பூசலார் தொண்டை மண்டலத்தில் திருநின்றவூரில் வாழ்ந்த ஓர் அந்தணர். இறைவனுக்குச் செய்யும் அகவழி பாட்டில் அவர் தலைசிறந்து நின்றார் . புறம்பே சடங்குகளால் செய்யும் வழிபாட்டைக் காட்டி லும். அகத்தே செய்யும் மனவழிபாடு ஆயிரம் மடங்கு சிறந்தது. மன வழிபாடு சமாதி நிலைக்கு (மிகவுயர்ந்த - உள்ளுணர்வு நிலை அழைத்துச் செல்லுகிறது; அதனால் தன்னை உணரும் தெய்வீக நிலை ஏற்படுகிறது. அவர் சிவபெருமானுக்கு ஒரு கோயிலைக் கட்டவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் அதற்கான நிதி வசதி அவரிடம் இருக்கவில்லை. ஆதலால் அவர் கோயிலைக் கட்டுவதற்கு வேண்டிய பொருள்கள் யாவற்றையும் மனத்திலேயே சேகரித்தார். மங்கலம் நிறைந்த நன்னாள் ஒன்றில் அவர் அடிக்கல் நாட்டினார். அவர் கோயிலை எழுப்பி இறைவன் திருவுருவத்தைக் கருவறையில் நிலைபெறச் செய்யவும் மங்கல நாள் குறித்து வைத்தார்
காடவர் அரசர், தாமும் சிவபெருமான் மீது கொண்ட மிகவுயர்ந்த பக்தியினால் காஞ்சியில் அழகான பெருங்கோயிலை நிறுவினார். தற்செயலாக, அவரும் பூசலார் தம் மனத்தில் குறித்த அதே நாளையே இறை வன் திருவுருவத்தைக் கருவறையில் நிலை நிறுத்தக் குறித்து வைத்தார். பூசலாருடைய உயர்ந்த பக்தியை அரசருக்குக் காட்ட இறைவன் விரும்பினான். என்வே இறைவன் அரசருடைய கனவில் தோன்றித் தாம் திருநின்றவூரில் தம் பக்தர் கட்டியுள்ள கோயிலில் அந்த நாளில் இருக்க விரும்புவதாள். அரசர் கருவறை யில் இறைவன் திருவுருவை நிலைநிறுத்தும் நாளைத் தள்ளிவைத்துக் கொள்ளுமாறு தெரிவித்தார். அரசர் விழித்தெழுந்தவுடன் இறைவன் தெரிவித்த பக்தரை நேரில் காணவும் அவர் கட்டிய பெருங்கோயிலைக் கண்டு வழிபடவும் பெருவிருப்பம் கொண்டார், அக்கோயில் கம் கோயிலைக்காட்டிலும் மிகவும் பெருமை பெற்றதாக இருக்கும் என்றும் அவர் நினைத்தார்.
அரசர் திருநின்றவூருக்கு வந்து கோயிலைத் தேடி தை எங்குமே எத்தகைய கோயிலும் காணப்பட இலகன் . பின்னர் அரசர் பூசலாரைப்பற்றி விசாரித்தார். அவர் பூசலாருடைய இல்லத்திற்குச் சென்று துவர்பால் வணுகினார். அரசருடைய கனவைப்பற்றிக் கேட்ட பசலார் அதிர்ச்சியுற்றுச் செயலிழந்து நின்றார். விரைவில் அவர் உணர்வு திரும்பி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார். அவர் பின் வருமாறு நினைத்தார். 'இறை வனுடைய கருணையும் அன்பும் என்னே! நான் ஒரு அற்ப உ யி தான்! எனினும் அவர் என் மனக் கோயிலைத் தம் சிவபுரமாக ஏற்றுக்கொள்ள இசைந்தார் . நான் உண்மையில் பேரின்பம் பெற்றேன்! கோயில் தம் மனத்தில் மட்டுமே இருப்பதாக அவர் அரசரிடம் தெரிவித்தார். அரசர் இதைக்கேட்டு ஆச்சரியமடைந்தார். பூசலாருடைய பக்தியைப் பாராட்டி அரசர் அவருடைய திருவடிகளில் பணிந்து வணங்கினார். பூசலார் இறைவனைத் தம் மனக்கோயிலில் எழுந்தருளச் செய்து வழிபாட்டைத் தொடர்ந்து செய்து முடிவில் சிவபுரம் அடைந்தார்.