுடைய திருவருளைப் பெற்றார்.

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.