Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

59. நேச நாயனார்

இவ்வடியார் காம்பிலி என்னும் ஊரைச் சேர்ந்தவர் அவர் ஒரு நெசவாளி. இறைவனிடத்தும் அடியார் களிடத்தும் அவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இறைவனுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளில் அவருடைய மனம் நன்கு பதிந்திருந்தது. அவருடைய வாய் எப்போதும் திருஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது. அவருடைய கைகள் எப்போதும் இறைவனுடைய அடியார்களுக்குப் பணிவிடைகள் செய்வதில் சுறுசுறுப்பாக இருந்தன. இம் மூன்று பண்புகளால் அவர் இறைவனுடைய திருவருளைப் பெற்றார்.

இறைவனுடைய திருநாமத்தின் பெருமைக்கு இங்கே மற்றும் ஓர் உதாரணத்தைப் பார்க்கின்றோம். இறைவனுடைய திருநாமத்தின் பெருமையைப்பற்றி நாம் ஏற்கனவே சிறப்புலி நாயனார் வரலாற்றில் பார்த்தோம். இடையறாது தொடர்ந்து மந்திரத்தை உச்சரித்தால், நாள் முழுதும் மட்டும் அன்று. கனவில் கூட காம் இறைநினைவில் எப்போதும் இருக்க முடிகிறது. அதைப் பயிலும் வழி இதுதான் - (பின்வருமாறு) காலையில் துயில் நீத்தெழுந்தவுடனே அரைமணி நேரம் அமர்ந்திருந்து மந்திரத்தை மனத்தில் உச்சரிக்க வேண்டும். வேலை செய்யும் போதும். இப்பயிற்சி நடைபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒவ்வொரு முறை சில கணங்கள் வேலை. செய்வதை நிறுத்திவைத்து மனத்தளவில் இறைக்காட்சியைக் கண்டு மனத்திலேயே மந்திரத்தை உச்சரிக்கவேண்டும். இப்பயிற்சியில் நிலையாக நிலைபெற்று விட்டால், மற்றவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போதும் அல்லது வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதும் - இல்லை. உறங்கிக்கொண் டிருக்கும்போதும் கூட. மனம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளு தல் இப்போது சாத்தியமாகின்றது பெருமை மிகுந்த இந்த ஜெபயோகத்துடன், நேச நாயனார். இறைவனோடு இரண்டறக்கலக்கும் ஐக்கியப் பயிற்சியையும் செய்து வந்தார். அவர் இறைவனையே நினைத்தார். இறைவனுக் காகவே வாழ்ந்தார். இறைவனுக்காகவே பணிகள் செய்தார்; அவர் இறைவன்பால் மிகவுயர்ந்த பக்தி பூண்டு இறைவனையே நேசித்தார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.