Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

57. கோட்புலி நாயனார்

இவ்வடியார் வேளாண் குடியில் தோன்றியவர். அவர் சோழ மன்னரின் படைத்தலைவர். சிவபெரு மானிடம் அவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் பக்தியும் அறநெறிச் சிந்தையும் வாய்ந்தவர். தம் வருவாயைக் கொண்டு நெல்லை வாங்கி இறைவனின் நைவேத்தியத்திற்காகச் சிவன் கோயில்களுக்குத் தருவது அவருடைய வழக்கம். அவர் நீண்டகாலமாக இப்புண்ணியத்தைச் செய்து வந்தார்.

ஒருமுறை அவர் போர்க்கடமையின்மேல் செல்ல நேர்ந்தது. கோயில் உபயோகத்துக்காக அவர் போதிய அளவு நெல்லை இருப்பில் வைத்துத் தம் உறவினர்களிடம் ஒப்படைத்து அது இறைவனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டியதென்றும், அவர்கள் தம் சொந்த உபயோகத்துக்காக அதைத் தொடக்கூடா தென்றும் தெளிவான கட்டளை தந்தார். அவர் இல்லாத போது, பஞ்சம் ஏற்பட்டது. அவருடைய உறவினர்கள் உணவில்லாமல் துன்புற்றார்கள். ஆதலால், அவர்கள் இறைவனுக்குரிய நெல்லில் கை வைத்தார்கள்

தங்கள் பசியைத் தணித்துக்கொண்டார்கள். நாயனார் தம். கடமையை நிறைவேற்றித் திரும்பியபோது தம் உறவினர்களின் செயலைப் பற்றிக் கேள்வியார் அவர்களிடம் அவர் மிகுந்த எரிச்சலடைந்தார். இத் குற்றத்துக்காக அவர் அவர்களைத் தம் இல்லத்துத்து அழைத்துத் தம் பெற்றோர்களையும் சேர்த்துத் கொன்றார். இறைவனிடம் அவர் கொண்டிருந்த பேரன்பு, தம் நெருங்கிய உறவினர்களிடமும், திருத்து மிகவும் வேண்டியவர்களிடமும் கொண்டிருந்த அன்பை முற்றிலும் மறைத்துவிட்டது. இறைவன் உடனே அவர் முன்னே தோன்றி, நல்லாசிகள் வழங்கி அவரால் கொல்லப்பட்ட உறவினர்கள், பெற்றோர்கள் ஆகிய அனை வருக்கும் ஆசி தந்து தம் சிவபுரத்துக்கு அழைத்துக்கொண்டார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.